
பல்லவபுரம் நகராட்சியில் நடந்த விஜிலென்ஸ் ரெய்டில் நகரமைப்பு அதிகாரி எஸ்.வி.மாறன் ரூ1,51,500 பணத்துடன் சிக்கினார். நகராட்சி பொறியாளர் ரவிச்சந்திரன் ரூ45,000, தங்க காசுடன் சிக்கினார். ஆனால் விஜிலென்ஸ் ரெய்டு நடந்து 15 நாட்களாகிவிட்டது. விஜிலென்ஸில் சிக்கிய மாறன், ரவிச்சந்திரன் இருவரையும் பல்லவபுரம் நகராட்சியிலிருந்து மாற்றப்படவில்லை…என்னை மாற்றமுடியாது,எனக்கு பின்னணியில் துணை முதல்வர் ஒ.பன்னீசெல்வம் இருக்கிறார் என்று விஜிலென்ஸ் இயக்குநர் ஜெயந்த்முரளி ஐ.பி.ஸ்க்கே சவால் விடுகிறார் மாறன்..

நகராட்சி நிர்வாக ஆணையர் பாஸ்கரன் ஐ.ஏ.எஸ், தலைமைப் பொறியாளர் புகழேந்தி, கண்காண்காணிப்பு பொறியாளர் கம் பலான புகழ் திருமாவளவன் இந்த மூவர் அணிக்கு, விஜிலென்ஸில் சிக்கும் அதிகாரிகளை இலஞ்சம் வாங்கிக்கொண்டு காப்பாற்றுவதுதான் முக்கிய பணி..
நகரமைப்பு பிரிவு கவனிக்கும் திருமதி கலைச் செல்வி மோகன் ஐ.ஏ.எஸ் நகராட்சிகளில் என்ன நடக்கிறது.. நகரமைப்பு பிரிவில் விஜிலென்ஸில் சிக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பது எதைப்பற்றி கண்டு கொள்ளுவது இல்லை. பட்டுசேலையில் தினமும் அலுவலகத்தில் வந்து உட்கார்ந்து பொழுதை போக்குகிறார்.
திருவேற்காடு நகராட்சியில் நடந்த விஜிலென்ஸ் ரெய்டில் நகரமைப்பு அதிகாரி ராஜேந்திரனும், நகரமைப்பு ஆய்வாளர் கவிதாவும் சிக்கினார்கள். ராஜேந்திரன் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
விஜிலென்ஸ் அதிகாரிகள் இரண்டு கடிதங்கள் அனுப்பிய பிறகு ராஜேந்திரனிடம் ரூ5 இலட்சம் இலஞ்சம் வாங்கிக்கொண்டு, கோவில்பட்டி நகராட்சிக்கு மாறுதல் செய்யப்பட்டார். நகரமைப்பு ஆய்வாளர் திருமதி கவிதா, அரக்கோணம் நகராட்சிக்கு மாறுதல் செய்யப்பட்டார்.

பல்லவபுரம் நகராட்சி விஜிலென்ஸ் ரெய்டில் சிக்கிய எஸ்.வி.மாறன், மனைவி இலட்சுமி பெயரில் லட்சுமி பவுண்டேசன், மகன் அஸ்வத் பெயரில் அஸ்வத் கன்ஸ்டிரக்சன் இரண்டு கட்டுமான நிறுவனங்கள் நடத்துவதை விஜிலென்ஸ் அதிகாரிகள் ஆய்வில் கண்டுபிடித்தார்கள்.எஸ்.வி.மாறனுக்கு ரூ100கோடி பினாமி சொத்து இருப்பதை விஜிலென்ஸ் அதிகாரிகள் உறுதி செய்துள்ளார்கள்.
பல்லவபுரம் நகராட்சி விஜிலென்ஸ் ரெய்டில் சிக்கிய நகரமைப்பு அதிகாரி எஸ்.வி.மாறன், நகராட்சி பொறியாளர் ரவிச்சந்திரன் இருவரும் பல்லவபுரம் நகராட்சியிலிருந்து மாறுதல் செய்யப்படவில்லை ஏன்?

விஜிலென்ஸ் துறையிலிருந்து பல்லவபுரம் நகராட்சியில் விஜிலென்ஸ் ரெய்டு தொடர்பாக விரிவான கடிதம் நகராட்சி நிர்வாக ஆணையர் பாஸ்கரன் ஐ.ஏ.எஸ்க்கு கடிதம் அனுப்பியும், நகரமைப்பு அதிகாரி எஸ்.வி.மாறனை மாறுதல் செய்யாமல், ஆணையர் பாஸ்கரன் ஐ.ஏ.எஸ் கட்டபஞ்சாய்த்து செய்து வருகிறார்.
என்னை பல்லவபுரம் நகராட்சியிலிருந்து மாறுதல் செய்ய முடியாது. துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் பின்னணியில் இருப்பதால் என்னை ஒண்ணும் செய்ய முடியாது என்று டூபாக்கூர் கதையெல்லாம் சொல்லி சவால் விடுகிறார் விஜிலென்ஸில் சிக்கிய நகரமைப்பு அதிகாரி மாறன்..
நகராட்சி நிர்வாக ஆணையரகத்தில் விஜிலென்ஸ் அதிகாரிகளின் அறிக்கையை, கடிதத்தை மதிக்காமல், நடவடிக்கை எடுக்காமல் இருப்பது நியாயமா பாஸ்கரன் ஐ.ஏ.எஸ்…
ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநர் ஜெயந்த்முரளி ஐ.பி.எஸ் அதிரடியாக நடவடிக்கை எடுப்பார் என்று நம்பிக்கை இருக்கிறது.
விஜிலென்ஸில் சிக்கிய பல்லவபுரம் நகராட்சியின் நகரமைப்பு அதிகாரி எஸ்.வி.மாறனையும், நகராட்சி பொறியாளர் ரவிச்சந்திரனையும் பல்லவபுரம் நகராட்சியிலிருந்து மாறுதல் செய்ய வேண்டும் என்று வழக்கு தொடர மக்கள்செய்திமையம் முடிவு செய்துள்ளது.