
அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனைகள் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளுக்கு உணவுக்காக 01.09.2020 முதல் 31.01.2021 வரை செலவிடப்பட்ட/செலவிடப்படும் தொகை ரூ48.82கோடி…

கொரோனா நோயாளிகளுக்கு தரமான உணவு கொடுப்பதில் நமக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை செப்டம்பர் மாதம் முதல் மிகவும் குறைந்துக்கொண்டே உள்ளதாக, கொரோனா தொடர்பாக, சுகாதாரத்துறை தினமும் வெளியிடும் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் கொரோனா சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு 34 அரசு மருத்துவமனைகளில் ஐந்து மாதத்திற்கு உணவுக்காக ரூ48.82கோடி செலவு செய்யப்படுவது, பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா நோயாளிகளுக்கு உணவுக்காக ஐந்து மாதங்களுக்கு(1.09.2020 முதல் 31.1.2021 வரை) செலவு செய்யப்பட்ட ரூ48.82கோடிக்கு வெள்ளை அறிக்கை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் வெளியிடுவாரா?