
ஆவடி மாநகராட்சிக்கு, பல்லவபுரம் நகராட்சியிலிருந்து அயல்பணியில் மாறுதல் பெற்று வந்து, கூடுதல் இயக்குநர் அசோகன், தலைமைப் பொறியாளர் புகழேந்தி பெயரை சொல்லி ஆடிய ஊழல் ஆட்டம் எல்லை மீறி போனது. விஜிலென்ஸ் அதிகாரிகள் வளையத்துக்குள் சிக்கிய நகரமைப்பு ஆய்வாளர் கணேசமூர்த்தி, 15 நாள் லீவு போட்டுவிட்டு, தலைமறைவாகிவிட்டார்.
கணேசமூர்த்தியிடம் அப்ரூவலுக்கு பணம் கொடுத்தவர்கள், கணேசமூர்த்தியை தேடி ஆவடி மாநகராட்சிக்கு வந்தபடியே உள்ளார்கள்.
ஆவடி மாநகராட்சிக்கு அலுவலகத்துக்கு கணேசமூர்த்தி மதியம் 1மணிக்குதான் வருவார். மதியம் மூன்று மணிக்கு வரும் ஒரு பெண்ணிடம் அன்றை இலஞ்சம் வாங்கிய பணத்தை கொடுத்து அனுப்பிவிட்டு, அடுத்த வசூலுக்கு புறப்பட்டுவிடுவார் கணேசமூர்த்தி.
மிட்டனமல்லி, முத்தாபுதுபேட்டை பகுதிகளில் நகரமைப்பு ஆய்வாளர் கணேசமூர்த்தி, பிட் நோட்டீஸ் கொடுப்பது போல், செல்போன் எண் உள்ள விசிட்டிங் கார்டை கொடுத்து, அப்ரூவலுக்கு என்னை தொடர்பு கொள்ளுங்கள் என்று கொடுத்துள்ளார்.
முத்தாபுதுப்பேட்டை நீர் பிடிப்பு பகுதியில் உள்ள சர்வே எண்களில் .65,67,68,69,70,72,73,74,75,76,77,78,80,81 அதே போல் வாட்டர் பாடி சர்வே எண்.82 ஆகிய சர்வே எண்களில் வீடு கட்ட, வணிக வளாகம் கட்ட, அடுக்குமாடி குடியிருப்பு கட்ட நகரமைப்பு ஆய்வாளர் கணேசமூர்த்தி சட்டத்துக்கு புறம்பாக அப்ரூவல் கொடுக்க, பரிந்துரை செய்துள்ளார்.


மிட்டனமல்லியில் பகுதியில் அனுமதி இல்லாமல் 70 வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள் கட்டப்பட்டு வருகிறது.
மிட்டனமல்லியில் நீர் பிடிப்பு பகுதி சர்வே எண்.284 மற்றும் வாட்டர் பாடி பகுதி சர்வே எண்.1ல் பல பாகங்கள் மற்றும் 169,283, 255,216,266 ஆகிய சர்வே எண்களில் கட்டிடம் கட்ட, நகரமைப்பு ஆய்வாளர் கணேசமூர்த்தி அப்ரூவலுக்கு பரிந்துரை செய்துள்ளார்.
ஆவடி மாநகராட்சியில் முத்தாபுதுப்பேட்டை, மிட்டனமல்லி பகுதியில் கணேசமூர்த்தி பரிந்துரையின் படி நீர் பிடிப்பு பகுதி, வாட்டர் பாடி பகுதியில் கட்டிடங்கள் கட்ட அப்ரூவலும் கொடுக்கப்பட்டுள்ளது.
கணேசமூர்த்திக்கு இலஞ்சம் வாங்கும் புரோக்கர் வேலை பார்ப்பது, ஆவடி நகராட்சியில் பணியாற்றும் பிரபுதாஸ் மற்றும் லைசென்ஸ் சர்வேயர் பத்மநாபன் .
ஆவடி நகரட்சியில் நகரமைப்பு ஆய்வாளராக 21.4.2014 முதல் 07.06.2017 வரை ஆவடி நகராட்சியில் பணியாற்றிய போது, சட்டத்துக்கு புறம்பாக கொடுக்கப்பட்ட அப்ரூவல்கள் தொடர்பாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்தில் மக்கள்செய்திமையம் புகார் அளித்துள்ளது.
லீவு என்ற பெயரில் தலைமறைவான கணேசமூர்த்தி, இரவு பல்லவபுரம் நகராட்சியில் நடந்த விஜிலென்ஸ் ரெய்டில் சிக்கி, பணியிலிருந்து விடுவிக்கப்பட்ட நகரமைப்பு அதிகாரி மாறனை சந்தித்து பேசியதாகவும், முழுமையாக ஆதரவு தர ஒப்புக்கொண்டுள்ளதாக, கணேசமூர்த்தி, தனக்கு நெருக்கமானவர்களின் கூறி வருகிறார்.
நகரமைப்பு ஆய்வாளர் கணேசமூர்த்தி சஸ்பெண்ட் செய்யப்படுவாரா என்று பார்ப்போம்..