
அதிமுக அரசில் அதிகம் ஊழல் நடந்த துறைகளில் உள்ளாட்சித்துறையும், சுகாதாரத்துறையும் முதலிடம் பெறுவதில் பலத்த போட்டி நடக்கிறது.
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீண்டும் விராலிமலை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளார். விராலிமலை தொகுதியில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பொங்கல் பண்டிகைக்காக 800 கிராம் எடையுள்ள, பித்தளை தவலை தவளைக்கு எவர்சில்வர் மூடி, எவர்சில்வர் கரண்டி மூன்றையும் இலவசமாக கொடுக்க 1.25 இலட்சம் ஆர்டர் கொடுத்துள்ளார்(1.25இலட்சம் வீடுகளுக்கு)
பித்தளை தவலை கும்பகோணம், நாச்சியார்கோயில் உள்ள அனைத்து பித்தளை பட்டறைகளிலும் ஆர்டர் கொடுத்துவிட்டார்கள். 800 கிராம் பித்தளை தவலை வெளி மார்க்கெட் விலை ரூ700 முதல் ரூ800 வரை. ஆனால் அமைச்சர் விஜயபாஸ்கர் ரூ600க்கு 1.25 இலட்சம் ஆர்டர் கொடுத்தார்கள். ஆனால் 75,000க்கு மேல் எங்களால் சப்ளை செய்ய முடியாது என்று கும்பகோணம் பித்தளை பட்டறைகளில் கூறிவிட்டார்கள்.
அதனால் மீதி 50,000 பித்தளை தவலை, உ.பி மாநிலம் மொராடாபாத்தில் ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. பித்தளை தவலைக்கு எவர்சில்வர் மூடி, எவர்சில்வர் கரண்டி இரண்டும் சென்னை முருகன் இண்டஸ்டீரிஸ்(பட்டர்பிளை நிறுவனத்தின் இணைப்பு தொழிற்சாலை) ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது.
பித்தளை தவளை, எவர்சில்வர் மூடி, எவர்சில்வர் கரண்டி மூன்று சேர்த்து விலை ரூ1000/-பித்தளை தவலையில் அரிசி, வெல்லம், முந்திரிபருப்பு, பாசிபருப்பு, ஏலக்காய் இருக்கும்.
1.25இலட்சம் வீடுகளுக்கு கொடுக்கப்படுகிறது.. சின்னகணக்கு ஒரு வீட்டுக்கு ரூ1000 என்றால் 1.25இலட்சம் வீட்டுக்கு கணக்கீட்டால் ரூ12.50கோடி..
ரூ12.50கோடி சுகாதாரத்துறையில் வாங்கிய இலஞ்சம், வாங்கிய கமிசன் என கொள்ளையடித்த பணம். பித்தளை தவலைக்கு பில் வேண்டாம் என்று கூறி பணமாக கொடுத்து வருகிறார். எவர்சில்வர் மூடி, எவர்சில்வர் கரண்டிக்கு பில் கிடையாது. அதாவது ரூ12.50கோடி கருப்பு பணமாக கொடுக்கப்பட்டு வருகிறது..
ரூ12.50கோடி பில் போட்டு இருந்தால், அரசு ஜி.எஸ்.டி கிடைத்திருக்கும். அமைச்சரே ஜி.எஸ்.டி வரியை ஏமாற்றலாமா என்று முட்டாள் தனமாக கேள்வியெல்லாம் கேட்காதீர்கள்..
1.25 இலட்சம் வீட்டுக்கு ரூ12.50கோடியில் பித்தளை தவலை, எவர்சில்வர் மூடி, எவர்சில்வர் கரண்டி என விலை இல்லாமல், பொங்கல் பரிசாக விராலிமலை தொகுதியில் அமைச்சர் விஜயபாஸ்கர் கொடுக்கிறார்..
விராலிமலை தொகுதியில் மீண்டும் வெற்றி பெற அமைச்சர் விஜயபாஸ்கர் ரூ100கோடி செலவு செய்ய முடிவு செய்துள்ளார்..
வருமான வரி இன்னும் குறட்டைவிடுகிறது.. அமைச்சர் விஜயபாஸ்கர் வருமான வரித்துறை அதிகாரிகளை விலைக்கு வாங்கிவிட்டாரா..