
ஆவடி மாநகராட்சியில் 05.01.2021அன்று நடந்த விஜிலென்ஸ் ரெய்டில் சிக்கி வருவாய் ஆய்வாளர் சத்தியமூர்த்தி மற்றும் புரோக்கர் வின்சென்ட் இருவரும் கைது செய்யப்பட்டார்கள். கணக்கு அதிகாரி திலகம் கழிப்பறையில் ரூ50,000த்தை தூக்கியெறிந்த போது சிக்கினார்.
சுகாதார அதிகாரி மோகன், ஆட்டோ ஸ்டாண்டில் ரூ2 இலட்சத்தை தூக்கியெறிந்தார். அதில் ஒரு இலட்சம் மட்டுமே விஜிலென்ஸ் அதிகாரிகள் கைப்பற்றினார்கள்..
விஜிலென்ஸில் சிக்கிய சத்தியமூர்த்தியின் அக்கா இந்திராணி, அலுவலகம் வராமல் வருகை பதிவேட்டில் கையெழுத்து போட்டுவிட்டு, சத்தியமூர்த்தியை ஜாமீனில் எடுக்க அலைகிறார்.
விஜிலென்ஸ் ரெய்டு நடந்து இன்றுடன்(20.01.2021) 15 நாட்களாகிவிட்டது. நகராட்சி நிர்வாக ஆணையர் பாஸ்கரன் ஐ.ஏ.எஸ் விஜிலென்ஸில் சிக்கியவர்களை ஆவடி மாநகராட்சியிலிருந்து விடுவிக்கவில்லை. விஜிலென்ஸில் சிக்கியவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு, ஆவணங்களை அழிக்கும் மாபியா இலஞ்ச அதிகாரிகள் மீது நடவடிக்கைஊ எடுக்கவில்லை.
- கணக்கு அதிகாரி திலகம்.
- சுகாதார அதிகாரி மோகன்.
- சுகாதார அதிகாரி மோகனின் பினாமி பாத்திமா ஆரோக்கியமேரி
- சத்தியமூர்த்தியின் அக்கா மற்றும் வருவாய் அதிகாரி இந்திராணி
இந்த நால்வரையும் ஆவடி மாநகராட்சியிலிருந்து விடுவிப்பது எப்போது?
இந்த நால்வருடன், விஜிலென்ஸ் வளையத்தில் சிக்கியிருந்த நகரமைப்பு ஆய்வாளர் கணேசமூர்த்தி 15 நாட்கள் லீவில் சென்று தப்பித்தார். மீண்டும் 15 நாட்கள் லீவில் சென்றுள்ளார். நேர்மையான அதிகாரி என்று தனக்குத்தானே கூறிக்கொள்ளும் மேலாளர் செல்வராணி, மருத்துவிடுப்பில் சென்ற கணேசமுர்த்தியை மருத்துவக்குழுவை (போர்டு)சந்திக்க ஏன் உத்தரவிடவில்லை.

நகராட்சி நிர்வாக ஆணையர் பாஸ்கரன் ஐ.ஏ.எஸ், கூடுதல் இயக்குநர் அசோகன் இருவரும் டம்மி…நகராட்சி, மாநகராட்சி நிர்வாகங்களை கண்டுகொள்ளுவதில்லை. முதலில் பாஸ்கரன் ஐ.ஏ.எஸ், அசோகன் இருவரையும் நகராட்சி நிர்வாகத்திலிருந்து விடுவிக்க வேண்டும். அப்போதுதான் ஊழல், நிர்வாக சீர்கேடுகளால் முடங்கி கிடக்கும் நகராட்சிகள், மாநகராட்சிகள் நிர்வாகங்கள் செயல்படும்..
இன்று(20.01.2021) 15 வது நாள்… இன்று 15 வது நாள்… இன்று 15 வது நாள்….