Breaking News
Home / பிற செய்திகள் / சென்னை மாநகராட்சி.. தலைமைப் பொறியாளர்- நந்தகுமாரின் அத்துமீறல்..

சென்னை மாநகராட்சி.. தலைமைப் பொறியாளர்- நந்தகுமாரின் அத்துமீறல்..

சென்னை மாநகராட்சியில் நிழல் ஆணையர் மற்றும் தலைமைப் பொறியாளர் நந்தகுமார், அறையில் உள்ள  வாசகம் “ பொது சுகாதார அவசர நிலை காரணமாக மறு உத்தரவு வரும் வரை பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை”

  இதில் என்ன வேடிக்கை என்னவென்றால் தலைமைப் பொறியாளர் நந்தகுமார் பொது மக்களை, புகார் கொடுக்க வருபவர்களை, பார்வையாளர்களை சந்திப்பது இல்லை. கமிசன்/இலஞ்சம் கொடுக்கும் செயற் பொறியாளர்கள், உதவி செயற் பொறியாளர்கள், ஒப்பந்ததாரர்களை மட்டுமே சந்தித்து பேசுவார். இரவு 7மணி முதல் 9மணி வரை அலுவலகத்தில் உட்கார்ந்திருப்பார். திமுக எம்.எல்.ஏ சேகர்பாபு பெரும்பாலும் இரவு 7மணிக்கு மேல் வாரம் ஒரு முறை நந்தகுமாரை பார்த்து பேசிவிட்டு செல்வார்.

 கொரோனா அதாவது பொது சுகாதார அவரச நிலை தற்போது சென்னையில் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் இல்லை.  ஆனால் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்ற வாசகம் எழுதிய பேப்பரை கிழிக்கவில்லையே ஏன்?

  ஆனால் நந்தகுமார், மண்டலம் -5 செயற் பொறியாளர் சனிக்கிழமை கழுகு லாரன்ஸ் செலவில்,  தன் அறையில் கிருஸ்துமஸ் கேக் வெட்டி கொண்டாடினார். பிறகு புத்தாண்டு விழா பெயரில் பரிசு பொருட்கள், விலை உயர்ந்த டைரி  உள்ளிட்ட  விலை உயர்ந்த பரிசு பொருட்களை அதிகாரிகள் வரிசையில் நின்று தலைமைப் பொறியாளர் நந்தகுமாருக்கு காணிக்கையாக செலுத்தினார்கள்.

 பல அதிகாரிகளை தனியாக அழைத்து, மக்கள்செய்திமையத்துக்கு செய்தி கொடுப்பதாக தெரிகிறது ஜாக்கிரதை, சஸ்பெண்ட் செய்துவிடுவேன் என்று அன்பாக மிரட்டினார்.

 JANISHREE CORPORATE SERVICESPVT LTD 28.1.2019ல் தான் தொடங்கப்பட்டுள்ளது.  இந்த நிறுவனத்தின் இயக்குநர் அண்ணாமலை மாயவன் நந்தகுமாருக்கு மிகவும் நெருக்கமானவர். இந்த நிறுவனம் மினி கிளினிக்கு டாக்டர்களை நேரடியாக நியமனம் செய்கிறது. JANISHREE CORPORATE SERVICESPVT LTD மண்டல அதிகாரிகளுக்கு நேரடியாக டாக்டர்கள் நியமனம் செய்து கடிதமே கொடுக்கிறது.. சென்னை மாநகராட்சியில் நேரடியாக டாக்டர்களை நியமனம் செய்ய, JANISHREE CORPORATE SERVICESPVT LTD நிறுவனத்துக்கு அதிகாரம் கொடுத்தது யார் என்ற கேள்விக்கு நிழல் ஆணையர் கம் தலைமைப் பொறியாளர் நந்தகுமார் தான் என்கிறது அந்த  நிறுவனம்.

  தலைமைப் பொறியாளர் நந்தகுமாருக்கு நெருக்கம் என்றால், சென்னை மாநகராட்சியில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் …

 தலைமைப் பொறியாளர் நந்தகுமாரின் அதிகார அத்துமீறல் நாளுக்கு நாள் அதிமாகிக்கொண்டே இருக்கிறது..

Comments

comments

About mani bharathi

Check Also

ஊரக வளர்ச்சித்துறை… முத்துமீனாள், வீரபத்ரன், விஜயலட்சுமி-கூட்டணியின் ஊழல் ஆட்டம்…

  ஊரக வளர்ச்சி ஆணையரகத்தின் கூடுதல் இயக்குநராக இருக்கும் முத்துமீனாள்(ராம்மோகன்ராவ் ஐ.ஏ.எஸ்(ஒய்வு) தம்பி மனைவி), உள்ளாட்சித்துறை அமைச்சரின் உதவியாளராக பணியாற்றிய …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *