
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அய்யா, தினமும் வெளியிடும் அறிக்கை, டிவி மீடியாக்களில் முதல்வர் பேட்டியுடன் வரும் விளம்பரம், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் பேட்டி இப்படி எல்லாவற்றிலும் முகக்கவசம் கண்டிப்பாக அணிய வேண்டு, சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும், சோப்பு போட்டு அடிக்கடி கையை கழுவ வேண்டும் என்பதுதான்..
திரையரங்களில் 100 சதவிகித இருக்கைகளுடன் திரைப்படங்களை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. 50 சதவிகித இருக்கைகளுக்கு மட்டுமே டிக்கெட் தர வேண்டும் என்று என்று கூறப்பட்டுள்ளது. மத்திய அரசும் திரையரங்களில் 50 சதவிகித இருக்கைகள் மட்டுமே டிக்கெட் தர வேண்டும் என்று கூறியுள்ளது.
அதிமுக பொதுக்குழு கூட்டம், வானகரம் ஸ்ரீவாரி திருமண மண்டபத்தில், குளு, குளு ஏசியில் நடந்தது. சமூக இடைவெளி கடைபிடிக்கவில்லை. 50 சதவிகிதத்துக்கு அதிகமானவர்கள் முகக் கவசம் அணியவில்லை.


அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் முகக்கவசம் அணியவில்லை, சமூக இடைவெளி கடைபிடிக்கவில்லை என்று யார் நடவடிக்கை எடுப்பது..சென்னை மாநகர காவல்துறை வழக்கு பதிவு செய்யுமா.. அதிமுக அரசு ஊருக்குதான் உபதேசம் சொல்லுகிறது