
நிவர் புயலுக்காக எழிலகத்தில் உள்ள வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு மையம் திறக்கப்பட்டு செயல்பட்டு வந்தது.
மாண்புமிகு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அய்யா, கட்டுப்பாட்டு மையத்தை பார்வையிட வருவதாக தகவல் வெளியானதும், கொட்டும் மழையில் முதல்வர் விவசாயி வேடத்தில் மக்களின் பாதுகாவலர் என்ற விளம்பரம் போர்டு அவசர, அவசரமாக வைக்கப்பட்டது.
நிவர் புயல் கட்டுப்பாட்டு மையத்திற்குள் நுழையும் வாயிலில் மழை நீர் கொட்டுகிறது, அதை சரி செய்யமுடியாத அதிகாரிகள் முதல்வருக்கு குடை பிடித்தார்கள்.
கடைசியில் முதல்வரே குடையை பிடித்துக்கொண்டு, சமூக இடைவெளியை கடைபிடிக்காமல், நாளை(25.11.2020) பொது விடுமுறையாக பத்திரிகையாளர்களிடம் அறிவித்தார்..
நிவர் புயல் நேரத்தில் முதல்வர் பொது இடங்களுக்கு வருவதை தவிர்க்க வேண்டும். ஆனால் விளம்பரே முக்கியம் என்று புயல் கட்டுப்பாட்டு மையத்துக்கு வந்து போட்டோவுக்கு போஸ் கொடுத்து விளம்பரம் தேடிக்கொண்ட முதல்வர் பழனிசாமி அய்யாவை விமர்சனம் செய்யாமல் இருக்க முடியுமா..
இந்த விமர்சனம் முதல்வர் பழனிசாமி அய்யாவுக்கு மட்டுமல்ல, அமைச்சர் உதயகுமார், வருவாய் மற்றும் பேரிடம் மேலாண்மைத்துறை ஆணையர் பணீந்திரரெட்டி ஐ.ஏ.எஸ் மற்றும் அதிகாரிகள் அனைவருக்கும்தான்..