
திருமழிசை பேரூராட்சியின் செயல் அலுவலர் ரவிச்சந்திரன், சென்னை பெரு நகர வளர்ச்சிக் குழுமத்தின் கடிதத்தை குப்பைக் கூடையில் போட்டுவிட்டு, தகவல்கள் ஆவணங்களின் நகல்களை தராமல், அதிகாரமையத்தில் அட்டகாசம் செய்து வருகிறார்.
திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை பேரூராட்சியின் செயல் அலுவலராக இருந்த திருமதி பிரேமா திருமழிசை பேரூராட்சி செம்பரம்பாக்கம்(முன்னர் நெஞ்சேரி) பி.பி.டி/எஸ். ஒ எண்.39/2019 நாள் 2.4.2019ல் சென்னை ரெசிடென்ஷியல் டெவலப்பர் நிறுவனத்துக்கு வருவாய் கிராம நில அளவை எண். 66/1B Part , 2 A part, 2 B part & 3, 67/1 part, 2 part & 3 part& 68/8, 9A part & 9B part &10 part குடியிருப்பு வீட்டுமனை பிரிவுகளாக, சட்டத்துக்கு புறம்பாக, விதிமுறைகளை மீறி அப்ருவல் கொடுத்துள்ளார் . இதில் பல லட்சம், இலஞ்ச பணமாக பரிமாற்றம் நடந்துள்ளது.
VSKS Aswatha நிறுவனத்துக்கு அடுக்குமாடி குடியிருப்பு அனுமதி அளிப்பதில் பல லட்சம் இலஞ்சம் வாங்கியுள்ளார் செயல் அலுவலராக இருந்த பிரேமா. அதே போல் திருமழிசை பேரூராட்சிக்குட்பட்ட பல ஹோட்டல்களுக்கு கழிவு நீர் இணைப்பு, குடி நீர் இணைப்பு கொடுத்ததிலும் மெகா முறைகேடு நடந்துள்ளது. அதே போல் குப்பிடிசாத்தம் நாராயணசாமி கல்வி அறக்கட்டளைக்கும் சட்டத்துக்கு புறம்பாக அப்ரூவல் கொடுத்துள்ளார் பிரேமா..
சென்னை ரெசிடென்ஷியல் டெவலப்பர் நிறுவனத்துக்கு அப்ரூவல் கொடுத்த வரைபடம், உத்தரவின் நகல் உள்ளிட்ட பல சட்டத்துக்கு புறம்பாக அப்ரூவல் கொடுத்த விவரங்களை சென்னை பெரு நகர வளர்ச்சிக் குழுமத்தில் தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005ன்படி கேட்டோம்.

சென்னை பெரு நகர வளர்ச்சிக் குழுமம், 22.09.2020ல் திருமழிசை பேரூராட்சி செயல் அலுவலருக்கு அனுப்பிய கடிதத்தில் தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005ன் கீழ் ஆவணங்களை கொடுக்கும்படி கூறியுள்ளது.

திருமழிசை பிரேமா, பேரூராட்சிகளின் இயக்குநர் சு.பழனிசாமி ஐ.ஏ.எஸ்யிடம் சரணடைந்து, திருமழிசையில் சட்டத்துக்கு புறம்பாக கொடுத்த அப்ரூவலில் வாங்கிய இலஞ்சம் பல லட்சத்தில், பங்கு கொடுத்துவிட்டதால், பழனிசாமி ஐ.ஏ.எஸ் பிரேமாவுக்கு ஆதரவாக, திருமழிசை பேரூராட்சி செயல் அலுவலர் ரவிச்சந்திரனிடம் சி.எம்.டி.ஏ கடிதத்தை குப்பைக் கூடையிலேயே போடுங்கள்…எந்த ஆவணத்தின் நகலும் கொடுக்க வேண்டாம் என்று கூறிவிட்டார். ரவிச்சந்திரன் மீது விஜிலென்ஸில் வழக்கு நிலுவையில் இருப்பதால், சு.பழனிசாமி ஐ.ஏ.எஸ் சொல்லுவதற்கு பூம்..பூம்..பூம் மாடு மாதிரி தலையாட்டுகிறார்.
.
திருமழிசை பேரூராட்சி செயல் அலுவலர், ரவிச்சந்திரன், சென்னை பெரு நகர வளர்ச்சிக் குழுமத்தின் கடிதத்தை குப்பைக் கூடையில் போட்டுவிட்டு, தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் படி ஆவணங்களில் நகலை தர மறுக்கிறார். இது தொடர்பாக திருமழிசை பேரூராட்சி செயல் அலுவலர் ரவிச்சந்திரன் மீது மக்கள்செய்திமையம் வழக்கு தொடர முடிவு செய்துள்ளது.