Breaking News
Home / பிற செய்திகள் / சென்னை மாநகராட்சி… பிரகாஷ் ஐ.ஏ.எயின் துக்ளக் நிர்வாகம்.. செயற்பொறியாளர் பானுகுமாரின்- அதிகாரமையத்தின் அட்டகாசம்..

சென்னை மாநகராட்சி… பிரகாஷ் ஐ.ஏ.எயின் துக்ளக் நிர்வாகம்.. செயற்பொறியாளர் பானுகுமாரின்- அதிகாரமையத்தின் அட்டகாசம்..

சென்னை மாநகராட்சி மண்டலம் -11ல் 4.11.2020 மாலை 4.30மணிக்கு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு அதிகாரிகள் நடத்திய ரெய்டில் செயற்பொறியாளர் பானுகுமார், செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் உதவி பொறியாளர் பாபு சிக்கினார்கள். செயற் பொறியாளர்கள் பானுகுமார், ராதாகிருஷ்ணன்  இருவரையும் ஆணையர் பிரகாஷ் ஐ.ஏ.எஸ் உடனடியாக மாற்றியிருக்க வேண்டும்.

பானுகுமாரிடமும், ராதாகிருஷ்ணனிடமும் தலைமைப் பொறியாளர் நந்தகுமார் நடத்திய பேரத்தின், இலஞ்ச பணம் கைமாறியது. 24.11.2020ல் செயற்பொறியாளர் பானுகுமார்  மழை நீர், கழிவு நீர் கால்வாய் பணிகளுக்கு நியமிக்கப்பட்டார்(தலைமைப் பொறியாளர் நந்தகுமாரிடம்). செயற் பொறியாளர் ராதாகிருஷ்ணன், மண்டலம் -12க்கு மாறுதல் செய்யப்பட்டார்.

 24.11.2020ல் ஆணையர் பிரகாஷ் வெளியிட்ட மாறுதல் ஆணையில் G.D.Proc.NO.E1/3074/2020 dated 24.11.2020) பானுகுமார் செயற்பொறியாளராக மண்டலம் -8ல்பணி, ஆனால்  அமைச்சர் பெஞ்சுமின் பின்னணியில் மண்டலம்-11ல் பணியாற்றி வருகிறார்..

 பானுகுமார் மண்டலம் -8ல் பணி, ஆனால் பணியாற்றும் இடம் மண்டலம் -11 எவ்வளவு பெரிய அயோக்கியத்தனாம்.. இது அதிகாரமையத்தின் அட்டகாசம்..

  பானுகுமார் மண்டலம் -11ல் அடித்த கொள்ளையில் இலட்சக்கணக்கில் நந்தகுமாரிடம் கொடுத்து, மழைநீர், கழிவு நீர் கால்வாய் பணிகளுக்கு செயற் பொறியாளராக மாறுதல் பெற்றுக்கொண்டார். மழை நீர், கழிவு நீர் கால்வாய் பணியின் தலைமைப் பொறியாளர் நந்தகுமார்.

 செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், தலைமைப் பொறியாளர் நந்தகுமாருடன் பேர உடன்பாடு முடிந்த காரணத்தால், மண்டலம் 12க்கு மாறுதல் செய்யப்பட்டார்.

    இதில் என்ன வேடிக்கை என்றால் மண்டலம் -11க்கு இன்னும் செயற் பொறியாளர் மாறுதல் செய்யப்படவில்லை.  செயற்பொறியாளர் நாச்சன் செயற்பொறியாளர் மண்டலம் -6ல் பணி, ஆனால் பணியாற்றுவது மண்டலம்-2ல்.. இவர் மண்டலம் -11ஐ கூடுதலாக செயற்பொறியாளர் பணியை பார்ப்பாராம். என்ன கூத்து.. செயற்பொறியாளர் நாச்சன் மண்டலம்-6, மண்டலம்-2, மண்டலம் -11 மூன்று மண்டலத்துக்கு செயற்பொறியாளராக பணியாற்றுவாராம்..

சென்னை மாநகராட்சியில் நிர்வாகம் என்று நடக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

 சென்னை மாநகராட்சியில் பிரகாஷ் ஐ.ஏ.எஸ்யின்   நிர்வாகம் துக்ளக் நிர்வாகத்தை விட கேவலமாக இருக்கிறது.

 சென்னை மாநகராட்சி ஆணையராக இருக்கும் பிரகாஷ் ஐ.ஏ.எஸ், ஆணையராக இருந்த கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் இருவரும் உண்மையில் ஐ.ஏ.எஸ்க்கு தகுதியானவர்களா என்ற கேள்வியை வெளிப்படையாகவே கேட்கிறோம்..

முன்னாள் ஆணையர் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ், தற்போதையை ஆணையர்  பிரகாஷ் ஐ.ஏ.எஸ், தலைமைப் பொறியாளர் நந்தகுமார் முன்னாள் தலைமைப் பொறியாளர் புகழேந்தி இந்த மெகா கூட்டணி சென்னை மாநகராட்சி நிர்வாகத்தை  சீரழித்துவிட்டது என்பதுதான் உண்மை..

Comments

comments

About mani bharathi

Check Also

பல்லவபுரம் நகராட்சி நகரமைப்பு அதிகாரி- பூங்கா திருடன் மாறனின்- மனசாட்சி பயோ-டேட்டா…

   பல்லவபுரம் நகராட்சியில் 05.11.2020ல் நடந்த விஜிலென்ஸ் ரெய்டில் சிக்கிய நகரமைப்பு அதிகாரி வெ.மாறன் மக்கள் செய்திமையம் எடுத்த அதிரடி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *