
உள்துறை அமைச்சர் அமித்ஷா சில நாட்களுக்கு முன்பு சென்னை வந்த போது, உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி ஒரங்கட்டப்பட்டார். மத்திய அரசு குட்டை, ஊரணி க்கு மழை நீர் செல்ல நீர் வழிப்பாதை அமைக்க ஒதுக்கீடு செய்த ரூ387.75கோடி முழுவதும் ஊழல் நடந்ததை மத்திய அரசு விசாரணைக்கு உத்தரவிட்டதால், உள்துறை அமைச்சர் அமித்ஷா, வேலுமணியை ஒரங்கட்ட, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் கூறப்பட்டுள்ளது என்பதுதான் உண்மை.
ரூ387.75கோடி ஊழல்..இதோ…
தமிழக அரசின் உள்ளாட்சித்துறையின் கீழ் செயல்படும் ஊரக வளர்ச்சித்துறையில் செயல்படுத்தப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் மழை நீர் குளம், குட்டை, ஊரணிக்கு செல்வதற்காக நீர் வழிப்பாதை அமைப்பதற்காக ரூ387.75கோடி அரசாணை எண்.18/1.2.18 மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ரூ387.85கோடியில் மத்திய அரசு பங்கு 75% மாநில அரசு பங்கு 25%. அரசாணையில் 15,000 கிமீட்டர் நீர் வழிப்பாதை அமைக்க, ஒரு கிமீட்டருக்கு ரூ2,58,500 என ரூ387.75கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
15,000 கிமீட்டர் நீர்வழிப்பாதை அமைப்பதற்காக ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாய்த்துராஜ் இயக்குநர் பாஸ்கரன் ஐ.ஏ.எஸ் ஊரக வளர்ச்சித்துறை செயலாளருக்கு 22.5.17 & 26.10.17ல் கடிதம் எழுதி உள்ளார்.

2011-12 முதல் 2017-18 வரை ரூ41,000கோடிக்கு மேல் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் 60% கிராம பஞ்சாய்த்துக்களில் ஏரி,குளம், குட்டை, ஊரணி அமைப்பது மற்றும் நீர் வழிப்பாதை அமைப்பதற்காக செய்யப்பட்டுள்ளது.
இந் நிலையில் 15,000 கிமீட்டர் நீர் வழிப்பாதை அமைப்பதற்கு, மத்திய அரசிடமிருந்து நிதி பெற வேண்டிய அவசியமே இல்லை. ஏற்கனவே அமைக்கப்பட்ட நீர் வழிப்பாதை காட்டி, ரூ387.75கோடி நிதி முழுவதையும் ஊழல் செய்ய, திட்டமிடப்பட்டது.

அரசாணை எண்.18/1.2.18ல் ரூ387.75கோடி ஒதுக்கீடு செய்தது, ஆனால் இந்த அரசாணை தொடர்பான தலைமைச் செயலகத்தின் ஊரக வளர்ச்சித்துறையில் அலுவலக குறிப்புக்கோப்பில் ஒரு கிமிட்டருக்கு நீர் வழிப்பாதை அமைக்க ரூ2,58,500 என்பதை ரூ3,50,000 என உயர்த்தி ரூ525கோடிக்கு கோப்பு தயாரிக்கும் படி உள்ளாட்சித்துறை அமைச்சர் அலுவலகம்,ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் ஹன்ஸ்ராஜ்வர்மா ஐ.ஏ.எஸ்க்கும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் இயக்குநராக இருந்த பாஸ்கரன் ஐ.ஏ.எஸ்க்கும் உத்தரவிட, மாற்றியமைக்கப்பட்டது.
ரூ525கோடிக்கு மதிப்பீட்டை உயர்த்துவது தொடர்பாக ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாய்த்து ராஜ் இயக்குநர் ஆர்.ஒ.சி எண்.29885/2017/MGNREGS-1-1 dated 22.5.17ல் ஊரக வளர்ச்சித்துறை செயலாளருக்கு எழுதிய கடிதத்தில் ஒரு கிமீட்டருக்கு ரூ3,50,000 என 15,000 கிமீட்டருக்கு செலவாகும் ரூ525 கோடியில் ரூ523.32கோடியை மத்திய அரசிடமிருந்து பெற்றுவிடலாம். தமிழக அரசின் பங்கு ரூ1.68கோடிதான் என்று கூறியுள்ளார்.
குறிப்புக்கோப்பில் So/ASO/DS… The technical staff of DRD office may be called for discussion as instructed by the secy exp in all such works which require interaction with implementing officials என்று 23.8.17ல் எழுதப்பட்டது. ஆனால் விரிவாக விவாதிக்கப்படவில்லை.
பென்சிலினால் எழுதியது உறுதி செய்கிறது..
ஒரு கிமீட்டருக்கு ரூ2,58,500 லிருந்து ரூ3,50,000 ஆக உயர்த்த, நிதித்துறை அதிகாரிகள் மறுத்துவிட்டார்கள்.. இதை குறிப்புக்கோப்பின் 28 பக்கம் 16.11.17 &17.11.17ல் குறிப்பு எழுதப்பட்டுள்ளது..
அதாவது ஒரு கீமிட்டருக்கு ரூ,2,58,500 என்பதை ரூ3,50,000 ஆக உயர்த்தினால் ரூ387.75கோடியிலிருந்து ரூ525கோடியாக மதிப்பீடு உயரும்.
ரூ525கோடி மதிப்பீட்டை உயர்த்தாத காரணத்தால்,15,000 கிமிட்டர் நீர் வழிப்பாதை அமைக்க, ரூ387.75கோடி ஒதுக்கீடு செய்த முழு நிதியையும், போலி பில், போலி எம்.புத்தகம் எழுதி ஊழல்/முறைகேடு நடந்துள்ளது.
நீர் வழிப்பாதை அமைக்க ஒதுக்கீடு ரூ387.75கோடி ஊழல் நடந்தது தொடர்பாக மக்கள்செய்திமையம், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்தில் கொடுத்த புகாரின் பேரில் நடந்த விசாரணையில் ஊழல் நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.