
பெரு நகர சென்னை மாநகராட்சியில் சுமீத் அர்பன் சர்வீசஸ் சென்னை பிரைவேட் லிமிட், குப்பைகளை அகற்றும் நிறுவனம் சென்னை மாநகராட்சி பெயரில் மோசடியாக விளம்பரம் கொடுத்து வருகிறது. சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஐ.ஏ.எஸ் சுமீத் அர்பன் சர்வீசஸ் சென்னை பிரைவேட் லிமிட் புரோக்கராக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சென்னை மாநகராட்சியின் தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் ஆகிய ஏழு மண்டலங்களில் உள்ள 92 வார்டுகளில் குப்பைகளை அகற்றும் பணி(திடக்கழிவு மேலாண்மை) ஸ்பெயின், இந்தியா கூட்டு நிறுவனமான URBASER SA and SUMEET FACILITIES LTD PUNE என்ற நிறுவனத்திடம் டெண்டர் டிரான்பரன்சி விதிமுறைகளை மீறி, சட்டத்துக்கு புறம்பாக,ரூ447கோடிக்கு (மண்டலம் 11,12,14,&15க்கு குப்பைகளை அகற்ற ரூ172.50கோடி(Package –II) & மண்டலம் 9,10,&13(Package –V) குப்பைகளை அகற்றரூ274.50 கோடி) ஒப்பந்தம் கொடுக்கப்பட்டுள்ளது.
முதல்வரே தீவுத்திடலில் இந்த நிறுவனத்தின் குப்பை அள்ளும் பணிகளை தொடங்கி வைத்தார். ஆனால் சுமீத் அர்பன் சர்வீசஸ் சென்னை பிரைவேட் லிமிட் நிறுவனம் குப்பை அள்ளும் பணியை முழுமையாக தொடங்கவில்லை. 92 வார்டுகளும் குப்பை குவியலில் மூழ்கி கிடக்கிறது.
ஆனால் சென்னை மாநகராட்சியின் இடங்கள், சோமசுந்தரம் விளையாட்டுத் திடலில் உள்ளிட்ட பல விளையாட்டுத்திடல்களை ஆக்ரமித்து, பேட்டரி வாகனங்கள், இலகு/கனரக வாகங்களை கொள்முதல் குவித்துள்ளது.


சுமீத் அர்பன் சர்வீசஸ் சென்னை பிரைவேட் லிமிட் மோசடியின் பின்னணியில் இருக்கும் பிரகாஷ் ஐ.ஏ.எஸ்க்கு கேள்விகள்…
- சுமீத் அர்பன் சர்வீசஸ் சென்னை பிரைவேட் லிமிட் நிறுவனம் சென்னை மாநகராட்சியில் ஏழு மண்டலங்களில் குப்பைகளை அகற்ற டெண்டர் எடுத்துள்ளது. பெரு நகர சென்னை மாநகராட்சி பணிக்காக என்று தினந்தந்தியில் விளம்பரம் கொடுத்துள்ளது மோசடி.. சென்னை மாநகராட்சி பெயரை மோசடியாக பயன்படுத்த அதிகாரம் கொடுத்தது யார்?
- ரூ447 கோடிக்கு குப்பைகளை அகற்ற டெண்டர் எடுத்துள்ள சுமீத் அர்பன் சர்வீசஸ் சென்னை பிரைவேட் லிமிட் நிறுவனத்தின் குப்பை வண்டிகளை நிறுத்தம் இடம் இல்லாமல், விளையாட்டுத்திடல், சென்னை மாநகராட்சி இடங்களை ஆக்ரமிக்க அனுமதித்தது யார்…அனுமதித்தது எப்படி..
- சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஐ.ஏ.எஸ்யா, சுமீத் அர்பன் சர்வீசஸ் சென்னை பிரைவேட் லிமிட் நிறுவனத்தின் புரோக்கர் பிரகாஷ் ஐ.ஏ.எஸ்யா?
- தலைமைப் பொறியாளர் நந்தகுமார், தலைமைப் பொறியாளர் மகேசன் இருவரும், சுமீத் அர்பன் சர்வீசஸ் சென்னை பிரைவேட் லிமிட் நிறுவனத்தின் பி.ஆர்.ஒ கம் புரோக்கரா செயல்படுவது நியாயமா?
- ஏழு மண்டலம் 92 வார்டுகளில் எந்த பக்கம் திரும்பினாலும் குப்பை குவியல்தான், என்றாவது ஆணையர் பிரகாஷ் ஐ.ஏ.எஸ் ஆய்வு செய்திருக்கிறாரா..
சுமீத் அர்பன் சர்வீசஸ் சென்னை பிரைவேட் லிமிட் நிறுவனத்தின் புரோக்கராக செயல்படும் ஆணையர் பிரகாஷ் ஐ.ஏ.எஸ், தலைமைப் பொறியாளர் நந்தகுமார், தலைமைப் பொறியாளர்(திடக்கழிவு)மகேசன் மூவர் மீதும் வழக்கு தொடர மக்கள்செய்திமையம் முடிவு செய்துள்ளது..