Breaking News
Home / பிற செய்திகள் / பல்லவபுரம் நகராட்சி.. பொறியாளர் ரவிச்சந்திரனின் சொத்து பட்டியல்… ரவிச்சந்திரனின் பினாமி யார்…யார்..

பல்லவபுரம் நகராட்சி.. பொறியாளர் ரவிச்சந்திரனின் சொத்து பட்டியல்… ரவிச்சந்திரனின் பினாமி யார்…யார்..

பல்லவபுரம் நகராட்சியில் 05.11.2020 அன்று நடந்த விஜிலென்ஸ் ரெய்டில் நகரமைப்பு அதிகாரி மாறன், பொறியாளர் பட்டுக்கோட்டை ரவிச்சந்திரன் இருவரும் சிக்கினார்கள். 43 நாட்கள் கழித்து பல்லவபுரம் நகராட்சி பணியிலிருந்து விடுவிக்கப்பட்டார்கள்..

 நான் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் சம்பந்தி என்ற டூபாக்கூர் கதை சொல்லிக்கொண்டு இருந்த பொறியாளர் ரவிசந்திரன் விஜிலென்ஸில் சிக்கினார். விஜிலென்ஸ அதிகாரிகளுக்கு மாதா, மாதம் இலஞ்சம் கொடுத்தேன். என்னை ஒருவரும் காப்பாற்றவில்லை என்று புலம்பி வருகிறார். நகராட்சிகளில் கொள்ளையடித்த பணத்தில் வாங்கிய சொத்தின் மதிப்பு ரூ100கோடியை தாண்டுமாம்..

                       பொறியாளர் ரவிச்சந்திரன் சொத்துப்பட்டியல்…

  1. வீட்டு எண்.1078, மெகா ஷெல்டர்ஸ், ஆபிசர்ஸ் காலனி மெயின் ரோடு, அண்ணாநகர் மேற்கு விரிவாக்கம், சென்னை -101
  2. பட்டுக்கோட்டை வட சேரி செல்லும் சாலையில் AAA  வணிக வளாகம்.
  3. பட்டுக்கோட்டை புதிய பேரூந்து நிலையம் எதிரில், ரயில் ஸ்டேசன் சாலையில் AAAலாட்ஜ் மற்றும்  AAA பேலஸ்(திருமண மண்டபம்)
  4. பட்டுக்கோட்டை மணியார்புரத்தில் உள்ள தனி மாடி வீடு
  5. பட்டுக்கோட்டை மணியார்புரத்தில்  பழைய வீட்டுக்கு அருகில் உள்ள வீட்டை செட்டியார் சமூகத்தை சேர்ந்தவர்களை மிரட்டி எழுதி வாங்கிய வீடு.
  6. பட்டுக்கோட்டை மணியார்புரம் வீட்டிற்கு அருகில் ரவிச்சந்திரன்  அன்ணன் மகன் விவேக் இடமிருந்து வாங்கிய காலி மனை.
  7. பட்டுக்கோட்டை மணியார்புரம் பழைய வீட்டுக்கு எதிர்புறம் ரவிச்சந்திரன் மைத்துனர் இடத்தை வாங்கி, வீடு கட்டி, மைத்துனரை குடி வைத்துள்ளார்.
  8. பட்டுக்கோட்டை பண்ணவவல் ரோட்டில் காலி நிலத்தின் உரிமையாளர் அறிவழகன், தம்பிக்கோட்டை லோகநாதனிடம் விற்பனை செய்ய, அக்ரிமெண்ட் போட்டு இருந்தார். லோகநாதனின்  அக்ரிமெண்டை மீறி, அந்த காலி மனை வாங்கி, மகன் அபினேஷ் மற்றும் ரவிச்சந்திரன் மாமனார் சம்பந்தம் பெயரில் பதிவு செய்துள்ளார்.
  9. பட்டுக்கோட்டை அருகில் பள்ளத்தூர் கிராமம் பேராவூரணி தாலுகாவில் அண்ணன், தம்பி பெயரில் இருந்த தென்னந்தோப்பு. அண்ணன் இறந்துவிட்டார். தம்பி, அண்ணன் பாகத்தை அண்ணிக்கு பிரித்து கொடுக்கவில்லை. தம்பியை மிரட்டி தென்னந்தோப்பை ரவிச்சந்திரன் அக்கா மகன் வில்வாடி சிவா பெயரில் வாங்கி பதிவு செய்துள்ளார்.
  10. தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை மகராஜசமுத்திரம் கிராமம் லெட்சத்தோப்பில் பழைய சர்வே எண். 250/2, புதிய சர்வே எண்.250/4 புஞ்சை நிலம் 2.83 ஏக்கர் நிலம் மகன் அபினேஷ் மற்றும் மாமனார் சம்பந்தம் பெயரில் உள்ளது
  11. பட்டுக்கோட்டை கைலாசநாதபுரம் கிராமம், மணியார்புரம் பகுதி சர்வே எண்.8/3 புஞ்சை -25 சென்ட், சர்வே எண்.2/3ல் 35 சென்ட் மற்றும் டவுன் சர்வே எண்.99/2ல் 8712 சதுர அடி மகன் அபினேஷ் பெயரில் வாங்கி உள்ளார்.
  12. பட்டுக்கோட்டை பண்ணவயல் போகும் வழியில் பல கோடி மதிப்புள்ள காலி இடங்கள்  மூத்த மகன் அபினேஷ் மற்றும் ரவிச்சந்திரன் மாமனார் சம்பந்தம் பெயரில் வாங்கியுள்ளார்.
  13. ரவிச்சந்திரன் பெயரில் கதவு எண்.179, மணியார்புரம், கண்டியன் தெருவில் உள்ள வீடு.
  14. அம்பத்தூர் தொழில் பேட்டையில்  மனைவி உமாவதி பெயரில் தொழிற்சாலை, மைத்துனர் ரமேஷ் நடத்தி வருகிறார்.
  15.  பாண்டிசேரியில் புதிய தொழிற்சாலையின் கட்டுமான பணி நடக்கிறது..
  16. ஸ்ரீரங்கம் நகராட்சிக்குட்பட்ட விடுதியை ரவிச்சந்திரன், மதுக்கூர் பழைய சேர்மன் தண்டபாணி பெயரில் குத்தகைக்கு எடுத்து நடந்தி வந்தார். அந்த விடுதியை விலைக்கு வாங்கிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
  17. நான்கு உயர் ரக கார்களின் மதிப்பு ரூ5கோடி..

பொறியாளர் ரவிச்சந்திரன் மற்றும் மகன் அபினேஷ், மாமனார் சம்பந்தம் உள்ளிட்ட  பல பினாமி பெயரில் உள்ள சொத்துப்பட்டியலை வெளியிட்டு உள்ளோம்.  

ரவிச்சந்திரன் மீது  வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு பதிவு செய்யும் படி ஊழல்  தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்துக்கு ஆதாரங்களுடன் மக்கள் செய்திமையம் புகார் அனுப்பி உள்ளது.

Comments

comments

About mani bharathi

Check Also

ஊரக வளர்ச்சித்துறை… முத்துமீனாள், வீரபத்ரன், விஜயலட்சுமி-கூட்டணியின் ஊழல் ஆட்டம்…

  ஊரக வளர்ச்சி ஆணையரகத்தின் கூடுதல் இயக்குநராக இருக்கும் முத்துமீனாள்(ராம்மோகன்ராவ் ஐ.ஏ.எஸ்(ஒய்வு) தம்பி மனைவி), உள்ளாட்சித்துறை அமைச்சரின் உதவியாளராக பணியாற்றிய …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *