Breaking News
Home / பிற செய்திகள் / ஆவடி மாநகராட்சி.. அரசு ஜீப்பில் இலஞ்ச பணம்.. சுகாதார அதிகாரி மோகனின் அட்டூழியம்..

ஆவடி மாநகராட்சி.. அரசு ஜீப்பில் இலஞ்ச பணம்.. சுகாதார அதிகாரி மோகனின் அட்டூழியம்..

    ஆவடி மாநகராட்சியில் 05.01.2021 அன்று விஜிலென்ஸ் அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்திய போது வருவாய் ஆய்வாளர் சத்தியமூர்த்தியும், புரோக்கர் வின்செண்ட் இருவரும் ரூ5000 இலஞ்சம் வாங்கும் போது, பிடிப்பட்டார்கள்.

 இதை தொடர்ந்து விஜிலென்ஸ் அதிகாரிகள் மாநகராட்சியில் அதிரடி சோதனை நடத்திய போது, சுகாதார பிரிவு அதிகாரி மோகன், ரூ4 இலட்சத்தை,  அரசு ஜீப்பில் (TN20AL8787) டிரைவர் சீட்டுக்கு அடியில் வைத்திருந்தார். இதை விஜிலென்ஸ் அதிகாரிகள் கவனிக்கவில்லை.

 மேலும் ரூ2 இலட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு  சுகாதார அதிகாரி மோகன் ஒடி, ஆட்டோ ஸ்டாண்டில் தூக்கி எறிந்தார். இதில் ஒரு இலட்சம் ஆட்டோக்காரர்கள் எடுத்துக்கொண்டார்கள், மீதி விஜிலென்ஸ் அதிகாரிகள் கைப்பற்றினார்கள்..

 ஆவடி மாநகராட்சியில் கணக்கு அதிகாரி திலகம், ரூ50,000த்தை கழிப்பறையில் தூக்கி எறியும் போது, கையும் களவுமாக பிடிப்பட்டார்.

 விஜிலென்ஸ் அதிகாரிகளிடம் தப்பித்த சுகாதார அதிகாரி மோகன், மேலும் ரூ20 இலட்சத்தை தன் ஜீப்பில் எடுத்துக்கொண்டு, 9வது தெரு, ஸ்ரீராம் நகர், அம்பத்தூர் தன் வீட்டில் பதுக்கி வைத்தார் மோகன்.

 விஜிலென்ஸ் அதிகாரிகள் தொடர்ந்து ஆவடி மாநகராட்சி அலுவலகத்தில் இருப்பதால், எங்கே தன் வீட்டை ரெய்டு செய்து, பிடித்து விடுவார்களோ என்று ஆவடி மாநகராட்சியில் ஆணையராகவும், இருந்து ஆர்.டி.எம்.ஏவாக ஒய்வு பெற்ற மோகனுக்கு ஆவடியில் பல வீடுகள், பல பிரியாணி கடைகள்  உள்ளது. மோகன் குடியிருக்கும் வீட்டில் இரவு முழுவதும் பாதுகாப்பாக வைத்தார் மோகன்..  விஜிலென்ஸ் அதிகாரிகள் சுகாதார அதிகாரி மோகன் வீட்டை ரெய்டை பல இலட்சம் சிக்கியிருக்கும்.

  சுகாதார அதிகாரி மோகனின் தம்பி சட்டத்துக்கு புறம்பாக ஆவடி மாநகராட்சியில் பணியாற்றுகிறார். மோகன் தன் தம்பி மூலம் கீரின்வாரியர்ஸ் குப்பை அள்ளும் நிறுவனத்தில் 48 வார்டுகளில் உதாரணமாக 150 பேர் பணியாற்றுகிறார்கள் என்றால் 200 பேர் பணியாற்றுவதாக போலி வருகை பதிவேடு(மஸ்டர் ரோல் ஊழல்) பதிவு செய்து, கொள்ளையடிக்கிரார் மோகன்..

  இலஞ்சம் வாங்கும் போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சத்தியமுர்த்தி அக்கா இந்திராணி 06.01.2021ல் அலுவலகத்துக்கு வரவில்லை. லீவு லட்டரும் கொடுக்கவில்லை. 07.01.2021, 08.01.2021 ஆகிய இரு நாட்களும் இந்திராணி  வருகை பதிவேட்டில் கையெழுத்து போட்டுவிட்டு, தம்பியை ஜாமீனில் எடுக்க அலைந்து வருகிறார். இதனால் அலுவலக பணிகள் முடங்கி போய் உள்ளது.

 கழிப்பறையில் ரூ50,000த்தை தூக்கி எறிந்து சிக்கிய கணக்கு அதிகாரி திலகம், ஆட்டோ ஸ்டாண்டில் ரூ2இலட்சத்தை தூக்கி எறிந்த சுகாதார அதிகாரி மோகன் இருவர் தூக்கி எறிந்த பணத்தையும் விஜிலென்ஸ் கைப்பற்றியுள்ளது.  மோகன், திலகம் இருவர் மீது விஜிலென்ஸ் வழக்கு பதிவு செய்து,  ஆவடி மாநகராட்சி பணியிலிருந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 விஜிலென்ஸில் சிக்கி பணம் பறிமுதல் செய்யப்பட்ட சுகாதார அதிகாரி மோகன், கணக்கு அதிகாரி திலகம் இருவரையும்  நகராட்சி நிர்வாக ஆணையரகம் உடனடியாக  ஆவடி மாநகராட்சி பணியிலிருந்து விடுவிக்குமா.. அல்லது வழக்கம் போல் நகராட்சி நிர்வாகம் குறட்டைவிடுமா என்று பார்ப்போம்.

Comments

comments

About mani bharathi

Check Also

ஊரக வளர்ச்சித்துறை… முத்துமீனாள், வீரபத்ரன், விஜயலட்சுமி-கூட்டணியின் ஊழல் ஆட்டம்…

  ஊரக வளர்ச்சி ஆணையரகத்தின் கூடுதல் இயக்குநராக இருக்கும் முத்துமீனாள்(ராம்மோகன்ராவ் ஐ.ஏ.எஸ்(ஒய்வு) தம்பி மனைவி), உள்ளாட்சித்துறை அமைச்சரின் உதவியாளராக பணியாற்றிய …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *