Breaking News
Home / பிற செய்திகள் / செய்தித்துறையின் மோசடிகள்.. மறைந்த மோகனுக்கு நிதியுதவி அரசாணையில் மோசடி… மகேசன் காசிராஜன் ஐ.ஏ.எஸ் ரப்பர் ஸ்டாம்பா?

செய்தித்துறையின் மோசடிகள்.. மறைந்த மோகனுக்கு நிதியுதவி அரசாணையில் மோசடி… மகேசன் காசிராஜன் ஐ.ஏ.எஸ் ரப்பர் ஸ்டாம்பா?

  மூத்த பத்திரிகையாளர் மோகன் 5.11.2017ல் மாரடைப்பால் மறைந்தார். தினந்தந்தி விழாவுக்கு வருகை தந்த பிரதமர் மோடி, விழாவில் மூத்த பத்திரிகையாளர் மோகன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார்.

  பணியில் இருக்கும் போது இருந்த மோகனுக்கு மூன்றாண்டுகளாக நிவாரண நிதி ரூ2 இலட்சத்தை தமிழக அரசு கொடுக்காமல் இழுத்தடித்தது.  தேசிய பத்திரிகை தினத்தன்று, இந்திய உழைக்கும் சம்மேளனத்தின் தென் மாநிலங்களின் செயலாளர் அசுதுல்லா, கலைஞர் டிவியில், பிரதமர் இரங்கல் தெரிவித்த மூத்த பத்திரிகையாளர் மோகன் மறைந்து மூன்றாண்டுகளாகியும் நிவாரணம் தரவில்லை என்று பேசினார்.

 இதை தொடர்ந்து மோகனுக்கு ரூ2 இலட்சம் ஒதுக்கீடு செய்து வெளியிடப்பட்ட அரசாணையில் தேதி 12.9.2020(அரசாணை எண்(ப) எண்.92 தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி(நிர்வாகம்-4)த்துறை 12.9.2020) என்று உள்ளது

 அரசாணையின் மூன்றாம் பக்கத்தில் பிரிவு அலுவலர் 18.11.2020என்று கையெழுத்து போட்டுள்ளார்.

  18.11.2020ம் தேதி அரசாணை வெளியிட்டுவிட்டு, அரசாணையில் 12.9.2020 என்று தேதியிட்டு மோசடி செய்து உள்ளார்கள்..செய்தித்துறை என்றாலே மோசடி துறைதானே..

 செய்தித்துறை  செயலாளர் மகேசன் காசிராஜன் ஐ.ஏ.எஸ்  குறிப்புக்கோப்பில்(நோட் பைலில்) கையெழுத்து போடும் போது பார்க்கவில்லையா ஏன்.. மகேசன் காசிராஜன் ஐ.ஏ.எஸ்  பூம்.. பூம்.. பூம் என்று தலையாட்டிவிட்டு ரப்பர் ஸ்டாம்ப் பணி செய்கிறாரா?

  செய்தித்துறை…மோசடித்துறை என்பதற்கு இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும்..

Comments

comments

About mani bharathi

Check Also

சென்னை மாநகராட்சி… பிரகாஷ் ஐ.ஏ.எயின் துக்ளக் நிர்வாகம்.. செயற்பொறியாளர் பானுகுமாரின்- அதிகாரமையத்தின் அட்டகாசம்..

சென்னை மாநகராட்சி மண்டலம் -11ல் 4.11.2020 மாலை 4.30மணிக்கு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு அதிகாரிகள் நடத்திய ரெய்டில் செயற்பொறியாளர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *