
ஆவடி மாநகராட்சியில் வருவாய் ஆய்வாளராக இருக்கும் சத்தியமூர்த்தி, வருவாய் அதிகாரி சத்தியமூர்த்தியின் அக்கா இந்திராணி, கணக்கு அதிகாரி திலகம் மூவரும் போடும் ஊழல் ஆட்டம் எல்லை மீறி போய்க்கொண்டு இருக்கிறது.
இந் நிலையில் 05.01.2021 அன்று ஆவடி மாநகராட்சியில் விஜிலென்ஸ் நடத்திய அதிரடி ரெய்டில் ரூ5000/- இலஞ்சம் வாங்கும் போது வருவாய் ஆய்வாளர் சத்தியமூர்த்தியும், வின்சென்ட் இருவரும் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.
வருவாய் அதிகாரி சத்தியமூர்த்தி, அவரது மனைவி நர்மதா பி.டி.ஒவாக புழலில் இரண்டு வருடம் பணியாற்றிய போது, பல லட்சம் மதிப்புள்ள இரண்டு வீட்டுமனைகள் வாங்கிவிட்டார். ஊழலில் சிக்கி 17பி குற்றச்சாட்டு குறிப்பாணையும் கொடுக்கப்பட்டுள்ளது. சத்தியமூர்த்தி, நர்மதாவுக்கு பெட்ரோல் பங்க் உள்ளிட்ட ரூ100கோடிக்கு சொத்து உள்ளது.
ஆவடி மாநகராட்சி கணக்கு அதிகாரி திலகம் ரூ4.50கோடி சேம நல நிதி மோசடியில் சிக்கியுள்ளார். விரைவில் திலகம் கைது செய்யப்பட வாய்ப்புகள் உள்ளது.

விஜிலென்ஸ் அதிகாரிகளிடம், ரூ5000/- இலஞ்சம் வாங்கி சிக்கிய சத்தியமூர்த்தி, விஜிலென்ஸ் அதிகாரிகளிடம் நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் கூடுதல் இயக்குநர் அசோகனுக்கு மாதா, மாதம் மாமூல் கொடுக்க வேண்டும். அசோகனுக்கு கொடுக்க வாங்கிய லஞ்சம் வாங்கினோம் என்று வாக்குமூலம் கொடுத்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் பேரில் கூடுதல் இயக்குநர் அசோகன் மீது விஜிலென்ஸில் அதிகாரிகள் வழக்கு பதிவு செய்ய வேண்டும்.
அதே போல் கணக்கு அதிகாரி திலகம் ரூ50,000/ -த்தை பாத்ரூமில் தூக்கி எறிந்த போது, சிக்கினார். அப்போது திலகம், இந்த பணம் கூடுதல் இயக்குநர் அசோகனுக்கு கொடுக்க வேண்டியது என்று ஆவேசமாக கத்தினார்.
நகராட்சி நிர்வாக கூடுதல் இயக்குநர் அசோகனுக்கு, ஒவ்வொரு நகராட்சியிலும் மாதா, மாதம் மாமூல் கொடுக்கப்படுவது உறுதியாகிறது.
ஆவடி மாநகராட்சி நகரமைப்பு ஆய்வாளர் கணேசமூர்த்தி மிட்டனமல்லி, முத்தாபுதுப்பேட்டை ஆகிய பகுதிகளில் நீர் பிடிப்பு பகுதிகள், நீர் வழி புறம்போக்கு, மேய்க்கால் புறம்போக்கு ஆகிய புறம்போக்கு நிலங்களில் கட்டிட கட்ட அனுமதி அளித்த விவகாரத்தில் விஜிலென்ஸில் சிக்கினார். விஜிலென்ஸ் வளையத்துக்குள் இருக்கும் போது கனேசமூர்த்தி 15 நாட்கள் லீவில் சென்று தலைமறைவாகிவிட்டார்.
கணேசமூர்த்தி ஜாதி ரீதியாக செயல்படுவதால், கூடுதல் இயக்குநர் அசோகனை சந்தித்து ஒரு மணி நேரம் சந்தித்து பேசினார். கணேசமூர்த்தியும், அசோகனும் ஒன்றாக, ஒரே காரில் சென்றார்கள். கணேசமூர்த்தியை எப்படியாவது காப்பாற்றுவதாக உறுதியளித்துள்ள கூடுதல் இயக்குநர் அசோகனை, பண மழையில் குளிரவைத்தார் கணேசமூர்த்தி.


கணேசமூர்த்தி, விஜிலென்ஸில் சிக்கி, பல்லவபுரம் நகராட்சியிலிருந்து விடுவிக்கப்பட்ட மாறனை சந்தித்து ஆலோசனை செய்தார். பல்லவபுரம் நகராட்சி ஆணையருடன், நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்தார். நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் கூடுதல் இயக்குநர் அசோகன் தலைமையில் நகரமைப்பு அதிகாரி மாறன், நகரமைப்பு ஆய்வாளர் கணேசமூர்த்தி, பொறியாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட இலஞ்ச மாபியா அதிகாரிகள் மக்கள்செய்திமையத்துக்கு எதிராக சதித்திட்டம் செய்து வருகிறார்கள் என்பது அம்பலமாகி உள்ளது.
மக்கள்செய்திமையம் நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் கூடுதல் இயக்குநர் அசோகன், திருப்பூர் மாநகராட்சியில் ஆணையராக பணியாற்றிய போது, கோடிக்கணக்கில் நடந்த ஊழலுக்கான ஆதாரங்களை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்தில் உள்ளாட்சி நிதித் தணிக்கை அறிக்கை ஆதாரத்துடன் புகார் கொடுத்துள்ளது.