Breaking News
Home / பிற செய்திகள் / பம்மல் நகராட்சி… சிக்கிய நகரமைப்பு ஆய்வாளர் தாமரைச் செல்வன்…

பம்மல் நகராட்சி… சிக்கிய நகரமைப்பு ஆய்வாளர் தாமரைச் செல்வன்…

  திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி நகராட்சிக்கு நகரமைப்பு ஆய்வாளராக 2016ம் ஆண்டு மாறுதல் பெற்று  வந்து பணியில் சேர்ந்தார். சட்டத்துக்கு புறம்பாக, விதிமுறைகளை மீறி வணிக வளாகம், அடுக்குமாடி குடியிருப்பு  இலஞ்சம் வாங்கிக்கொண்டுஅப்ருவல் கொடுத்தார். காலி மனைக்கு வரி, அபிவிருத்தி கட்டணம் வசூலிக்கமால் நகராட்சிக்கு பல லட்சம் இழப்பு ஏற்படுத்தியுள்ளார்.

 நகரமைப்பு ஆய்வாளர் தாமரைச்செல்வன் 16.3.2017ல் ஒசூர் நகராட்சிக்கு மாற்றப்பட்டார். அந்த மாற்றல் உத்தரவு 4.4.2017ல் ரத்து செய்யப்பட்டு, பூந்தமல்லி நகராட்சியில் பணியில் தொடர அமைச்சரின் உதவியாளராக இருந்த, கோவை மாநகராட்சி உதவி பொறியாளர் ஆர்.பார்த்தீபனுக்கு  பல இலட்சம் கொடுத்துள்ளார்.

 19.2.2018ல் தாமரைச் செல்வன் பூந்தமல்லி நகராட்சியிலிருந்து திருப்பத்தூர் நகராட்சிக்கு மாறுதல் செய்யப்பட்டார். இந்த மாறுதலை இலஞ்சம் கொடுத்து ரத்து செய்து, 8.3.2018ல் திருத்தணி நகராட்சிக்கு மாறுதல் பெற்றார். திருத்தணி நகராட்சியிலிருந்து இலஞ்சம் கொடுத்து, தற்போது பம்மல் நகராட்சிக்கு மாறுதல் பெற்றுள்ளார்.

 இப்படி நகரமைப்பு பிரிவில் சட்டத்துக்கு புறம்பாக, விதிமுறைகளை மீறி பல லட்சம் இலஞ்சம் வாங்கிக் கொண்டு அப்ருவல் கொடுத்துள்ளார். இந்த இலஞ்சம் பணத்தில், தனக்கு வேண்டிய நகராட்சிக்கு மாறுதல் பெற்று வருகிறார்.

 பூந்தமல்லி நகராட்சியில் கிராம நத்தம் இடத்தில் இலஞ்சம் வாங்கிக்கொண்டு, வணிக வளாகம் கட்ட அனுமதி அளித்துள்ளார்.

    கட்டிட உரிமம் எண்.42/16 நாள் 11.7.2016, சர்வே எண்.115/22,115/82ல் 135/16,17ல் டிரங்க் ரோடு, செட்டி தெருவில்(அரசு மருத்துவமனை அருகில்) கிராம நத்தம் இடத்தில் 500 சதுர மீட்டர் வணிக வளாகத்துக்கு அப்ருவல் கொடுத்துள்ளார்.

 வருவாய்த்துறையின் அ பதிவேடு, சிட்டா, அடங்கல் பதிவேடுகளை பார்க்கும் போது, சர்வே எண்.115/22 என்பது கிராம நத்தம் இடம். 115/22ன் உட்பிரிவாக 115/82 உட்பிரிவாக உள்ளது.

 காலி மனை 5478 சதர அடி அதாவது 509.15 சதுர மீட்டர். இதில் முதல் தளம் 2690 சதுர அடி(250 சதுர மீட்டர்). இரண்டாவது தளம்  2690 சதுர அடி(250 சதுர மீட்டர்) வணிக வளாக கட்ட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

  ஆர்.டி/6427/2015 தேதி 11.6.2015 மற்றும் 113/2015 தேதி 29.5.2015 அரசாணை மற்றும் சுற்றிக்கையின் படி கிராம நத்தம் இடத்தில் வணிக நோக்கத்தில் கட்டிட கட்ட அனுமதி அளிக்க முடியாது.   மேலும் நகராட்சிகளுக்கு 26(1)படி 300 சதுர மீட்டருக்கு மேல் வணிக வளாகம் கட்ட அப்ருவல் அளிக்க முடியாது.

  கிராம நத்தம் சர்வே எண். 115/82 உட்பிரிவு ஜெயக்குமார் என்பவரிடமிருந்து ரேவதி என்பவர் வாங்கி 11.10.2010ல் விற்பனை பத்திரம் பதிவு செய்துள்ளது(பதிவு எண்.2106/2010)

  கிராம நத்தம் சர்வே எண். 115/22ன் உட்பிரிவான 115/82 சர்வே எண் உள்ள கிராம நத்தம் இடத்தில் சட்டத்துக்கு புறம்பாக, விதிமுறைகளை(  ஆர்.டி/6427/2015 தேதி 11.6.2015 மற்றும் 113/2015 தேதி 29.5.2015 அரசாணை மற்றும் சுற்றிக்கையின் படி கிராம நத்தம் இடத்தில் வணிக நோக்கத்தில் கட்டிட கட்ட அனுமதி அளிக்க முடியாது) நகரமைப்பு ஆய்வாளர் தாமரைச் செல்வன், ரேவதி க/பெ அரசக்குமார் யிடமிருந்து  பல இலட்சம் இலஞ்சம் வாங்கிக்கொண்டு வணிக வளாகம் கட்ட அப்ருவல் வழங்கியுள்ளார்.  இந்த அப்ரூவல் தொடர்பாக  அப்போது பூந்தமல்லி நகராட்சி ஆணையராக  இருந்த திருமதி சித்ராவுக்கு பல லட்சம் இலஞ்சம் கொடுத்துள்ளதாக தாமரைச்செல்வன் வெளிப்படையாக கூறி வருகிறார்.

 அரசக்குமாருக்கு சட்ட விரோதமாக கொடுத்த அனுமதி தொடர்பாக உள்ளாட்சி அமைப்புகள் முறை மன்ற நடுவம் விசாரணை நடத்திக்கொண்டு இருக்கிறது.  ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகமும் விசாரணைக்கு எடுத்துக்கொண்டு உள்ளது.

  மக்கள்செய்திமையம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும்  முடிவு செய்துள்ளது.

Comments

comments

About mani bharathi

Check Also

சென்னை மாநகராட்சி… பிரகாஷ் ஐ.ஏ.எயின் துக்ளக் நிர்வாகம்.. செயற்பொறியாளர் பானுகுமாரின்- அதிகாரமையத்தின் அட்டகாசம்..

சென்னை மாநகராட்சி மண்டலம் -11ல் 4.11.2020 மாலை 4.30மணிக்கு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு அதிகாரிகள் நடத்திய ரெய்டில் செயற்பொறியாளர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *