Breaking News
Home / பிற செய்திகள் / போக்குவரத்துறை ஆணையர்- தென்காசி ஜவஹர் ஐ.ஏ.எஸ்யின்- ஊழல் சாம்ராஜ்ஜியம்… விரைவில் புத்தகமாக…

போக்குவரத்துறை ஆணையர்- தென்காசி ஜவஹர் ஐ.ஏ.எஸ்யின்- ஊழல் சாம்ராஜ்ஜியம்… விரைவில் புத்தகமாக…

தமிழக அரசின் போக்குவரத்து ஆணையர் தென்காசி ஜவஹர் ஐ.ஏ.எஸ் நேர்மையான அதிகாரி போல் வேடம் போட்டுக்கொண்டு ஊழல் சாம்ராஜ்ஜியத்தில் வலம் வருகிறார். ஆணையர் தென்காசி ஜவஹர் ஐ.ஏ.எஸ்க்கு போக்குவரத்து இணை ஆணையர்கள் பொன்.செந்தில்நாதன், மனக்குமார், சத்தியநாராயணன் ஆகிய மூவரும் ஊழலுடன் கைக்கோர்த்துக்கொண்டு ஆடும் ஊழல் ஆட்டம் எல்லை மீறி போய்க்கொண்டு இருக்கிறது.


 போக்குவரத்து அலுவலகங்களில் FC பாஸ் செய்ய குறிப்பிட்ட நிறுவனத்திடம்தான் ஒளிரும் பட்டை(Reflection Taps), வேகக் கட்டுப்பாட்டுக் கருவி(Speed Governer) மற்றும் GPS கருவி (Vechle locatopn tracking divce) மூன்று கருவிகளை சில குறிப்பிட்ட நிறுவனத்திடமிருந்துதான் வாங்கி பொருத்தி இருக்க வேண்டும் என்று அரசாணை வெளியிட்டு, வெளிப்படையாகவே ஊழல் நடக்கிறது.

  ARAI, ICAT போன்ற அமைப்புகள், ஒளிரும் பட்டைகளை தயாரிக்கும் 11 நிறுவனங்களை அப்ரூவல் செய்துள்ளது.  தரமான ஒளிரும் பட்டைகளின் விலை ரூ1200 முதல் ரூ1500 வரைதான். ஆனால் போக்குவரத்து ஆணையர் கட்டாயப்படுத்தி கொள்முதல் செய்யும் சொல்லும்  நிறுவங்களில் ஒளிரும் பட்டையின் விலை ரூ6000 முதல் ரூ8000 வரை விற்கப்படுகிறது.

   3M INDIA LTD CHENNAI நிறுவனத்தின் ஒளிரும் பட்டைகளைதான் கொள்முதல் செய்து வாகங்களில் பொருத்த வேண்டும் என்று  ஆர்.எண்.14731/HB2/2020 23.07.2020ல் உத்தரவே போட்டு இருக்கிறார் ஊழல் புகழ் தென்காசி ஜவஹர் ஐ.ஏ.எஸ்

   3M INDIA LTD CHENNAI நிறுவனம் பெங்களூரில் இருக்கிறதாம். சென்னையில்           Zippy Retail Trading pvt ltd மேல அய்யனம்பாக்கம் சென்னை-95 இந்த நிறுவனத்தை தொடர்பு கொள்ளும்படி உத்தரவில் உள்ளது.

 அதே பாணியில் கனரக வாகனங்கள் தகுதிச் சான்றித்கழ் பெற GPS கருவி (Vechle locatopn tracking divce) பொருத்த வேண்டும் என்று ஆர்.டி.ஒ அலுவலகங்களுக்கு ஆணையர் அலுவலகம் சுற்றிக்கை அனுப்பி உள்ளது.

ARAI, ICAT போன்ற அமைப்புகள் அப்ரூவல் செய்த 140 நிறுவனங்களிலிருந்து இந்த கருவியை வாங்கி கனரக வாகனங்களில் பொருத்தி உள்ளார்கள். தற்போது ரூ15,000  முதல் ரூ20,000 விலையுள்ள 8 நிறுவனங்களின் பெயருடன் உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.இந்த நிறுவனத்தில் புதியதாக கருவி வாங்கி பொருத்தினால்தான் கனரக வாகனங்களுக்கு தகுதி சான்றிதழ் கொடுப்போம் என்ற சுற்றிக்கையே அனுப்பி உள்ளார்கள். இலஞ்சம் வாங்கி சுற்றிக்கை அனுப்பும் ஒரே துறை போக்குவரத்துத்துறைதான்..

 ஆணையர் தென்காசி ஜவஹர் ஐ.ஏ.எஸ் வெளியிட்டுள்ள உத்தரவில்(Letter No.8067/S3/2015 dated 18.11.2020.

  1. Mercuda”z
  2. Ecogas Impex pvt ltd
  3. Micor Auto tech pvt ltd
  4. APM Kingstrack Techologies
  5. Lakshika India Auto Technologies
  6. RDM Enterprises
  7. GRL engineers pvt ltd
  8. Transight Systems pvt ltd

இந்த நிறுவனத்திடமிருந்து வாங்கி கருவியை பொருத்தினால்தான் தகுதி சான்றிதழ் கொடுப்பார்கள்..

 இப்படி இலஞ்சம் கொடுக்கும் நிறுவனங்களில் தான் கருவிகளை கொள்முதல் செய்ய வேண்டும் என்று வெளிப்படையாக ஆணையை வெளியிட்டு ஊழல் செய்யும் ஒரே அதிகாரி போக்குவரத்து ஆணையர் தென்காசி ஜவஹர் ஐ.ஏ.எஸ் தான்…

 போக்குவரத்து ஆணையர் தென்காசி ஜவஹர் ஐ.ஏ.எஸ் ஊழல் சாம்ராஜ்ஜியம் எல்லை மீறி போய்க்கொண்டு இருக்கிறது.

 இது தொடர்பாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்தில் மக்கள்செய்திமையம் புகார் கொடுத்துள்ளது.

   தென்காசி ஜவஹர் ஐ.ஏ.எஸ் ஊழல் சாம்ராஜ்ஜியம் தொடர்பாக விரைவில் புத்தகம் வெளியிட முடிவு செய்துள்ளது..

Comments

comments

About mani bharathi

Check Also

ஊரக வளர்ச்சித்துறை… முத்துமீனாள், வீரபத்ரன், விஜயலட்சுமி-கூட்டணியின் ஊழல் ஆட்டம்…

  ஊரக வளர்ச்சி ஆணையரகத்தின் கூடுதல் இயக்குநராக இருக்கும் முத்துமீனாள்(ராம்மோகன்ராவ் ஐ.ஏ.எஸ்(ஒய்வு) தம்பி மனைவி), உள்ளாட்சித்துறை அமைச்சரின் உதவியாளராக பணியாற்றிய …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *