
இந்து சமய அறநிலையத்துறையில் இணை ஆணையராக இருக்கும் திருமதி ஹரிப்ரியாவுக்கு, சட்டத்துக்கு புறம்பாக கூடுதல் ஆணையராக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. ஊழல் செய்யும் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு கொடுப்பது என்பது அதிமுக அரசில் புதிய பார்மூலா செயல்படுத்தப்படுகிறது.
திருமதி ஹரிப்ரியா மீது அரசாணை எண்(ப) 165 சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள்(அநி2-2) துறை தேதி 15.12.2015ல் ஊழல் குற்றச்சாட்டுகள்..ஹரிப்ரியா தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார்.

- சென்னை ஆணையர் அலுவலகத்தில் இணை ஆணையர்(திருப்பணி) ஆகப் பணியாற்றிய போது ஒப்புலியப்பன் கோவில் அருள்மிகு வெங்கடாஜலபதி திருக்கோயிலுக்கு சொந்தமான புராதனமான ஆபரணங்களை உருக்கிட விதிகளுக்கு முரணாக அனுமதி அளித்தது.
- திருச்சி உறையூர் அருள்மிகு வெக்காளி அம்மன் திருக்கோயில் தங்கரத திருப்பணிகளில் ஒரு குறிப்பிட்ட ஒப்பந்ததாரருக்கு சாதகமாக செயல்பட்டது.
- மாங்காடு அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோயில் துணை ஆணையர்/செயல் அலுவலராக பணியாற்றிய போது, திருக்கோயிலுக்கு காணிக்கையாக வரப்பெற்ற பட்டுபுடவைகளை ஏலத்திற்குக் கொண்டு வராமலேயே ஒரு சொற்பத் தொகையினை திருக்கோயிலுக்கு பலவகை ரசீது மூலம் செழுத்திவிட்டு, புடவைகளை தாமே எடுத்து சென்று ஒழுங்கீனமாக நடந்துகொண்டது.
இது போன்ற முறைகேடுகளுகாக ஹரிப்ரியா மீது தமிழ்நாடு குடிமைப்பணிகள்(ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதிகளில் விதி 17(b)ன் கீழ் ஒப்பிலியப்பன் கோவில் புராதனமான ஆபரணங்களை உருக்கிட அனுமதி அளித்த குற்றச்சாட்டுக் குறிப்பாணையின் பேரில் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார்.
இந்த அரசாணையில் ஹரிப்ரியாவின் தற்காலிக பணி நீக்கத்தை விலக்கி கொள்ளவும், பிழைப்பூதியம் 50 சதவிகிதமாக குறைக்கப்பட்டதை, மீண்டும் 75 சதவிகிதமாக உயர்த்த கோரும் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது.
இந் நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஹரிப்ரியா w.p.no.35892/2015 and w.p.no.35893/2015 வழக்கு தொடர்ந்தார். ஹரிப்ரியாவுகாக சீனியர் கவுன்சில் என்.ஆர். சந்திரன் ஆஜரானார்.
அதில் w.p.no.35892/2015 DISPOSED and w.p.no.35893/2015 ALLOWED என்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால் இந்த தீர்ப்பை இந்த அறநிலையத்துறை அதிகாரிகள் மேல்முறையீடு ஏன் செய்யவில்லை என்று தெரியவில்லை.
இப்படி பல குற்றச்சாட்டுகள் முடிவு பெறாமல் நிலுவையில் இருந்த நிலையில், அனைத்து குற்றச்சாட்டுகளும் அதிரடியாக திரும்ப பெறப்பட்டு, கூடுதல் ஆணையராக பதவி உயர்வு கொடுக்கப்பட்டுள்ளது.
சட்டத்துக்கு புறம்பாக, விதிமுறைகளை மீறி இணை ஆணையர் ஹரிப்ரியாவுக்கு கூடுதல் ஆணையராக பதவி உயர்வு அளித்தது தொடர்பாக மக்கள்செய்திமையம் வழக்கு தொடரவும் முடிவு செய்துள்ளது..