
ஆவடி மாநகராட்சியில் 5.1.2021ல் விஜிலென்ஸ் நடத்திய அதிரடி ரெய்டில் வருவாய் ஆய்வாளர் சத்தியமூர்த்தி, புரோக்கர் வின்செண்ட் இருவரும் ரூ5000/- லஞ்சம் வாங்கும் போது கைது செய்யப்பட்டு, 06.01.2021ல் சிறையில் அடைக்கப்பட்டார்கள்..




- விஜிலென்ஸ் அதிகாரிகள் ஆவடி மாநகராட்சிக்குள் நுழைந்த போது, கணக்கு அதிகாரி திலகம் ரூ50,000/ -பணத்தை பாத்ரூமில் தூக்கி எறிந்தார். விஜிலென்ஸ் அதிகாரிகள் துரத்தி சென்று பிடித்து பணத்தை கைப்பற்றினார்கள்.
- ரூ50,000 கழிப்பறையில் போட்டு, தண்ணீரை ஊற்றிவிட்டார்கள். பணம் மிதந்தது அந்த பணம் யாருடையது என்று தெரியவில்லை.
- சுகாதாரப்பிரிவு ஆய்வாளர் அப்துல்ஜப்பார் ரூ2 இலட்சம் பணத்துடன், சாவிக் கொடுத்துடன் வந்தார், விஜிலென்ஸை கண்டவுடன் மதில் சுவர் ஏறிக்குதித்து ஒடி ஆட்டோ ஸ்டாண்டில் பணத்தை தூக்கி எறிந்தான். ஆட்டோ டிரைவர்கள் பலர் பணத்தை எடுத்துக்கொண்டது போது, ரூ1 இலட்சத்தை விஜிலென்ஸ் அதிகாரிகள் கைப்பற்றினார்கள்..
- சுகாதாரப்பிரிவு ஆய்வாளர் அப்துல்ஜப்பார் தூக்கியெறிந்த பணம், சுகாதாரபிரிவு அதிகாரி மோகன் கொடுத்த பணம் என்று கூறுகிறார்.
- வருவாய் ஆய்வாளர் சத்தியமூர்த்தியின் அக்கா இந்திராணிதான் வருவாய் அதிகாரி. தம்பி சத்தியமூர்த்தி சிக்கியுடன், ரூ20 இலட்சம் இலஞ்ச பணத்தை விஜயன் வீடு, பத்திரிகை நிருபரின் வீடு என 20 வீடுகளுக்கு பணம் மாற்ற பணியை, ஆணையர் நாராயணன் ஒப்புதலுடன் வருவாய் அதிகாரி இந்திராணி செய்தார்.
- 07.01.2021 வருவாய் அதிகாரி இந்திராணி பணிக்கு வரவில்லை. லீவு லட்டரும் கொடுக்கவில்லை. ஆணையர் நாராயணன் இந்திராணி ஏன் வேலைக்கு வரவில்லை என்ற கேட்கவும் இல்லை. ஆவடி மாநகராட்சி என்ன சத்திரமா..சாவடியா.. நகராட்சி நிர்வாக ஆணையரகத்தில் அதிகாரிகள் ஏன் கண்டுகொள்ளவில்லை.
- வருவாய் அதிகாரி இந்திராணி, தம்பி சத்தியமுர்த்தியை ஜாமீனில் எடுக்க, ஆவடி மாநகராட்சிக்கு வேலைக்கு வராமல், எந்த தகவலும் கொடுக்காமல் அலைந்துக்கொண்டு இருக்கிறார்.
- விஜிலென்ஸில் புகார் கொடுத்த கலைச்செல்வியை, சத்தியமூர்த்தியின் அக்கா இந்திராணி கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டினார்.
- நகரமைப்பு ஆய்வாளர் கணேசமூர்த்தி, 15 நாட்கள் லீவுக்கு தம்மாதுண்டு பேப்பரில் அனுப்பிய கடிதத்தை எப்படி ஆணையர் நாராயணன் ஏற்றுக்கொண்டார். கணேசமூர்த்திக்கு நெஞ்சுவலியா என்ன.. மருத்துவ சான்றிதழில் எங்கே?
- கணேசமூர்த்தில் 15 நாட்கள் லீவு போட்டுவிட்டு, எப்படி நகராட்சி நிர்வாக ஆணையர் பாஸ்கரன் ஐ.ஏ.எஸ்யை சந்தித்தார்..
- ஆவடியில் விஜிலென்ஸ் ரெய்டு நடந்தது தொடர்பாக, பாஸ்கரன் ஐ.ஏ.எஸ்க்கு அ,ஆ கூட தெரியாது. பிறகு எதற்கு ஆணையராக இருக்கிறார். மாமூல் வாங்க மட்டுமா?
இப்படி ஆவடி மாநகராட்சியில் பல கேள்விகள் எழுந்துள்ளது. ஆணையர் நாராயணன், புரோக்கர் கம் ஒய்வு பெற்ற ஆர்.டி.எம்.ஏ மோகன் வீட்டில் இருந்துக்கொண்டு அடிக்கும் கூத்து எல்லை மீறி போய்க்கொண்டு இருக்கிறது..

நகராட்சி நிர்வாக ஆணையர் பாஸ்கரன் ஐ.ஏ.எஸ், கூடுதல் இயக்குநர் அசோகன் உள்ளிட்ட அதிகாரிகள் எதைப்பற்றி கவலைப்படாமல், நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் குளு, குளு அறையில் பொழுதை கழித்து வருகிறார்கள்..