Breaking News
Home / பிற செய்திகள் / சென்னை மாநகராட்சி-மண்டலம்-5- சனிக்கிழமை கழுகு லாரன்ஸ்- ஊழல் பயோ-டேட்டா…

சென்னை மாநகராட்சி-மண்டலம்-5- சனிக்கிழமை கழுகு லாரன்ஸ்- ஊழல் பயோ-டேட்டா…

சென்னை மாநகராட்சி மண்டலம் -5 செயற் பொறியாளர், சனிக்கிழமை கழுகு லாரன்ஸின் ஊழல் பயோ-டேட்டா..

  1. மண்டலம் -5 செயற் பொறியாளர் சனிக்கிழமை கழுகு லாரன்ஸ் மார்வாடி பகுதியில் 5400 அப்ரூவல் இல்லாத கட்டிடங்கள், இடிக்கப்பட வேண்டிய கட்டிடங்கள் உள்ளது. 5400 கட்டிடங்களுக்கும் மாதா, மாதம் மாமூல் வாங்கி, தலைமைப் பொறியாளர் நந்தகுமார் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு பிரித்து கொடுப்பதுதான் முக்கிய பணி. லாரன்ஸின் சொத்து மதிப்பு ரூ100கோடியை தாண்டும்..
  2. சனிக்கிழமை கழுகு லாரன்ஸ் கடந்த பல ஆண்டுகளாக மண்டலம் -5ல் தொடர்ந்து பணியாற்றுவதால், லாரன்ஸ் மனைவி LUMIN STANLY Assistant Executive engineer(தமிழ்நாடு மின்சாரவாரியம்) பெயரில் வீட்டுமனை வாங்கி, ரூ61இலட்சம் மதிப்பில் வீடு கட்டுவதாக என்.ஒ.சி பெற்றுள்ளார். ஆனால் வீட்டின் மதிப்பு ரூ2கோடியை தாண்டும். வீட்டின் உள் அமைப்பு அலங்காரங்களை மார்வாடிகள் ரூ50 இலட்சத்துக்கு இலவசமாக செய்து கொடுக்கிறார்கள்.
  3. சனிக்கிழமை கழுகு லாரன்ஸ் சில நாட்களுக்கு முன்பு திருத்தணி சங்கர், மற்றும் நான்கு மார்வாடிகளுடன் லஞ்சம் பேரம் பேசிக்கொண்டு இருந்தார். பத்திரிகார்டன் தெருவில் எஸ்.கே டவர்ஸ் கட்டுமான பணியில், அருகில் உள்ள வீட்டின் 5 அடி ஆக்ரமித்துவிட்டார்கள். எஸ்.கே டவர்ஸ் ஆக்ரமித்த கட்டிடத்தின் உரிமையாளர் புகார் அளித்துள்ளார். எஸ்.கே டவர்ஸ் கட்டுமான பணி திருத்தணி சங்கர் பாதுகாப்பில் இருப்பதால், செயற்பொறியாளர் சனிக்கிழமை கழுகு லாரன்ஸ் உடன் இலஞ்சம் பேர பேச்சுவார்த்தை நடத்தினார். புகார் கொடுத்தவர் மார்வாடி மாபியாக்கள் மூலம் அன்பாக மிரட்டப்பட்டார்.. சனிக்கிழமை கழுகு லாரன்ஸ், செயற்பொறியாளரா… மண்டலம்-5, மார்வாடிகளுக்கு கட்ட பஞ்சாய்த்து செய்யும் மாபியா செயற் பொறியாளரா?
  4. சென்னை மாநகராட்சியில் மண்டலம்- 5ல் செயற் பொறியாளராக பணியாற்றும் லாரன்ஸை  15 ஆண்டுகளுக்கு முன்பே சனிக்கிழமை கழுகு என்று அன்பாக அழைப்பார்களாம்.சென்னை மாநகராட்சியின் ரிப்பன் மாளிகையில் உள்ள  சுதந்திர தின பெ௱ன்விழா ஆண்டு கட்டிடம் கட்டப்பட்டது .அந்த கட்டிடத்தை கட்டியது  சனிக்கிழமை கழுகு என்கிற லாரன்ஸ்தான்.

சுதந்திர தின பொன்விழா கட்டிடமே தரமில்லாத கம்பிகளை வைத்து பில்லர் பே௱டபட்டுள்ளது சிமென்ட், மணல் சல்லி பே௱ன்ற கலவை பெ௱ருட்கள் தரமில்லாதவையாம். சுதந்திர தின பொன்விழா கட்டிடம் எப்போது இடிந்துவிழுமோ என்ற நிலையில் தரமில்லாமல் பில்லர் எழுப்பபட்ட இந்த கட்டிடத்தில் 3 மாடி கட்டலாம் என்று புரூடா விடார் சனிக்கிழமை கழுகு ( எ ) லாரன்ஸ்.

 அப்பே௱து  சென்னை மாநகராட்சி ஆணையரான ராஜேஷ்லகானி ஐ.ஏ.எஸ், சுதந்திர தின பொன் விழா கட்டிடம் பற்றி டன் கணக்கில் புகார்கள் குவிந்தது. சனிக்கிழமை கழுகு என்கிற  லாரன்ஸ் பற்றி விசாரித்த ராஜேஷ்லகானிக்கு அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தது.  சுதந்திர தின பெ௱ன்விழா ஆண்டு கட்டிடம் தரமானதா என  ஐ.ஐ.டியிலிருந்து குழுவை வரவழைத்து  தரம் நிர்ணயம் செய்ய ஆணையர் உத்தவிட்டார்.

ஐ.ஐ.டி தரக்கட்டுப்பாடு அதிகாரிகள் இந்த கட்டிடத்தை ஆய்வு செய்து அதிர்ந்து பே௱னார்கள்.. சென்னை மாநகராட்சி ஆணையர் ராஜேஷ்லகானி ஐ.ஏ.எஸ்யிடம் ஐ.ஐ.டி தரக்கட்டுப்பாடு குழுவினர்  கட்டிடம் தரமில்லை. மேலும் இரண்டாவது தளமே கட்டாமல், மூன்றாவது தளம் கட்டியதாக கோப்புகளில் உள்ளது, இரண்டாவது தளம், மூன்றாவது தளம் கட்டியதாக போலியாக எஸ்டிமேட், எம்.புத்தகம் மூலம் பல லட்சம்  அதிகாரிகள் சுருட்டியுள்ளார்கள் என்பதை ஆதாரங்களுடன் விளக்கினார்கள்.

 வடிவேலு கிணத்தை காணவில்லை என்று சொன்னது போல் ஆகிவிட்டது. ஆணையர் ராஜேஷ்லகானி ஐ.ஏ.எஸ், சுதந்திர பொன்விழா கட்டிட கோப்புகளை பார்த்து, அதிர்ச்சியானார். லாரன்ஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தனக்கு எம்.புத்தகத்துக்கு சம்பந்தம் இல்லை, எனக்கு அதிகாரமே இல்லை  என்று நீதிமன்றம் மூலம் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்தார். மீண்டும் பணியில் மண்டலம்-5யில் சேர்ந்தார்.

 ராஜேஷ்லகானி ஐ.ஏ.எஸ்யை ஜாதி, மதம் ரீதியாக , லாரன்ஸ் மிரட்டினார் என்பதுதான் குறிப்பிடத்தக்கது..

                                              லாரன்ஸ் ஊழல் பயோ-டேட்டா தொடரும்..

Comments

comments

About mani bharathi

Check Also

திருவள்ளூர் மாவட்டம்.. தூய்மை இந்தியா திட்டமா- டெங்கு கொசுப்பண்ணையா..

திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் குப்பை குவியலைதான் பார்க்க முடிகிறது. குப்பை அள்ளும் நிறுவனங்களிடம்  கமிசன் வாங்க மட்டுமே அதிகாரிகளுக்கு தெரியும். …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *