Breaking News
Home / பிற செய்திகள் / நகரமைப்பு பிரிவில் ரூ200கோடி ஊழல்.. விஜிலென்ஸ் அதிகாரிகளை- மிரட்டும் ஒ.பன்னீர்செல்வம்.. கட்ட பஞ்சாய்த்தில் சந்திரசேகர்…

நகரமைப்பு பிரிவில் ரூ200கோடி ஊழல்.. விஜிலென்ஸ் அதிகாரிகளை- மிரட்டும் ஒ.பன்னீர்செல்வம்.. கட்ட பஞ்சாய்த்தில் சந்திரசேகர்…

   சென்னை புறநகர் மாவட்டங்களான தாம்பரம், பல்லவபுரம், மறைமலைநகர், பம்மல், செம்பாக்கம், பூந்தமல்லி, திருவேற்காடு,  திருவள்ளூர் நகராட்சிகளில் நகரமைப்பு பிரிவில் ரூ200கோடிக்கு ஊழல் நடந்துள்ளது.

  பல்லவபுரம் நகராட்சியின் நகரமைப்பு அதிகாரி எஸ்.வி.மாறன் விஜிலென்ஸில் சிக்கினார். எஸ்.வி.மாறனிடமிருந்து ரூ1,51,500 பறிமுதல் செய்யப்பட்டது. விஜிலென்ஸ் அதிகாரிகள் மாறனின் வீட்டில் சோதனை நடத்தினார்கள். மாறன் மனைவி லட்சுமி பிரியா பெயரில் லட்சுமி பவுண்டேசன் மகன் அஸ்வத் கன்ஸ்டிரக்சன் என்று இரு கட்டுமான நிறுவனங்கள் நடத்தி வருவது உறுதி செய்யப்பட்டது. விஜிலென்ஸ் அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்கள்.  இந் நிலையில்   நகரமைப்பு அதிகாரி மாறன் முன்னாள் எம்.பி சிட்லபாக்கம் ராஜேந்திரன் மூலம் துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வத்தை சந்தித்தார். ஒ.பன்னீசெல்வம்  விஜிலென்ஸ் அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்தார். ஆனால் விஜிலென்ஸ் அதிகாரிகள் துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வத்தின் மிரட்டலுக்கு அடிபணியவில்லை.

 ஆவடி மாநகராட்சி நகரமைப்பு ஆய்வாளர் கணேசமூர்த்தி, பல்லவபுரம் நகராட்சி ஆணையர், அரக்கோணம் நகராட்சி நகரமைப்பு ஆய்வாளர் கவிதா, பம்மல் நகராட்சி நகரமைப்பு ஆய்வாளர் தாமரைச் செல்வன் நான்கு பேரும் ஒரே காரில், உள்ளாட்சித்துறை அமைச்சர் வீட்டுக்கு சென்றார்கள். அமைச்சர் பார்க்க விரும்பவில்லை என்று கூறிவிட்டதால், அதிர்ச்சியில் திரும்பினார்கள்.

 உள்ளாட்சித்துறை அமைச்சரின் சிறப்பு உதவியாளரும், ஒய்வு பெற்ற நகராட்சி நிர்வாக கூடுதல் இயக்குநர் சந்திரசேகரை முகப்பேர்  வீட்டில் சந்தித்து பேசினார்கள். சந்திரசேகர் விஜிலென்ஸ் அதிகாரிகளிடம் பேச முடியாது. இனி நீங்கள்தான் உங்களை காப்பாற்றிக்கொள்ள வேண்டும். தேர்தல் நேரம் வந்துவிட்டதால், அதிகாரிகள் நாம் சொல்லும் பேச்சை கேட்கமாட்டார்கள் என்று கட்ட பஞ்சாய்த்து செய்து அனுப்பி வைத்தார்..

தாம்பரம், பல்லவபுரம், மறைமலைநகர், பம்மல், செம்பாக்கம், பூந்தமல்லி, திருவேற்காடு,  திருவள்ளூர் நகராட்சிகளில் நகரமைப்பு பிரிவுகளின் முக்கியமான ஊழல் கோப்புகளை விஜிலென்ஸ் அதிகாரிகள் கைப்பற்றி, அந்த கோப்புகள் பேரில் வழக்குகள் பதிவு செய்யும் பணி நடந்து வருகிறது.

 மக்கள்செய்திமையம் நகரமைப்பு பிரிவில் நடந்துள்ள ரூ100கோடி ஊழலுக்கான ஆதாரங்களை  ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்தில் கொடுத்துள்ளது.

 உள்ளாட்சி அமைப்புகளின் முறைமன்ற நடுவத்திலும் தாமரைச் செல்வன், செந்தில்குமார் செழியன், மாறன், குமார், ராஜேந்திரன் உள்ளிட்ட ஐந்து நகரமைப்பு அதிகாரிகள்/ஆய்வாளர்கள்  மீது விசாரணை முடிவடைந்து, குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டுள்ளது.

 நகரமைப்பு பிரிவில் நடந்த ரூ200கோடி ஊழல் தொடர்பாக நகரமைப்பு ஆய்வாளர்கள்/அதிகாரிகள்  விரைவில் சஸ்பெண்ட் செய்யப்படுவர்கள்.. நகரமைப்பு ஆய்வாளர்கள்/அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்படாமல், துறை ரீதியான நடவடிக்கை எடுக்க, நகராட்சி நிர்வாக ஆணையரகத்தில் பணியாற்றும் தயாநிதி மூலம் பண பரிமாற்றங்கள், பஞ்சாய்த்துகள் நடக்கிறது.

 என்னதான்.. நடக்கிறது…பார்ப்போம்… தேவைப்பட்டால் நீதிமன்றத்துக்கு மக்கள்செய்திமையம் செல்ல முடிவு செய்துள்ளது.

Comments

comments

About mani bharathi

Check Also

சென்னை மாநகராட்சி… பிரகாஷ் ஐ.ஏ.எயின் துக்ளக் நிர்வாகம்.. செயற்பொறியாளர் பானுகுமாரின்- அதிகாரமையத்தின் அட்டகாசம்..

சென்னை மாநகராட்சி மண்டலம் -11ல் 4.11.2020 மாலை 4.30மணிக்கு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு அதிகாரிகள் நடத்திய ரெய்டில் செயற்பொறியாளர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *