Breaking News
Home / பிற செய்திகள் / ஆவடி மாநகராட்சி.. சுகாதார அதிகாரி மோகனின் பினாமி பாத்திமா- ஆரோக்கியமேரி..

ஆவடி மாநகராட்சி.. சுகாதார அதிகாரி மோகனின் பினாமி பாத்திமா- ஆரோக்கியமேரி..

ஆவடி மாநகராட்சி ஊழல் மாபியா அதிகாரிகளின் கூடாரமாக மாறி, ஆணையரை செயல்பட விடாமல் முடக்கி, நிர்வாகம் துக்ளக் தர்பார் பாணியில் நடக்கிறது.

 வருவாய் ஆய்வாளர் சத்தியமுர்த்தி விஜிலென்ஸில் கைது செய்த பிறகு, சத்தியமூர்த்தியின் அக்கா இந்திராணி, சுகாதார அதிகாரி மோகன், கணக்கு அதிகாரி திலகம் முவரின் ஊழல் ஆட்டம் அடங்கவே இல்லை.

      ஆவடி மாநகராட்சியில்  விஜிலென்ஸ் ரெய்டு நடக்கும் போது கணக்கு அதிகாரி திலகம், ரூ50,000த்தை கழிப்பறையில் தூக்கி எறியும் போது, கையும் களவுமாக பிடிப்பட்டார்.  ஆட்டோ ஸ்டாண்டில் ரூ2இலட்சத்தை தூக்கி எறிந்த சுகாதார அதிகாரி மோகன் தூக்கி எறிந்த பணத்தையும் விஜிலென்ஸ் கைப்பற்றியுள்ளது.  மோகன், திலகம் இருவர் மீது விஜிலென்ஸ் வழக்கு பதிவு செய்து,  ஆவடி மாநகராட்சி பணியிலிருந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 அதே போல் ஆவடி மாநகராட்சி பணிக்கு வராமல், வருகை பதிவேட்டில் கையெழுத்து மட்டும் போட்டுவிட்டு, விஜிலென்ஸில் சிக்கி கைது செய்யப்பட்டு, சிறையில் இருக்கும் தம்பி சத்தியமூர்த்தியை ஜாமீனில் எடுக்க அலைந்துக்கொண்டு இருக்கும் வருவாய் அதிகாரி இந்திராணி, ஆவடி மாநகராட்சியிலிருந்து விடுவிக்க வேண்டும்.

 வருவாய் ஆய்வாளர் சத்தியமூர்த்தியை போல், ஆவடி மாநகராட்சியில் சுகாதாரத்துறையில் இலட்சக்கணக்கில் கொள்ளையடித்து வரும் சுகாதார அதிகாரி மோகனின் பினாமி, ஆவடி மாநகராட்சியில் பொதுப்பிரிவில் பணியாற்றும்  பாத்திமா ஆரோக்கியமேரி . சனி, ஞாயிறுக்கிழமைகளில் மாலை 5 மணி முதல் 8மணி வரை பாத்திமா ஆரோக்கியமேரிக்கு கோயில் பதாகையில் கட்டி கொடுத்த வீட்டில் தான் மோகன் இருப்பார். அங்கு பணத்தை எண்ணுவதற்கு மெஷின் வாங்கி வைத்துள்ளார் மோகன். சனி, ஞாயிற்றுகிழமைகளில்  மோகனும், பாத்திமா ஆரோக்கிய மேரியும்  அந்தந்த வாரம் வாங்கிய இலஞ்ச பணத்தை எண்ணி, ரூ500, ரூ2000 நோட்டுகளாக தனித்தனியாக கட்டுப்போட்டு, பதுக்கி வைப்பார்கள். கோயில் பதாகையில் மோகனின் பினாமி வீட்டில் விஜிலென்ஸ் ரெய்டு நடத்தில் பல லட்சம் சிக்கும்.

 ஆவடி மாநகராட்சி ஆணையராக ரவிச்சந்திரன் இருக்கும் போது, ஆணையர் ரவிச்சந்திரன், சுகாதார அதிகாரி இந்திராணி, சுகாதார ஆய்வாளர் இந்திராணியின் தம்பி சத்தியமூர்த்தி, சுகாதாரபிரிவு அதிகாரி மோகன், கணக்கு அதிகாரி திலகம் இந்த ஐவரின் அடித்த கொள்ளை ரூ25கோடி…

  சேமநல நிதியில் ரூ4.50கோடி முறைகேட்டில் கணக்கு அதிகாரி திலகம் சிக்கியுள்ளார். விஜிலென்ஸ் அதிகாரிகள் விசாரணை செய்து வருகிறார்கள். திலகம் விரைவில் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது.

 ஊழல் மாபியா அதிகாரிகளான இந்திராணி, மோகன், திலகம் மூவரும் மாறுதல் செய்யப்பட்டால் தான் ஆவடி மாநகராட்சி, மக்களுக்கான மாநகராட்சியாக செயல்படும்..

Comments

comments

About mani bharathi

Check Also

ஊரக வளர்ச்சித்துறை… முத்துமீனாள், வீரபத்ரன், விஜயலட்சுமி-கூட்டணியின் ஊழல் ஆட்டம்…

  ஊரக வளர்ச்சி ஆணையரகத்தின் கூடுதல் இயக்குநராக இருக்கும் முத்துமீனாள்(ராம்மோகன்ராவ் ஐ.ஏ.எஸ்(ஒய்வு) தம்பி மனைவி), உள்ளாட்சித்துறை அமைச்சரின் உதவியாளராக பணியாற்றிய …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *