Breaking News
Home / பிற செய்திகள் / திருவள்ளூர் –ஊத்துக்கோட்டை ஆரணியாற்றில் மணல் கடத்தல்… பொன்னையா ஐ.ஏ.எஸ்க்கு என்னாச்சு.. வருவாய்த்துறை –காவல்துறை அதிகாரிகளுக்கு மாமூல்..

திருவள்ளூர் –ஊத்துக்கோட்டை ஆரணியாற்றில் மணல் கடத்தல்… பொன்னையா ஐ.ஏ.எஸ்க்கு என்னாச்சு.. வருவாய்த்துறை –காவல்துறை அதிகாரிகளுக்கு மாமூல்..

திருவள்ளூர் மாவட்டம் பட்டறைபுதூர் ஏரியில் சட்டத்துக்கு புறம்பாக, விதிமுறைகளை மீறி சவுடு மண் அள்ளப்பட்டது.  புகைப்படங்களுடன் செய்தி வெளியிட்டும் மாவட்ட ஆட்சித்தலைவர் பொன்னையா ஐ.ஏ.எஸ் நடவடிக்கை எடுக்கவில்லை.

 திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் ஆரணியாற்றில் கட்டப்பட்டு இருக்கும் பாலத்தின் அருகில் விதிமுறைகளை மீறி, சட்டத்துக்கு புறம்பாக 10,20 அடி ஆழத்துக்கு பொக்லைன் மூலம் தினமும் இரவில் மணல் கடத்தப்படுகிறது. விரைவில் பாலம் பழுதடைந்து விழுந்துவிட வாய்ப்புகள் அதிகம்.

 செயற்பொறியாளர் ஜெயகுமாரி , ஆரணி வடி நில கோட்டம், மாவட்ட ஆட்சித் தலைவர் பொன்னையாவுக்கு 19.02.2021ல் மணல் எடுக்க அனுமதிக்குமாறு எழுதிய கடிதம் மாவட்ட ஆட்சித்தலைவரின்  பார்வைக்கு போனதா என்று  தெரியவில்லை. ஆனால் 19.02.2021, 20.02.2021 இரவு ஒவ்வொரு நாளும்  சுமார் 20 லாரி மணல் அள்ளப்பட்டுள்ளது.

  வழக்கம் போல் ஊத்துக்கோட்டை தாசில்தார், வருவாய் அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கும் மாமூல் கொடுத்துவிட்டதாக மணல் கடத்தல் கும்பல் வெளிப்படையாகவே பேசுகிறார்கள்.

 மாவட்ட ஆட்சித் தலைவர் பொன்னையா ஐ.ஏ.எஸ் வழக்கம் போல், மணல் கடத்தலை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறார்..மேலிடத்து  உத்தரவு என்றால்…பூம்..பூம்..பூம் தான்..

Comments

comments

About mani bharathi

Check Also

திருவள்ளூர் மாவட்டம்.. தூய்மை இந்தியா திட்டமா- டெங்கு கொசுப்பண்ணையா..

திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் குப்பை குவியலைதான் பார்க்க முடிகிறது. குப்பை அள்ளும் நிறுவனங்களிடம்  கமிசன் வாங்க மட்டுமே அதிகாரிகளுக்கு தெரியும். …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *