Breaking News
Home / பிற செய்திகள் / உள்ளாட்சி அமைப்புகளில்- HIGH MAST LIGHT ஊழல்… நாகா டிரேடர்ஸில் கொள்முதலா… பின்னணியில் Mr முகப்பேர்…

உள்ளாட்சி அமைப்புகளில்- HIGH MAST LIGHT ஊழல்… நாகா டிரேடர்ஸில் கொள்முதலா… பின்னணியில் Mr முகப்பேர்…

Mr முகப்பேர் என்றவுடன் ஊர் பெயர் என்று நினைத்துவிடாதீர்கள்.. உள்ளாட்சித்துறை அமைச்சரின் சிறப்பு உதவியாளரும், ஒய்வு பெற்ற நகராட்சி கூடுதல் இயக்குநருமான சந்திரசேகர் முகபேரில் உள்ள  இரண்டாவது வீட்டிலிருந்து உத்தரவுகளை பிறப்பிக்கிறார். தினமும் அதிகாரிகள் கும்பல், கும்பலா பணத்துடன் தரிசனத்துக்காக காத்துகிடப்பார்கள்..

 உள்ளாட்சி அமைப்புகளான நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் கிராம பஞ்சாய்த்துகளில் உயர் கோபுர எல்.இ.டி மின்விளக்கு அமைப்பதில் மெகா ஊழல் தினமும் நடந்துக்கொண்டு இருக்கிறது.

 Mr முகப்பேர் நாகா டிரேடர்ஸ், கோதாவரி தெரு, பத்மாவதி நகர், மேடவாக்கம் நிறுவனத்திடமிருந்து ரூ2,54,237க்கு கொள்முதல் செய்ய வேண்டும் என்று வாய்மொழி உத்தரவிட்டுள்ளார்.

 உண்மையில் உயர் கோபுர மின் எல்.இ.டி விளக்கு ரூ63,000க்கு கிடைக்கிறது.

  1. சுவனா எண்டர்பிரைசஸ் காரைக்குடியில் இந்த நிறுவனத்தில் சூரிய ஒளியில் இயங்கும் உயர் கோபுர விளக்கு ரூ63195 விலைக்கு திருவள்ளூர் மாவட்டத்தில் புழல் ஒன்றியத்தில் அழிஞ்சம்பாக்கம் கிராம பஞ்சாய்த்துக்கு சப்ளை செய்து இருக்கிறார்கள்.
  2. புழல் ஒன்றியத்தில் அழிஞ்சம்பாக்கத்தில் மாரியப்பன் ஏஜென்சி விருதுநகர் நிறுவனம் சூரிய ஒளி மூலம் செயல்படும் உயர் கோபுர விளக்கு ரூ1,26,271க்கும் சப்ளை செய்யப்பட்டுள்ளது.
  3. சுவான எண்டர்பிரைசஸ் திருவள்ளூர் மாவட்டத்தில் பல ஊராட்சி ஒன்றியங்களில் உயர் கோபுர மின் விளக்கு ரூ84,807 என ஆறு  விளக்குகள் ரூ4,98,200க்குசப்ளை செய்திருக்கிறார்கள்.

இந் நிலையில் Mr முகப்பேர் மேடவாக்கம் நாகா டிரேடர்ஸ் நிறுவனத்தில் சூரிய ஒளியில் செயல்பட கூடிய உயர் கோபுர மின் விளக்கு ஒன்று ரூ2,54,237க்கு கொள்முதல் செய்ய வேண்டும் என்று நகராட்சிகள், பேரூராட்சிகள், கிராம பஞ்சாய்த்துகளுக்கு  உத்தரவிட்டுள்ளார்.

 25.02.2021ம் தேதிக்குள் ரூ100கோடிக்கு உயர் கோபுர மின் எல்.இ.டி விளக்குகள் அல்லது உயர் கோபுர மின்(சூரிய ஒளி) விளக்குகள் தமிழகம் முழுவதும்  ஒரு உயர் கோபுர மின் விளக்கு ரு2,54,237க்கு  கொள்முதல் செய்யப்பட உள்ளது.

  உண்மையில் மார்க்கெட் விலையை விட நாகா டிரேடர்ஸ் மேடவாக்கத்தில் 4 மடங்கு/400 சதவிகிதம் விலை அதிகம்..  

யார் இந்த நாகா டிரேடர்ஸ் மேடவாக்கம்… Mr முகப்பேருக்கு நாகா டிரேடர்ஸ்க்கும் என்ன தொடர்பு என்பதை நாளை விரிவாக பார்க்கலாம்

Comments

comments

About mani bharathi

Check Also

திருவள்ளூர் மாவட்டம்.. தூய்மை இந்தியா திட்டமா- டெங்கு கொசுப்பண்ணையா..

திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் குப்பை குவியலைதான் பார்க்க முடிகிறது. குப்பை அள்ளும் நிறுவனங்களிடம்  கமிசன் வாங்க மட்டுமே அதிகாரிகளுக்கு தெரியும். …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *