Breaking News
Home / பிற செய்திகள் / பல்லவபுரம் நகராட்சி நகரமைப்பு அதிகாரி- பூங்கா திருடன் மாறனின்- மனசாட்சி பயோ-டேட்டா…

பல்லவபுரம் நகராட்சி நகரமைப்பு அதிகாரி- பூங்கா திருடன் மாறனின்- மனசாட்சி பயோ-டேட்டா…

   பல்லவபுரம் நகராட்சியில் 05.11.2020ல் நடந்த விஜிலென்ஸ் ரெய்டில் சிக்கிய நகரமைப்பு அதிகாரி வெ.மாறன் மக்கள் செய்திமையம் எடுத்த அதிரடி நடவடிக்கையால், பல்லவபுரம் நகராட்சியிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

                         மனசாட்சி பயோ-டேட்டா…

  1. ஆவடி மாநகராட்சியில்/நகராட்சியில் நகரமைப்பு அதிகாரியாக பணியாற்றிய மாறன், மக்கள்செய்திமையம் ஆசிரியர் அன்பழகன் மீது 2017 ஏப்ரல்/மே மாதத்தில் பொய் புகார் கொடுத்து, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. உண்மையில் மாறனுக்கு மனசாட்சி இருந்தால் பொய் புகார் கொடுத்திருப்பாரா? அன்பழகன் மீது பொய் புகார் கொடுக்க, மாறன் தன் மனசாட்சியை ரூ10 இலட்சத்துக்கு, அமைச்சர் நிழல் உதவியாளர் பார்த்தீபனிடம் விற்பனை செய்துவிட்டார். இதில் என்ன வேடிக்கை என்றால் மாறனைப்பற்றி எந்த செய்தியும் வெளியிடவில்லை.
  2.  தூத்துக்குடி மாநகராட்சியிலிருந்து, பல்லவபுரம் நகராட்சி நகரமைப்பு அதிகாரி பதவியை ரூ30 இலட்சத்துக்கு விலைக்கு வாங்கிய மாறன், நகரமைப்பு பிரிவில் அப்ரூவல் மூலம் அடித்த கொள்ளை ரூ5கோடி.. மக்களைப்பற்றி மறந்து, மனசாட்சியை கோடிகளுக்கு விற்பனை செய்தவர்.
  3. 1993ல் தாம்பரம் நகராட்சியில் நகரமைப்பு ஆய்வாளராக பணியாற்றிய போது, நகராட்சிக்கு சொந்தமான 35 செண்ட்  பூங்காவுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை விற்று ஜோல்னாபையை நிரப்பிக்கொண்டவர்.. அதனால் மாறனுக்கு பூங்கா கொள்ளையன் மாறன் என்று இன்னும் தாம்பரத்தில் அழைப்பார்கள்..மனசாட்சி இருந்திருந்தால் பூங்காவுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை விற்று இருப்பாரா?
  4.    வாஸ்து நிபுணர் என்று புரூடாவில், அப்ரூவலுக்கு வருபவர்களிடம் வாஸ்து சரியில்லை என்று ஆயிரக்கணக்கில் தனியாக பில் போட்டுவிடுவார் ஜோல்னா பை மாறன்..
  5. மாறன் மனைவி லட்சுமி பிரியா பெயரில்  இலட்சுமி பில்டர்ஸ் முதல் மகன் அஸ்வத் பெயரில் அஸ்வத் கன்ஸ்டிரக்சன் நடத்தி ரூ100கோடி கொள்ளையடித்த மாறனுக்கு மனசாட்சி இருக்கிறதா? நகரமைப்பு அதிகாரி மனைவி, மகன் பெயரில் கட்டுமான நிறுவனம் நடத்தலாமா?
  6. மாறனின் இரண்டாவது மகன் அரவிந்த்ரோஷன் மற்றும் அஸ்வத் பெயரில் நகரமைப்பு பிரிவில் அப்ரூவலுக்கு இலஞ்சம் வாங்கி, கொள்ளையடித்த பணத்தில் குரோம்பேட்டையில்  BARBEQUE NATION என்ற பெயரில் அசைவ ஹோட்டலை விலைக்கு வாங்கி நடத்தி வருகிறார். BARBEQUE NATION ஹோட்டலில்தான் தற்போது அப்ரூவல் தொடர்பான இலஞ்ச பண பரிமாற்றங்கள் நடந்தது, இன்னும் நடக்கிறது.
  7. ஆவடி நகராட்சிக்குட்பட்ட நீர் நிலை புறம்போக்கு, வாய்க்கால், மயான புறம்போக்கு, மேய்க்கால் புறம்போக்கு, பெருமாள் கோயில் நிலம் இவற்றுக்கு எல்லாம் சட்டத்துக்கு புறம்பாக ஆக்ரமிப்பாளர் பெயரில், அப்ரூவல் கொடுத்து, பணத்தை மாறன்  ஜோல்னாபையில் இல்லை,  சாக்கு மூட்டையில்  கட்டி செல்லுவாராம்..
  8.  நாமக்கல் நகரம் தும்மங்குறிச்சி கிராமம் சர்வே எண்.1/5A2, 5B2, 5C2, 2/C2இல் 0.2285 ஹெக்டேர் பரப்பளவுக்கு வீட்டு மனைக்கு அப்ரூவல் கொடுக்க, மாறன் கேட்ட கமிசனால் அதிர்ச்சியடைந்தார்கள்..                                                                                         நாமக்கல் நகராட்சியில் ஜோல்னா பை மாறன் அடித்த ஊழல் கூத்து.. அம்மாடியோவ்..

மக்கள்செய்திமையம், நகரமைப்பு அதிகாரி வெ.மாறன் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு பதிவு செய்யும் வகையில் ஆதாரங்களுடன் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்தில் புகார் கொடுத்துள்ளது..

Comments

comments

About mani bharathi

Check Also

திருவள்ளூர் மாவட்டம்.. தூய்மை இந்தியா திட்டமா- டெங்கு கொசுப்பண்ணையா..

திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் குப்பை குவியலைதான் பார்க்க முடிகிறது. குப்பை அள்ளும் நிறுவனங்களிடம்  கமிசன் வாங்க மட்டுமே அதிகாரிகளுக்கு தெரியும். …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *