
நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் கண்காணிப்பு பொறியாளர் மற்றும் பொறுப்பு தலைமைப் பொறியாளர் திருமாவளவன் உத்தரவின் பேரில், நகராட்சிகளின் மண்டல துணை இயக்குநர்கள் நகராட்சி ஆணையர்களை மிரட்டினார்கள்.
TURIF (TAMIL NADU URBAN ROAD INFRASTRUCTURE FUND) நிதியிலிருந்து எந்த ரோட்டையாவது போடுங்கள்.. போட்ட ரோட்டை காட்டி போலி பில் போடுங்கள், தமிழ்நாடு முழுவதும் நகராட்சிகளில் TURIF நிதிக்கான டெண்டரை 24.02.2021க்குள் முடிக்க வேண்டும். எந்த விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டாம். சட்டத்துக்கு புறம்பாக என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள் என்று வாய் மொழி உத்தரவுகள் பறந்தது.
செங்கல்பட்டு மண்டல துணை இயக்குநர் கருப்பையாராஜா, நகராட்சி ஆணையர்களிடம் வெளிப்படையாக TURIF நிதியை 24.02.2021க்குள் செலவு செய்ய வேண்டும். டூரிப் நிதியில் 20 சதவிகிதம் கமிசன் உடனடியாக கொடுங்கள்..
20 சதவிகிதம் கமிசனில் அமைச்சர் அலுவலத்துக்கு ரூ15சதவிகிதம், கண்காணிப்பு பொறியாளர் கம் பொறுப்பு தலைமைப் பொறியாளர் திருமாவளவனுக்கு 3 சதவிகிதம், எனக்கு 2 சதவிகிதம் என்று மண்டல துணை இயக்குநர்கருப்பையாராஜா நகராட்சி ஆணையர்களிடம் பேசினார்.
நகராட்சி ஆணையர் கழிவு நீர் கால்வாய் கட்ட டெண்டர்விடப்பட்டு, பணி தொடங்கியுள்ளது. இப்போது எப்படி சாலை போடமுடியும் என்றவுடன் கோபத்தில் கழிவு நீர் கால்வாய் பணியை நிறுத்துய்யா.. டூரிப் நிதியில் சாலை போடும் பணிதான் முக்கியம் என்று கொஞ்சம் ஆவேசமாக பேசினார் கருப்பையாராஜா..

TURIF நிதியில் போடாத சாலைக்கு, போலி எம்.புத்தகம் எழுதி பில் போடுங்கள்..எனக்கு வேண்டியது உங்க நகராட்சியில் உள்ல டூரிப் நிதியில் 20சதவிகிதம் கமிசன் என்று மண்டல துண இயக்குநர் கருப்பையா ராஜா பேச்சை கேட்டு பல நகராட்சி ஆணையர்கள் அதிர்ச்சியடைந்தார்கள்..
கருப்பையா ராஜா மண்டல துணை இயக்குநரா அல்லது புரோக்கரா என்று நகராட்சி பொறியாளர்கள் முணு, முணுத்தார்கள்
இதே நிலைதான் தமிழகம் முழுவதும் மண்டல துணை இயக்குநர்கள், கண்காணிப்பு பொறியாளர் திருமாவளவன் பெயரில் நகராட்சி ஆணையர்கள், நகராட்சி பொறியாளர்கள் செல்போனில் மிரட்டப்பட்டார்கள்/மிரட்டப்படுகிறார்கள்.
செங்கல்பட்டு மண்டல துணை இயக்குநர் கருப்பையா ராஜா 20 சதவிகிதம் கமிசனனில் 15 சதவிகிதம் அமைச்சர் அலுவலகத்துக்கு, கண்காணிப்பு பொறியாளர் திருமாவளவனுக்கு 3 சதவிகிதம் கமிசன், எனக்கு 2 சதவிகிதம் கமிசன் என்று செல்போனில் வாட்ச் அப் காலில் பேசியது எந்தவிதத்தில் நியாயம் என்று தெரியவில்லை..
கண்காணிப்பு பொறியாளர் கம் பொறுப்பு தலைமைப் பொறியாளர் திருமாவளவன், மண்டல துணை இயக்குநர் கருப்பையாராஜா மீது நடவடிக்கை எடுக்கவிட்டால், கருப்பையாராஜா பேசியது உண்மையாகிவிடும்..
நகராட்சி நிர்வாக ஆணையரகமா… நகராட்சி நிர்வாக கமிசன் ஆணையரகமா என்ற கேள்வி எழுந்துள்ளது..
பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்ற வரிகள்தான் நினைவுக்குவருகிறது..