Breaking News
Home / பிற செய்திகள் / துணை முதல்வர் ஒ.பன்னீசெல்வத்தை காப்பாற்ற… ஒ.பன்னீர்ச்செல்வம் மீது சிபிஐ வழக்கு… ராஜேஷ்லகானி ஐ.ஏ.எஸ் மாற்றம்….

துணை முதல்வர் ஒ.பன்னீசெல்வத்தை காப்பாற்ற… ஒ.பன்னீர்ச்செல்வம் மீது சிபிஐ வழக்கு… ராஜேஷ்லகானி ஐ.ஏ.எஸ் மாற்றம்….

ராஜேஷ்லகானி ஐ.ஏ.எஸ் டம்மி பதவிக்கு மாறுதல் செய்யப்பட்ட பின்னணியில் முதல்வரின் செயலாளர் விஜயகுமார் ஐ.ஏ.எஸ், சேகர்ரெட்டி  இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

     தமிழக அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை செயலாளராக இருந்த ராஜேஷ்லகானி ஐ.ஏ.எஸ் ஆவணை காப்பாகத்தின் இயக்குநராக டம்மி பதவிக்கு மாறுதல் செய்யப்பட்டார்.

 சென்னை பெரு நகர வளர்ச்சிக்குழுமத்தின் உறுப்பினர்- செயலாளராக இருந்த கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டார்.

  1.  பல்லவபுரம் நகராட்சிக்குட்பட்ட ஜமீன்பல்லவரத்தில் சரவணாசெல்வரத்தின் அடுக்குமாடி துணிக்கடை மற்றும் திரையரங்கள் கொண்ட வணிக வளாகம் கட்ட சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமம் சட்டத்துக்கு புறம்பாக அனுமதி அளித்தது. இது தொடர்பாக மக்கள்செய்திமையம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்தின் கொடுத்த புகாரின் பேரில் நடந்த விசாரணையில், செயலாளர் ராஜேஷ்லகானி ஐ.ஏ.எஸ் அப்ரூவலை தற்காலிகமாக ரத்து செய்ய முடிவு செய்தார். ஆனால் சரவணாசெல்வரத்னம் நிர்வாகம் சி.எம்.டி.ஏ உறுப்பினர்- செயலாளர் கார்த்திகேயன் மூலம் முதல்வரின் செயலாளர் விஜயகுமார் ஐ.ஏ.எஸ்யை சந்தித்து பேசி, பண பரிமாற்றங்கள் நடந்தது. பின்னர் விஜயகுமார் ஐ.ஏ.எஸ் துணை முதல்வர் ஒ.பன்னீசெல்வத்திடம் நேரிடையாக அழைத்து சென்று பேசினார். துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வத்திடம், ராஜேஷ்லகானி ஐ.ஏ.எஸ், கட்டுமான பணியில் விதிமுறை மீறல், தற்காலிகமாக அப்ரூவல் ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டது. விதிமுறை மீறல் சரி செய்தால், அப்ரூவல் கொடுத்துவிடலாம் என்றார். ஆனால் துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் ராஜேஷ்லகானி ஐ.ஏ.எஸ் விளக்கத்தை ஏற்றுக்கொள்ளவில்லை…
  2. துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வத்துக்கு நெருக்கமானவரும், திருப்பதி கோயில் அறங்காவலரும், சிபிஐயால் காப்பாற்ற சேகர்ரெட்டிக்கு நெருக்கமானவர் பண்ருட்டி அருகே கிருஷ்ணாபுத்தில் நிழக்கிழார் சுகிசந்திரன் மகன் முத்துகுமார் பிரபலமான பாலம் கட்டும் நிறுவனத்தில் முக்கிய பொறுப்பில் உள்ளார். முத்துகுமாரின் தங்கை பவித்ராவின் கணவர் ராம்பிரசாத் மும்பையில் ஐ.டி.கம்பெனியில் பணியாற்றி வருகிறார். ஐ.டி கம்பெனி வரி ஏய்ப்பு செய்ததாக கிடைத்த தகவலின் பேரின் வருமான வரித்துறை ரெய்டு நடந்தது. மும்பாயில் ராம்பிரசாத்  வீட்டில் வருமான வரித்துறை ரெய்டில் கிடைத்த தகவலின் பேரில் ராம்பிரசாத்தின் மாமனார் வீட்டில் வருமான வரித்துறை நடத்திய ரெய்டியில் சுகிசந்திரன் மகன் முத்துகுமாருக்கு, சேகர்ரெட்டிக்கு உள்ள தொடர்பு, பண மதிப்பழிப்பு காலத்தில் ரூ2000 நோட்டு மாற்றி கொடுத்ததற்கான ஆதாரங்கள், ஒ.பன்னீர்செல்வம் கடிதங்கள், ராஜேஷ்லகானி ஐ.ஏ.எஸ் கடிதங்கள் சிக்கியது. இதை தொடர்ந்து வருமான வரித்துறையிடமிருந்து, துணை முதல்வர் ஒ.பன்னீசெல்வத்தை காப்பாற்ற ராஜேஷ்லகானி ஐ.ஏ.எஸ் பலிகடாக்கப்பட்டார்.
  3.  தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறையிலிருந்து PMAYவீடு கட்டும் திட்டத்தில் திருவொற்றியூரில் ரூ43.97 கோடி மதிப்பில் 480 வீடுகள் கட்ட 23.2.2018ல் Teemage Builders pvt ltd நிறுவனத்திடம் கொடுக்கப்பட்டது.

480 வீடுகட்டும்பணிக்கு இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான 1.17 ஏக்கர்(சர்வே எண்.139/1) கையகப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.

 மேலும் 480 வீடுகள் கட்ட கொடுக்கப்பட்ட டெண்டரில் ஊழல் நடந்ததுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. 1.17  ஏக்கர் குத்தகை விலை ரூ11.17கோடிக்கு 30 ஆண்டுகளுக்கு எடுத்துக்கொள்ள அரசாணை வெளியானது. ஆனால் 1.17 ஏக்கரின் மார்க்கெட் விலையில் விலைக்கு வாங்கினாலே ரூ15.22 கோடிதான்.

 இந்த விவகாரம் தொடர்பாக மத்திய தணிக்கைத்துறைக்கு ராஜேஷ்லகானி ஐ.ஏ.எஸ் எழுதிய கடிதத்தால்  துணை முதல்வர் மற்றும் வீட்டு வசதித்துறை அமைச்சர் ஒ.பன்னீர்செல்வத்துக்கு சிக்கல் ஏற்பட்டது. துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வத்தின் மீது சிபிஐ ஊழல் வழக்கு பதிவு செய்ய முடிவு செய்துள்ளது.

 தேர்தல் நேரத்தில் 480 வீட்டுகள் கட்டுவதில் நடந்த மெகா ஊழல் வெளியான அதிமுக ஆட்சிக்கு சிக்கல்  வரும் என்பதால், ராஜேஷ்லகானி ஐ.ஏ.எஸ் டம்மி பதவிக்கு, மாற்றி, கோப்புகளில் மாற்றம் செய்ய, வசதியாக கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ்யை செயலாளராக நியமித்து, துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் காப்பாற்றப்ப்பட்டுள்ளார்..    தொடரும்…

Comments

comments

About mani bharathi

Check Also

பல்லவபுரம் நகராட்சி நகரமைப்பு அதிகாரி- பூங்கா திருடன் மாறனின்- மனசாட்சி பயோ-டேட்டா…

   பல்லவபுரம் நகராட்சியில் 05.11.2020ல் நடந்த விஜிலென்ஸ் ரெய்டில் சிக்கிய நகரமைப்பு அதிகாரி வெ.மாறன் மக்கள் செய்திமையம் எடுத்த அதிரடி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *