Breaking News
Home / பிற செய்திகள் / சென்னை மாநகராட்சி… SUMEET FACILITIES LTD நிறுவனத்திடம்- விலை போன பிரகாஷ் ஐ.ஏ.எஸ்.. விளையாட்டுத் திடல் ஆக்ரமிப்பு..

சென்னை மாநகராட்சி… SUMEET FACILITIES LTD நிறுவனத்திடம்- விலை போன பிரகாஷ் ஐ.ஏ.எஸ்.. விளையாட்டுத் திடல் ஆக்ரமிப்பு..

சென்னை மாநகராட்சியில் குப்பைகளை அகற்ற டெண்டர்  எடுத்த URBASER SA – SUMEET FACILITIES LTD நிறுவனம் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஐ.ஏ.எஸ், தலைமைப் பொறியாளர் நந்தகுமார், தலைமைப் பொறியாளர் (திடக்கழிவு மேலாண்மை) மகேசன் மூவர் அணியை விலைக்கு வாங்கி விட்டதால், மண்டலம்-10ல் உள்ள சோமசுந்தரம் விளையாட்டுத் திடலை  ஆக்ரமித்துவிட்டது.

     சென்னை மாநகராட்சியின் தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் ஆகிய ஏழு மண்டலங்களில் உள்ள 92 வார்டுகளில் குப்பைகளை அகற்றும் பணி(திடக்கழிவு மேலாண்மை) ஸ்பெயின், இந்தியா கூட்டு நிறுவனமான URBASER SA  and SUMEET FACILITIES LTD PUNE என்ற நிறுவனத்திடம்  டெண்டர் டிரான்பரன்சி விதிமுறைகளை மீறி, சட்டத்துக்கு புறம்பாக,ரூ447கோடிக்கு (மண்டலம் 11,12,14,&15க்கு குப்பைகளை அகற்ற ரூ172.50கோடி(Package –II) & மண்டலம் 9,10,&13(Package –V) குப்பைகளை அகற்றரூ274.50 கோடி) ஒப்பந்தம் கொடுக்கப்பட்டுள்ளது.

 URBASER SA – SUMEET FACILITIES LTD நிறுவனம் 3000 பேட்டரி வாகனங்கள், குப்பை தொட்டிகள், குப்பை லாரிகல்ளை போதிய இட வசதியை  இல்லாமல்  கொள்முதல் செய்து குவித்துள்ளது.

மந்தைவெளியில் மாநகராட்சியில் லாரி டெப்போவை ஆக்ரமித்த URBASER SA – SUMEET FACILITIES LTD நிறுவனம். மண்டலம் -10ல் உள்ள சோமசுந்தரம்  விளையாட்டு திடலை ஆக்ரமித்து குப்பை வண்டிகளையும், குப்பை தொட்டிகளையும் குவித்துள்ளது.

 விளையாட்டுத் திடலை  ஆக்ரமிக்க அனுமதி அளித்த பிரகாஷ் ஐ.ஏ.எஸ், தலைமைப் பொறியாளர் நந்தகுமார், தலைமைப் பொறியாளர் மகேசன் மூவர்  மீது நடவடிக்கை எடுப்பது யார்? அதிகாரமையத்தில் வாக்களித்த மக்களை ஏமாற்றும் இந்த அதிகாரிகளுக்கு மனசாட்சி இல்லையா?

Comments

comments

About mani bharathi

Check Also

சென்னை மாநகராட்சி… பிரகாஷ் ஐ.ஏ.எயின் துக்ளக் நிர்வாகம்.. செயற்பொறியாளர் பானுகுமாரின்- அதிகாரமையத்தின் அட்டகாசம்..

சென்னை மாநகராட்சி மண்டலம் -11ல் 4.11.2020 மாலை 4.30மணிக்கு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு அதிகாரிகள் நடத்திய ரெய்டில் செயற்பொறியாளர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *