
தமிழக அரசின் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அரசு மருத்துவமனைகளின் செயல்பாடுகளை கண்டுகொள்ளாத காரணத்தால், அரசு மருத்துவமனைகளில் அரசியல் நுழைந்து அதிகாரமையத்தில் வலம் வருகிறது.

பொன்னேரி அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் அனுரத்னா டாக்டர் செந்திலில் அரசு டாக்டர் சங்கத்தில் திருவள்ளூர் மாவட்ட பொறுப்பில் இருப்பதால், சுகாதாரத்துறை இணை இயக்குநர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை மதிப்பது இல்லை.
பொன்னேரி அரசு மருத்துவமனை உள் வளாகத்தில் நாம் தமிழர் கட்சியின் பேனர் கட்டப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சியின் பேனரை அப்புறப்படுத்துங்கள் என்று தினமும் தகராறு நடக்கிறது. ஆனால் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் அனுரத்னா கண்டுகொள்ளாமல் அலட்சியமாகவே செயல்படுகிறார்.
மக்கள்செய்திமையம் நாம் தமிழர் கட்சிக்கு எதிரானது இல்லை. நாம் தமிழர் கட்சியில் தலைவர் சீமான் உள்ளிட்ட அனைவரும் நண்பர்கள் தான்..
அதே நேரத்தில் பொன்னேரி அரசு மருத்துவமனையின் உள் வளாகத்தில் நாம் தமிழர் கட்சியின் பேனர் இருப்பதை எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும்..
நாம் தமிழர் கட்சியிலிருந்து இந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்கள். நாம் தமிழர் கட்சி உள்ள பேனர் பொன்னேரி மருத்துவமனையின் உள் வளாகம் இல்லை. நாம் தமிழர் கட்சி நடத்தி இரத்த தானம் முகாம் நடந்த கமல் திருமண மண்டபத்தில் நாம் தமிழர் கட்சியின் பேனர் கட்டப்பட்டு இருந்ததாக கூறினார்கள். நாம் வெளியிட்ட செய்தியில் ஏற்பட்ட தவறுக்கு வருந்துகிறோம்..