
மாண்புமிகு முதல்வர் டாக்டர் எடப்பாடி பழனிசாமி அய்யா, ஈரோடு மாவட்டம் பவானியில் மேற்க்கொண்ட தேர்தல் பிரச்சாரத்தில் ஸ்டாலின் அதிமுக அரசு ஊழல் அரசு என்று சொல்லி வருகிறார். ஊழல் குறித்து ஸ்டாலினுடன் விவாதிக்க நான் தயார் என்று ஆவேசமாக பேசியுள்ளார்

திமுக தலைவர் ஸ்டாலின் உடன் அதிமுக அரசின் ஊழலை விவாதிக்க வேண்டாம். மக்கள்செய்திமையத்தின் ஆசிரியரும், மூத்த பத்திரிகையாளரும், சென்னை பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவருமான அன்பு என்கிற அன்பழகன், அதிமுக அரசின் ரூ5000 கோடி ஊழலை ஆதாரங்களுடன்(17,000 பக்கங்கள் ஆதாரங்களுடன்) பொது மேடையில், பொது மக்கள் முன்னிலையில் விவாதிக்க தயாராக உள்ளார்.
ரூ387.75கோடிக்கான ஊழல் தொடர்பாக நிதித்துறையின் குறிப்புக்கோப்புடன்/நோட் பைல் உடன் விவாதிக்க தயார்..
மாண்புமிகு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அய்யா, சென்னையில் வள்ளூவர் கோட்டத்தில் பொது மேடையில், பொது மக்கள் முன்னிலை அதிமுக அரசின் ஊழலை ஆதாரங்களுடன் விவாதிக்க, தேதியை நிர்ணயம் செய்வார்களா…
மக்கள்செய்திமையம் ஆசிரியர் அன்பழகன் அதிமுக அரசின் ஊழலை அம்பலப்படுத்த சவால் விட்ட காரணத்தால், அன்பழகனை பொய் வழக்கில் கைது செய்து, சிறையில் அடைப்பார்களா என்று பார்ப்போம்..