
நகராட்சி நிர்வாக ஆணையர் கே.பாஸ்கரன் ஐ.ஏ.எஸ், கூடுதல் இயக்குநர் அசோகன் இருவரின் துக்ளக் தார்பார் நிர்வாகத்தால், பல நகராட்சிகளில் நிர்வாகம் முடங்கி போய் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் ஆர்.ஒ.சி. எண். 3199/2020/சி1 தேதி 19.02.2021ல் ஆணையர் பதவி காலியாக உள்ள நகராட்சிகளில் சுகாதார அதிகாரி, மேலாளர்களை பொறுப்பு ஆணையராக நியமித்து வெளியான உத்தரவை பார்த்து, கைக்கொட்டி சிரிக்கிறார்கள்..
- ஜே.ரவி மேலாளர் – பொறுப்பு ஆணையர் பண்ரூட்டி நகராட்சி
- கிருஷ்ணவேணி மேலாளர் – பொறுப்பு ஆணையர் புதுக்கோட்டை நகராட்சி.
- ஜெயம் பெல்லார் மேன் மேலாளர் – பொறுப்பு ஆணையர் குழித்துறை நகராட்சி
- ரவிச்சந்திரன் மேலாளர் – பொறுப்பு ஆணையர் திருவண்ணாமலை நகராட்சி
- ராஜாராம் சுகாதார அதிகாரி – பொறுப்பு ஆணையர் பத்மநாபபுரம் நகராட்சி
- முகமது சாகுல் ஹமீது பொறியாளர் – பொறுப்பு ஆணையர் அருப்புக்கோட்டை நகராட்சி
- நாட்ராயன் சுகாதார அதிகாரி – பொறுப்பு ஆணையர் குளச்சல் நகராட்சி
- உஷாராணி பொறியாளர் – பொறுப்பு ஆணையர் வந்தவாசி நகராட்சி
- ஜெகநாதன் மருத்துவ அதிகாரி – பொறுப்பு ஆணையர் தேவக்கோட்டை நகராட்சி
- பழனிச்சாமி பொறியாளர் – பொறுப்பு ஆணையர் புஞ்சம்புளியம்பட்டி நகராட்சி
1.2.2021(ஆர்.ஒ.சி எண்.3199/2020/சி2)எடப்பாடிநகராட்சிக்கு மேலாளரை பொறுப்பு ஆணையராக நியமித்து முதல் ஆணை வெளியிடப்பட்டது.

சுகாதார அதிகாரிக்கு குப்பை அகற்றுவதிலும், கொரோனாவில் போலி பில் போட மட்டுமே தெரியும். ஆனால் சுகாதார அதிகாரி பொறுப்பு ஆணையராம் கேவலமாக இருக்கிறது.
மருத்துவ அதிகாரி பொறுப்பு ஆணையராக நியமிக்க, தகுதி இருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதே போல் மேலாளர்கள் எப்படி பொறுப்பு ஆணையராக நியமிக்கப்பட்டார்கள் என்று தெரியவில்லை. திருவண்ணாமலை நகராட்சி ஆணையர் ரூ75 இலட்சம் இலஞ்சம் கொடுத்து, மறைமலைநகர் நகராட்சிக்கு மாறுதல் பெற்றார். அப்போதே நகராட்சி ஆணையர் பதவிக்கு வேறு நகராட்சியிலிருந்து ஏன் மாறுதல் செய்யவில்லை..
மேலாளர்கள், சுகாதார அதிகாரிகள் பொறுப்பு ஆணையராக நியமிக்கப்பட்ட நகராட்சிகளில் பொறியாளர்கள் இல்லையா.. பொறியாளர்கள் பதவி காலியாக இருக்கிறதா என்ற கேள்விக்கு பாஸ்கரன் ஐ.ஏ.எஸ், அசோகன் பதில் சொல்லுவார்களா..
நகராட்சி நிர்வாக ஆணையராக பிரகாஷ் ஐ.ஏ.எஸ் பணியாற்றிய போது, ஆர்.ஒ.சி. எண்.9235/2016/சி1 12,8.20216ல் 42 நகராட்சிகளுக்கு மேலாளர்களை பொறுப்பு ஆணையராக நியமித்து உத்தரவு வெளியிட்டார். பிரகாஷ் ஆணையை பார்த்து, அதிர்ச்சியான பொறியாளர்கள் தலா ரூ5 இலட்சம் என சுமார் ரூ2கோடி வசூல் செய்து, அமைச்சரின் நிழல் உதவியாளராக இருந்த பார்த்தீபனிடம் கொடுத்து, அந்த உத்தரவை ரத்து செய்தார்கள்.
இது தொடர்பான புகார் விசாரணை முடிந்து ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்தில் நிலுவையில் உள்ளது.
இதே பாணியில் சுகாதார அதிகாரி, மேலாளர், மருத்து அதிகாரி பொறுப்பு ஆணையராக நியமிக்கப்பட்ட ஆறு நகராட்சிகளிலும் பொறியாளரை பொறுப்பு ஆணையராக நியமிக்க பேரம் நடக்கிறதாம்..
நகராட்சி நிர்வாக ஆணையர் கே.பாஸ்கரன் ஐ.ஏ.எஸ், கூடுதல் இயக்குநர் அசோகன் இருவரும் பூம்..பூம்..பூம்.. தலையாட்டுவதை விட்டுவிட்டு, நிர்வாகத்தை கவனித்தால் நல்லாயிருக்கும்..
2021 மே மாதம் ஆட்சி மாற்றம் ஏற்படும் போது, கே.பாஸ்கரன் ஐ.ஏ.எஸ், அசோகன் இருவரின் செயல்பாடுகளும் கேலிக் கூத்தாகி கைகொட்டி சிரிக்கும் நிலைதான் ஏற்படும்..