Breaking News
Home / பிற செய்திகள் / சென்னை – சோழிங்கநல்லூர்- அடப்பாவிகளா… யார் அப்பன் வீட்டுப்பணம்.. புதிய சைக்கிள்களின் அவல நிலை…

சென்னை – சோழிங்கநல்லூர்- அடப்பாவிகளா… யார் அப்பன் வீட்டுப்பணம்.. புதிய சைக்கிள்களின் அவல நிலை…

சென்னை சோழிங்க நல்லூரில் உள்ள அரசு பள்ளியில் குவிக்கப்பட்டுள்ள புதிய சைக்கிள்களின் அவல நிலையை போட்டோவில் பாருங்கள்..

அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு, இலவச சைக்கிள் வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. கொரோனா காரணமாக ஏப்ரல் மாதம் முதல் பள்ளிக்கூடங்கள் மூடிக்கிடக்கிறது.

  சோழிங்கநல்லூர் அரசு பள்ளிக்கூடத்தில் 1000க்கு மேற்பட்ட புதிய சைக்கிள்கள் மாணவ, மாணவிகளுக்கு விலை இல்லாமல் கொடுக்க கொள்முதல் செய்யப்பட்டு குவித்து வைக்கப்பட்டுள்ளது. கடந்த ஏழு மாதங்களாக பள்ளிகள் மூடிக்கிடப்பதால், சைக்கிள்கள் வெயில், மழையில் பாதிக்கப்பட்டு மிகவும் மோசமான நிலையில் காட்சியளிக்கிறது.

 ஒரு சைக்கிள் குறைந்தபட்ச விலை ரூ3000 என வைத்துக்கொண்டால், 1000 சைக்கிளின் விலை ரூ30இலட்சம்..சைக்கிள்கள் மழை, வெயிலில் பாதிக்காத வகையில், கல்வித்துறை அதிகாரிகள் தார் பாய் மூலம் மூடி வைக்கவில்லை.

 ரூ30 இலட்சம் மதிப்புள்ள சைக்கிள்களை பாதுகாப்பாக வைக்காத கல்வித்துறை அதிகாரிகளை தூக்கில்தான் போட வேண்டும்..

 இந்த கல்வித்துறை அதிகாரிகள் வருங்கால சமுதாயத்தை உருவாக்கப்போகிறார்களாம்.. மனசாட்சி இல்லாத அதிகாரிகள்..

  அடப்பாவிகளா.. யார் அப்பன் வீட்டுப்பணம்…

Comments

comments

About mani bharathi

Check Also

ஊரக வளர்ச்சித்துறை… முத்துமீனாள், வீரபத்ரன், விஜயலட்சுமி-கூட்டணியின் ஊழல் ஆட்டம்…

  ஊரக வளர்ச்சி ஆணையரகத்தின் கூடுதல் இயக்குநராக இருக்கும் முத்துமீனாள்(ராம்மோகன்ராவ் ஐ.ஏ.எஸ்(ஒய்வு) தம்பி மனைவி), உள்ளாட்சித்துறை அமைச்சரின் உதவியாளராக பணியாற்றிய …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *