
மத்திய அரசின் உள்துறை அமைச்சர் அமித்ஷா இரண்டு நாள் பயணமாக சென்னைக்கு வந்தார். தமிழக அரசு விழாவிலும் கலந்து கொண்டார். அரசு விழா உள்ளிட்ட அமித்ஷா நிகழ்ச்சிகளிலும் உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி ஒரங்கட்டப்பட்டுவிட்டார்.


சென்னை முழுவதும் சட்டத்துக்கு புறம்பாக தமிழக அரசின் முத்திரையுடன் விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டு இருந்தது.
உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, விமான நிலையத்தில் வரவேற்ற அமைச்சர்கள் பட்டியலில் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர் செங்கோட்டையன், அமைச்சர் தங்கமணி, அமைச்சர் வேலுமணி, அமைச்சர் அன்பழகன், அமைச்சர் பெஞ்சுமின், அமைச்சர் பாண்டியராஜன் மற்றும் ரவீந்திரநாத் எம்.பி ஆகியோர் பெயர் இடம் பெற்றிருந்தது…
ஆனால் அமைச்சர் வேலுமணி, அமித்ஷா பார்த்து கும்பிடு போடும் போட்டோ கூட வெளியாகவில்லை. தமிழக அரசு வெளியிட்ட போட்டோவிலும் அமைச்சர் வேலுமணி இடம் பெறவில்லை. ஆனால் முதல்வர், துணை முதல்வர் இருவரையும் தொடர்ந்து அமைச்சர் செங்கோட்டையனுக்கு முக்கியதுவம் கொடுக்கப்பட்டுள்ளது.
உள்துறை அமைச்சர் அமித்ஷா நிகழ்ச்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி ஒரங்கட்டப்பட்டுவிட்டார் என்பதுதான் உண்மை. உள்ளாட்சித்துறை ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் ஒரங்கட்டப்பட்டுவிட்டார்கள்..
உள்துறை அமைச்சர் அமித்ஷா, முதல்வருடன் பேசும் போது உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அமைச்சர் காமராஜ் உள்ளிட்ட 10 அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் குவிந்துள்ளது என்று கூறியுள்ளார். அமைச்சர் வேலுமணி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இருவரும் தேர்தல் பிரச்சாரத்திற்கு அனுப்ப வேண்டாம் என்று அமித்ஷா கூறியதாக ஆடிட்டர் தரப்பில் வெளிப்படையாகவே பேசி வருகிறார்கள்.