Breaking News
Home / பிற செய்திகள் / ஸ்ரீரங்கம் ரெங்கநாதரை- விற்பனை செய்த இணை ஆணையர் ஜெயராமன்… பிரிவு உபச்சாரவிழாவில் கார் பரிசு… விடுதியை பொறியாளர் ரவிச்சந்திரனுக்கு விற்பனை…

ஸ்ரீரங்கம் ரெங்கநாதரை- விற்பனை செய்த இணை ஆணையர் ஜெயராமன்… பிரிவு உபச்சாரவிழாவில் கார் பரிசு… விடுதியை பொறியாளர் ரவிச்சந்திரனுக்கு விற்பனை…

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் இணை ஆணையராக, 2014 மே மாதம், ஜெயராமன் பொறுப்பேற்றார். 79 மாதங்களில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதரையே விற்பனை செய்துவிட்டார். தற்போது அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் கல்வி நிறுவனங்களின் இணை ஆணையராக சென்னைக்கு மாறுதல் செய்யப்பட்டுள்ளார்.

 இணை ஆணையர் ஜெயராமனுக்கு நடந்த பிரிவு உபச்சாரவிழாவில் கார் பரிசு வழங்கப்பட்டது. ஆள் உயர வெள்ளி செங்கோல் அளிக்கப்பட்டுள்ளது. ஜெயராமன் தன்னை இந்து அறநிலையத்துறை அமைச்சர் நான் தான் என்று வெளிப்படையாக பேசிவருகிறார்.

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலுக்கு சொந்த பல்லாயிரம் கோடிக்கணக்கான நிலங்கள் உள்ள நிலையில் ரூ.2,000 கோடி ரூபாய் மதிப்புள்ள கோவிலுக்கு சொந்தமான நிலங்களை மீட்டும் பல ஆயிரம் கோடி சொத்துகளை ஆறு ஆண்டுகளில்  ரெங்கநாதர் கோவிலில், இணை ஆணையராக இருந்த ஜெயராமன் தனியாருக்கு தாரைவார்த்துவிட்டார்.

 ஸ்ரீரங்கம் கோயிலுக்கு சொந்தமான விடுதியை, ஸ்ரீரங்கம் நகராட்சியில் பொறியாளராக இருந்த  பி.வி.ரவிச்சந்திரன் பினாமி முன்னாள் மதுக்கூர் சேர்மன் தண்டபாணி பெயரில் குத்தகைக்கு எடுத்து நடத்தினார்.

  ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் ஜெயராமன், பொறியாளர் பி.வி.ரவிச்சந்திரனின் பினாமி முன்னாள் மதுக்கூர் சேர்மன் தண்டபாணிக்கு பெயருக்கு விற்பனை செய்துவிட்டார்.

   ஸ்ரீரங்கத்தில் பாராட்டு விழா மற்றும் பிரிவு உபச்சார விழா நடத்தப்பட்டது. ஸ்ரீரங்கம் முழுவதும், ஜெயராமனுக்கு கட் அவுட் வைக்கப்பட்டு இருந்தது. உபச்சார விழாவில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள பல்வேறு கோவில் நிர்வாகங்கள் சார்பில், கார் பரிசு அளித்து இருக்கிறார்கள். மேலும் 6 அடி உயர வெள்ளி செங்கோல் பரிசு அளிக்கப்பட்டுள்ளது. அரசியல்வாதிகளை மீஞ்சும்  அளவுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டு இருக்கிறது.  ஜெயராமன்  அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கல்வி நிறுவனங்கள் மற்றும் காப்பகங்களின் இணை ஆணைராக மாறுதல் செய்யப்பட்டுள்ளார்.

 இனி இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கல்வி நிறுவனங்கள் சொத்துக்களை  தனியாருக்கு தாரைவார்க்கும் பணியை அல்லது விற்பனை செய்யும் பணியை  இணை ஆணையர் ஜெயராமன் விரைவில் தொடங்குவார்..

 ஸ்ரீரங்கம் ரெங்கநாதரை விற்பனை செய்த இணை ஆணையர் ஜெயராமன் ஒரு பக்கம் இருக்க, மாங்காடு அருள்மிகு காமாட்சியம்மன் கோயிலுக்கு காணிக்கையாக வரப்பெற்ற பட்டுப்புடவை ஏலம் விடாமல், அடிமாட்டு விலைக்கு தன் பெயரில் எடுத்துக்கொண்ட, உறையூர் வெக்காளி அம்மன் கோயில் அம்மனுக்கு  தங்கரதம் செய்ததில் ஊழல் செய்த இணை ஆணையர் ஹரிப்ரியாவுக்கு சட்டத்துக்கு புறம்பாக கூடுதல் ஆணையர் பதவி உயர்வு கொடுத்த ஊழல் கதையை நாளை பார்க்கலாம்..

Comments

comments

About mani bharathi

Check Also

ஊரக வளர்ச்சித்துறை… முத்துமீனாள், வீரபத்ரன், விஜயலட்சுமி-கூட்டணியின் ஊழல் ஆட்டம்…

  ஊரக வளர்ச்சி ஆணையரகத்தின் கூடுதல் இயக்குநராக இருக்கும் முத்துமீனாள்(ராம்மோகன்ராவ் ஐ.ஏ.எஸ்(ஒய்வு) தம்பி மனைவி), உள்ளாட்சித்துறை அமைச்சரின் உதவியாளராக பணியாற்றிய …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *