
திருவேற்காடு நகராட்சியில் 02.09.2020ல் நடந்த விஜிலென்ஸ் ரெய்டில் நகரமைப்பு அதிகாரி ராஜேந்திரன், நகரமைப்பு ஆய்வாளர் கவிதாவும் சிக்கினார்கள். நகரமைப்பு அதிகாரி ராஜேந்திரன் கோவில்பட்டி நகராட்சிக்கு, நகரமைப்பு ஆய்வாளர் அரக்கோணம் நகராட்சிக்கு மாறுதல் செய்யப்பட்டார்கள்.
ராஜேந்திரன், கவிதா இருவரும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக, விஜிலென்ஸ் வழக்கு பதிவு செய்துள்ளது. இந் நிலையில் நகரமைப்பு அதிகாரி ராஜேந்திரன், நகரமைப்பு ஆய்வாளர் கவிதா இருவரையும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம் சஸ்பெண்ட் செய்யவும், இலஞ்சம் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தவறிய ஆணையர் செந்தில்குமாரன் மாறுதல் செய்யவும் நகராட்சி நிர்வாகத்துக்கு பரிந்துரை செய்தது. நகராட்சிநிர்வாக ஆணையர் பாஸ்கரன் ஐ.ஏ.எஸ் ராஜேந்திரன், கவிதா இருவரையும் 18.02.2021 அன்று சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
திருவேற்காடுஆணையர் செந்தில்குமரன், திருவேற்காடு நகராட்சியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். செந்தில்குமரன் வேறு நகராட்சிக்கு மாறுதல் செய்வது தொடர்பாக, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடி நீர் வழங்கல்துறை செயலாளர் அரசாணை வெளியிடுவார்.
அதே பாணியில் பல்லாவரம் நகராட்சியில் 05.11.2020ல் நடந்த விஜிலென்ஸ் ரெய்டில் நகரமைப்பு அதிகாரி மாறனும், பொறியாளர் ரவிச்சந்திரனும் சிக்கினார்கள்.
மக்கள்செய்திமையத்தின் நீண்ட போராட்டத்தின் விளைவாக, 47 நாட்கள் கழித்து, மாறனும், ரவிச்சந்திரனும் பல்லாவரம் நகராட்சியிலிருந்து விடுவிக்கப்பட்டு, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்கள்.
பல்லாவரம் நகராட்சி நகரமைப்பு அதிகாரி மாறனுக்கு மனைவி லட்சுமிபிரியா, மகன் அஸ்வத் பெயரில் கட்டுமான நிறுவனம் செயல்படுகிறது. இன்னொரு மகன் அரவிந்த் ரோசன் பெயரிலும் பல தொழில்கள் நடக்கிறது. மாறன் மகன் அஸ்வத் பெயரில் அசைவு உணவகம் நடத்துகிறார். மாறனின் சொத்து ரூ100கோடியை தாண்டும்.
விஜிலென்ஸில் சிக்கிய பொறியாளர் ரவிச்சந்திரனுக்கு பட்டுக்கோட்டை, சென்னை, தஞ்சாவூர் ஆகிய இடங்களில் மட்டும் ரூ200கோடிக்கு சொத்து உள்ளது.
மாறன், ரவிசந்திரன் இருவர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கு பதிவு செய்ய விஜிலென்ஸ் அதிகாரிகள் முடிவு செய்துள்ளார்கள்.
விஜிலென்ஸில் சிக்கிய நகரமைப்பு அதிகாரி மாறனும், பொறியாளர் ரவிச்சந்திரனும் விரைவில் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள். இலஞ்சம் பணம் பரிமாற்றம் அலுவலகத்துக்குள் நடந்ததை கட்டுப்படுத்த முடியாத பல்லாவரம் நகராட்சி ஆணையர் விரைவில் மாறுதல் செய்யப்படுவார்.
ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம் தனக்கு இருக்கும் அதிகாரத்தை முழுமயாக செயல்படுத்தினால், தமிழகத்தில் ஊழல், இலஞ்சம், முறைகேடுகள், நிர்வாக சீர்கேடுகள் குறையும் என்பதில் சந்தேகம் இல்லை.