Breaking News
Home / பிற செய்திகள் / ஆவடி மாநகராட்சி.. விஜிலென்ஸ் ரெய்டு சத்தியமூர்த்தி, வின்சென்ட் கைது.. திலகம் தப்பி ஒட்டம்..

ஆவடி மாநகராட்சி.. விஜிலென்ஸ் ரெய்டு சத்தியமூர்த்தி, வின்சென்ட் கைது.. திலகம் தப்பி ஒட்டம்..

ஆவடி மாநகராட்சியில் வருவாய் ஆய்வாளராக இருக்கும் சத்தியமூர்த்தி, வருவாய் அதிகாரி சத்தியமூர்த்தியின் அக்கா இந்திராணி, கணக்கு அதிகாரி திலகம் மூவரும் போடும் ஊழல் ஆட்டம் எல்லை மீறி போய்க்கொண்டு இருக்கிறது.

 கணக்கு அதிகாரி திலகம் ரூ4.50கோடி சேம நல நிதி மோசடியில் சிக்கியுள்ளார். விரைவில் கைது செய்யப்பட வாய்ப்புகள் உள்ளது.

 இந் நிலையில் 05.01.2021 அன்று ஆவடி மாநகராட்சியில் விஜிலென்ஸ் நடத்திய அதிரடி ரெய்டில் ரூ5000/- இலஞ்சம் வாங்கும் போது வருவாய் ஆய்வாளர் சத்தியமூர்த்தியும், வின்சென்ட் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள். கணக்கு அதிகாரி திலகம் தப்பி ஒட்டம்..

  கலைச்செல்வி என்பவர் காலிமனை வரி சுயமதிப்பீட்டு படிவத்தை கொடுத்து, வரி விதிக்கும்படி கூறினார், வருவாய் ஆய்வாளர் சத்தியமூர்த்தி இலஞ்சம் கொடுத்தால் தான் வரி விதிக்க முடியும் என்று பல முறை அலையவிட்டார். கடைசியாக சத்தியமூர்த்தி உதவியாளர் கம் புரோக்கர் வின்சென்ட், கார்த்திக் இருவரையும் பார்த்து பணம் கொடுங்கள் என்று கூறியுள்ளார்.

 05.01.2021 மதியம், சத்தியமூர்த்திக்கு போன் செய்த கலைச் செல்வியிடம், வின்சென்ட் பணத்தை கொடும்மா, ஆவடி மாநகராட்சிக்கு வளாகத்தில் சி.சி.டிவி கேமிரா இருப்பதால், வெளியே நில்லுங்கள் பணம் வாங்கி கொள்வார் என்று பதில் சொன்னார் சத்தியமூர்த்தி.

 சத்தியமூர்த்தியின் புரோக்கர் வின்சென்ட் இடம்  ரூ5000/- இலஞ்சத்தை கலைச்செல்வி கொடுத்தவுடன், விஜிலென்ஸ் அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்தார்கள்.

  சத்தியமூர்த்தி அருகில் இருந்த கணக்கு அதிகாரி திலகம் தப்பி ஒடிவிட்டார். சத்தியமூர்த்தியும், வின்சென்ட் இருவரை விஜிலென்ஸ் அதிகாரிகள் கைது செய்தார்கள்..

  விஜிலென்ஸில் சிக்கி கைது செய்யப்பட்ட ஆவடி மாநகராட்சி வருவாய் ஆய்வாளர் சத்தியமூர்த்திக்கு பூந்தமல்லி –திருமழிசை அருகே பெட்ரோல் பங்க் தன் பெயரில் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சத்தியமூர்த்தி, இந்திராணிக்கு ரூ100கோடிக்கு சொத்து உள்ளது.

 ஆவடி மாநகராட்சியில்  விஜிலென்ஸ் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கையால் தாம்பரம், பம்மல், மறைமலைநகர், பல்லவபுரம் நகராட்சிகளில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

  சத்தியமூர்த்தி, வின்சென்ட் இருவரையும் கைது செய்த, விஜிலென்ஸ் அதிகாரிகளுக்கு மக்கள்செய்திமையத்தின் வாழ்த்துக்கள்…

Comments

comments

About mani bharathi

Check Also

ஊரக வளர்ச்சித்துறை… முத்துமீனாள், வீரபத்ரன், விஜயலட்சுமி-கூட்டணியின் ஊழல் ஆட்டம்…

  ஊரக வளர்ச்சி ஆணையரகத்தின் கூடுதல் இயக்குநராக இருக்கும் முத்துமீனாள்(ராம்மோகன்ராவ் ஐ.ஏ.எஸ்(ஒய்வு) தம்பி மனைவி), உள்ளாட்சித்துறை அமைச்சரின் உதவியாளராக பணியாற்றிய …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *