Breaking News
Home / பிற செய்திகள் / நகராட்சி நிர்வாக ஆணையரகம்- திருவண்ணாமலை TO மறைமலைநகர் ரூ75இலட்சம்… வே.நவேந்திரன் வாட்ச் அப்பி்ல் ஒப்புதல்..

நகராட்சி நிர்வாக ஆணையரகம்- திருவண்ணாமலை TO மறைமலைநகர் ரூ75இலட்சம்… வே.நவேந்திரன் வாட்ச் அப்பி்ல் ஒப்புதல்..

   திருவண்ணாமலை நகராட்சி ஆணையர் வே.நவேந்திரன், மறைமலைநகர் நகராட்சிக்கு ஆணையராக மாறுதல் பெற கொடுத்த இலஞ்சம் ரூ75 இலட்சம்..

 இதை மக்கள்செய்திமையம் சொல்லவில்லை. வே.நவேந்திரன், தனக்கு நெருக்கமான சக ஆணையர்கள், இணை இயக்குனர்களின் செல்போன் வாட்ச் அப்பில் அனுப்பி உள்ள செய்தியை அப்படியே இங்கு வெளியிட்டு உள்ளோம்.

 ரூ75 இலட்சம் விலை கொடுத்து, மறைமலைநகர் நகராட்சி ஆணையர் பதவியை விலைக்கு வாங்கிய வே.நவேந்திரன் …

  18.02.2021 காலை 11.50க்கு75lakhs..Tv malai to maraimalainagger-transfer-duty joined..

 18.02.2021 காலை 11.51க்கு பணிமாறுதலுக்கு பதவி உயர்வு போல் அன்புடைய சக ஆணையர்கள் மற்றும் மதிப்பிற்குரிய இணை இயக்குனர்கள் வாழ்த்து வழங்கியமை என் மீது கொண்டுள்ள நன்னம்பிக்கையை காட்டுவதாக உணர்கிறேன். எனது பணிக்காலம் முழுவதும் அதனை காப்பற்ற முயல்வேன்… நன்றியுடன் வே.நவேந்திரன்  என்று கூறியுள்ளார். Bold…

 வாட்ச் அப் ஆதாரம் மக்கள்செய்திமையத்திடம் உள்ளது.

  திருவண்ணாமலை நகராட்சியில் ஆணையராக வே.நவேந்திரன், அமைச்சரின் நிழல் உதவியாளர் சரவணனுக்கு நெருக்கமாக இருந்த காரணத்தால், மாவட்ட ஆட்சித்தலைவர்களை மதிக்காமல் செயல்பட்டார்.

 சரவணனை, அமைச்சர் ஒரங்கட்டி, விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்த பிறகு, சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஐ.ஏ.எஸ்யுடன் கூட்டணி அமைத்துவிட்டார். மிஸ்டர் முகப்பேர், பிரகாஷ் ஐ.ஏ.எஸ் கூட்டணி மூலம் ரூ75 இலட்சம் விலை கொடுத்து, மறைமலைநகர் ஆணையர் பதவியை விலைக்கு வாங்கி உள்ளார்.

 18.02.2021 மாலை நகரமைப்பு ஆய்வாளர் ஊழல் மன்னர் செந்தில்குமார்செழியன் உடன், காரில் பவனி வந்தார்.

 ரூ75இலட்சம் கொடுத்து ஆணையர் பதவியை விலைக்கு வாங்கிய, வே.நவேந்திரன் மறைமலைநகரில் ரூ20கோடி கல்லா கட்ட தொடங்கிவிட்டார். இனி பாவம் மறைமலைநகர் மக்கள் தான்..

அது சரி.. இதெல்லாம்.. நகராட்சி நிர்வாக ஆணையர் கே.பாஸ்கரன் ஐ.ஏ.எஸ், கூடுதல் இயக்குநர் அசோகன் இருவருக்கும் தெரியாதா!!!

Comments

comments

About mani bharathi

Check Also

திருவள்ளூர் மாவட்டம்.. தூய்மை இந்தியா திட்டமா- டெங்கு கொசுப்பண்ணையா..

திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் குப்பை குவியலைதான் பார்க்க முடிகிறது. குப்பை அள்ளும் நிறுவனங்களிடம்  கமிசன் வாங்க மட்டுமே அதிகாரிகளுக்கு தெரியும். …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *