
பல்லவபுரம் நகராட்சியில் நகரமைப்பு அதிகாரியாக பணியாற்றிய வெ.மாறன் சில நாட்களுக்கு முன்பு விஜிலென்ஸில் சிக்கினார். மாறனிடமிருந்து ரூ1,51,500 பறிமுதல் செய்யப்பட்டது.
விஜிலென்ஸ் அதிகாரிகள் பிடியிலிருந்து தப்பிக்க, அதிமுக மாவட்ட செயலாளர் முன்னாள் எம்.பி சிட்லப்பாக்கம் ராஜேந்திரன் மூலமாக துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வத்தை சந்தித்து, முயற்சி செய்தார். ஆனால் விஜிலென்ஸ் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுக்க, மாறன் அதிர்ச்சியடைந்தார். பல்லவபுரம் நகராட்சியிலிருந்து மாறன், வேறு நகராட்சிக்கு மாறுதல் செய்ய, நகராட்சி நிர்வாக ஆணையரகம் முடிவு எடுத்த நிலையில், தன்னை சிக்க வைத்த விஜிலென்ஸ் அதிகாரிகள் மீது கூலிப்படை மூலம் தாக்குதல் நடத்த மாறன் முடிவு செய்துள்ளார்.

அமைச்சர் பெஞ்சுமினின் அரசியல் உதவியாளர் என்ற பெயரில் உள்ளாட்சி அமைப்புகளில் அப்ரூவல் பிளான் பேப்பரை எடுத்துக்கொண்டு அதிகார மையத்தில் வலம் வரும் டூபாக்கூர் நிருபர் கூலிப்படை அமைத்து, விஜிலென்ஸ் அதிகாரிகள் மற்றும் மக்கள்செய்திமையம் ஆசிரியர் அன்பழகன் ஆகியோர் மீது தாக்குதல் நடத்தி கை,கால்களை உடைத்துவிடலாம் என்று நகரமைப்பு அதிகாரி மாறனிடம் ஆலோசனை சொன்னார். டூபாக்கூர் நிருபரிடம் ஆலோசனையின் போது, இரண்டு நகரமைப்பு ஆய்வாளர்களும், நகராட்சி ஆணையர் ஒருவரும் இருந்தார்கள். விஜிலென்ஸ் அதிகாரிகள் மீது கை வைத்தால்தான் அடங்குவார்கள் என்று தூண்டிவிட்டார்கள்.
டூபாக்கூர் நிருபர் பேச்சை கேட்டு, கூலிப்படையினரை அழைத்து மாறன் பேசிவருகிறார். தற்போது விஜிலென்ஸில் சிக்கிய நகரமைப்பு அதிகாரி மாறன், கொலை முயற்சி வழக்கில் குடும்பமே ஜெயிலுக்கு செல்லும் நிலை ஏற்படும் என்பதை மறந்துவிட்டார்.
விஜிலென்ஸ் அதிகாரிகள், மக்கள்செய்திமையம் ஆசிரியர் அன்பழகன் ஆகியோர் மீது நகரமைப்பு அதிகாரி மாறன் கூலிப்படைக்கு பணம் கொடுத்து தாக்குதல் நடத்த முயற்சி செய்தால், டூபாக்கூர் நிருபர் தப்பித்துவிடுவார்.. ஆலோசனையின் போது ஆமாம்…சாமி போட்ட அதிகாரிகள் எங்களுக்கு ஒண்ணும் தெரியாது என்று ஒதுங்கிவிடுவார்கள். கடைசியில் நகரமைப்பு அதிகாரி மாறன் குடும்பமே கொலை முயற்சி வழக்கில் சிக்கிக்கொள்வார்கள்..
சொல்வதை சொல்லிவிட்டோம்.. புரிந்து கொண்டால் சரி…
பகல் உணவு உண்ட பிறகு ஒவ்வொரு இலையிலும் சிறிது விளக்கெண்ணெயை ஊற்றித் தடவி வெளியில் போடுவார்களாம். உணவில் அதிகமான நெய்யின் இருப்பைக் காட்ட இதனால்தான் முதலியார் ஜம்பம் விளக்கெண்ணெய்க்குக் கேடு” என்ற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது