Breaking News
Home / பிற செய்திகள் / ஊரக வளர்ச்சித்துறை… முத்துமீனாள், வீரபத்ரன், விஜயலட்சுமி-கூட்டணியின் ஊழல் ஆட்டம்…

ஊரக வளர்ச்சித்துறை… முத்துமீனாள், வீரபத்ரன், விஜயலட்சுமி-கூட்டணியின் ஊழல் ஆட்டம்…

  ஊரக வளர்ச்சி ஆணையரகத்தின் கூடுதல் இயக்குநராக இருக்கும் முத்துமீனாள்(ராம்மோகன்ராவ் ஐ.ஏ.எஸ்(ஒய்வு) தம்பி மனைவி), உள்ளாட்சித்துறை அமைச்சரின் உதவியாளராக பணியாற்றிய வீரபத்ரன், திருப்பூர் மாவட்டம் குண்டடம் வட்டார வள அலுவலர் விஜயலட்சுமி மூவர் அணியின் ஊழல் ஆட்டம் எல்லை மீறி போய்க்கொண்டு இருக்கிறது.

  உள்ளாட்சித்துறை அமைச்சரிடம் உதவியாளராக இருந்த வீரபத்ரன், உள்ளாட்சித்துறை அமைச்சரின் ஊழல் கோப்புகளை நகல் எடுத்து வைத்துள்ளேன். ஏற்கனவே வருமான வரித்துறைக்கு சில ஊழல் கோப்புகளை கொடுத்துள்ளேன் என்று வெளிப்படையாக பேசுகிறார்.

சமூக தணிக்கைத்துறையில் இரண்டு ஆண்டுகளாக இயக்குநர் பதவி காலியாக இருக்கிறது. 100 நாள் வேலைத்திட்டத்தை கவனிக்கும் கூடுதல் இயக்குநர் முத்துமீனாள், சமூக தணிக்கைத்துறையில் இணை இயக்குநர் வீரபத்ரன்யுடன்  கூட்டணி அமைத்து, ஊழல், நிர்வாக முறைகேடு ஆட்டத்தில் கொடிக்கட்டி பறக்கிறார்கள். முத்துமீனாள், சமூக தணிக்கைத்துறைக்கு உயர் அதிகாரியும் இல்லை. பிறகு எப்படி இந்த கூட்டணி.. ஊழலுக்கான கூட்டணி..

  சமூக தணிக்கைத்துறை இணை இயக்குநராக இருக்கும் வீரபத்ரனுக்கு, சம்பளம் கொடுக்க மட்டுமே  அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் நிர்வாக ரீதியாக தனக்கு அதிகாரம் இருப்பது போல், ஆட்டம் போடுகிறார்.

 திருவண்ணாமலை மாவட்ட வள அலுவலர், திருப்பூருக்கு மாறுதல் செய்யப்பட்டார். திருப்பூர் மாவட்டத்துக்கு மாறுதல் செய்யப்பட்ட மாவட்ட வள அலுவலர் நேர்மையானவர் என்பதால், கூடுதல் இயக்குநர் முத்துமீனாள் சட்டத்துக்கு புறம்பாக குண்டடம் வட்டார வள அலுவலர் விஜயலட்சுமியை, திருப்பூர் மாவட்ட வள அலுவலர் பதவி பொறுப்பை கொடுத்துள்ளார்.

 விஜயலட்சுமிக்கு தகுதியே இல்லாத நிலையில் மாவட்ட வள அலுவலர் பதவியா..எதற்கு.. என்ன என்று ஆய்வு செய்தால், அதிர்ச்சியான செய்தி வெளியானது.

  கூடுதல் இயக்குநர் முத்துமீனாள் மகனுக்கு பிப்ரவரி மாதம் கோவையில் திருமணம்(கோவையில் ரூ2கோடி மதிப்பில் முத்துமீனாளுக்கு பங்களா உள்ளது). மகன் திருமண ஏற்பாடு, திருமண செலவுகளை வசூல் செய்ய,  குண்டடம் வட்டார வள அலுவலர் விஜயலட்சுமிக்கு, சட்டத்துக்கு புறம்பாக திருப்பூர் மாவட்ட வள அலுவலர் பதவி பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

  பிப்ரவரி மாதம் முத்துமீனாள் மகன் பொறியாளர், மிகப்பெரிய இடத்து சம்பந்தமாம். அதனால் மகண்  திருமணத்துக்கு ஊரக வளர்ச்சி நிதியிலிருந்தும், ஊரக வளர்ச்சி ஆணையரகத்தின் திருப்பூர், கோவை, நாமக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் வசூல் செய்து, பணத்தை அள்ளி கொட்டப் போகிறார்.

  மக்கள் பணம், இலஞ்சம் பணம், அரசு பணத்தை  போலி பில் போட்டு வசூல் செய்து வாரி கொட்ட முத்துமீனாள் தினமும் வாய் மொழி உத்தரவிட்டு போட்டுக்கொண்டு இருக்கிறார்.

 உள்ளாட்சித்துறை அமைச்சரின் ஆதரவு பெற்ற கூடுதல் இயக்குநர் முத்துமீனாள், உள்ளாட்சித்துறை அமைச்சரின் ஊழல் கோப்புகளை வருமான வரித்துறை கொடுத்துவிட்டு, எந்த நேரமும் உள்ளாட்சித்துறை அமைச்சரை காட்டிகொடுக்க தயாராக இருக்கும் இணை இயக்குநர் வீரபத்ரனுடன் கூட்டணி அமைத்துள்ளது வேடிக்கையாக இருக்கிறது.

   2021  சட்டமன்றத் தேர்தலில் திமுக ஆட்சி அமையும் போது, முத்துமீனாளும், திமுகவிடம் சரண்டராகிவிடுவார் என்பதில் சந்தேகமே இல்லை..

 இப்படி சட்டத்துக்கு புறம்பாக செயல்படும், கூடுதல் இயக்குநர் முத்துமீனாள் மீதும், இணை இயக்குநர் வீரபத்ரன் மீதும்  இயக்குநர் பழனிசாமி ஐ.ஏ.எஸ் நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன்.. ஒரு வேளை இயக்குநர் பழனிசாமியும் ஊழலில் கூட்டணி சேர்ந்துவிட்டாரா?

Comments

comments

About mani bharathi

Check Also

திருவள்ளூர் மாவட்டம்.. தூய்மை இந்தியா திட்டமா- டெங்கு கொசுப்பண்ணையா..

திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் குப்பை குவியலைதான் பார்க்க முடிகிறது. குப்பை அள்ளும் நிறுவனங்களிடம்  கமிசன் வாங்க மட்டுமே அதிகாரிகளுக்கு தெரியும். …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *