
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் தாசிதாராக பணியாற்றிய போது, அரசூர் கிராமத்தில் தர்மராஜா கோயில் நிலத்துக்கு போலி பட்டா வழங்கிய மணிகண்டன், ஆவடி நத்தம் தாசில்தாராக மாறுதல் பெற்று பணியில் சேர்ந்தார். ஆவடி நத்தம் தாசில்தார் அலுவலகத்தை மீண்டும் புரோக்கர்கள் பிடியில் சிக்க வைத்துவிட்டார் மோசடி தாசில்தார் மணிகண்டன். ஆவடி நத்தம் தாசில்தார் அலுவலகத்தின் இலஞ்ச பட்டியலே சில நாட்களுக்கு முன்பு வெளியாகி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டத்தில் அரசூர் கிராமத்தில் உள்ள அருள்மிகு தர்மராஜா கோயில் நிலம் சர்வே எண்.43/1- 7.10ஏர்(பட்டா எண்.143) மற்றும் 43ல் -11.50ஏர்(பட்டா எண்.143) ஆகிய சர்வே எண்களில் நிலம் தர்மராஜா கோயிலுக்கு சொந்தமானதுதான்.
பொன்னேரி வட்டாட்சியராக பணியாற்றிய மணிகண்டன், ஆவடி நத்தம் தாசில்தாரா மாறுதல் செய்யப்பட்ட போது, தர்மராஜா கோயிலுக்கு சொந்தமான சர்வே எண்.43/3- 1.20ஏர் நிலத்தை குணசெல்வத்துக்கும்(பட்டா எண். 398), சர்வே எண்.43/2-1.05ஏர் நிலத்தை குணசெல்வம் மகன் அரவிந்துக்கும்(பட்டா எண்.397)சர்வே எண்.43/4- 2.15ஏர் நிலத்தை ஏகாம்பரத்துக்கும்(பட்டா எண்.399) பட்டா கொடுத்துள்ளார். அதாவது மூன்று பேர் பெயரில் போலி பட்டா கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தி மக்கள்செய்திமையத்தில் வெளியானவுடன், நம்மிடம் பேசிய தாசில்தார் மணிகண்டன், அரசூர் தர்மராஜா கோயிலே கிராம நத்தம் நிலத்தில்தான் உள்ளது. கோயிலே கிராம நத்தத்தில் இருக்கும் போது, வீடு கட்ட பட்டா கொடுக்க கூடாதா என்று கேள்வி எழுப்பினார்.
நாம் தர்மராஜா கோயில் கிராம நத்தம் நிலத்தில் இல்லை. தர்மராஜா கோயில் நிலம் சர்வே எண்.43ல் உட்பிரிவுகளை போலியாக ஏற்படுத்தி, போலி பட்டா கொடுக்கப்பட்டுள்ளது என்ற நாம் கூறியதை தாசில்தார் மணிகண்டன் காதில் வாங்கிக்கொள்ளாமல், பட்டா கொடுத்தவர்கள் கட்டியுள்ள வீடுகளுக்கு கதவு கூட இல்லை என்று இஷ்டத்துக்கு பேசினார்.
மக்கள்செய்திமையத்துக்கு பொன்னேரி அரசூர் ”அ” பதிவேட்டின் நகல் கிடைத்தது. ”அ” பதிவேட்டின் நகலில் சர்வே எண்.43ல் 11.50.ஏர் அருள்மிகு தர்மராஜா கோயிலுக்கு சொந்தமானது என்று தெளிவாக உள்ளது. சர்வே எண்.43ன் உட்பிரிவுகள் எதுவும் இல்லை.

“அ” பதிவேட்டில் சர்வே எண்.43ல் உட் பிரிவுகள் எதுவும் இல்லாத போது, சர்வே எண்.43/3- 1.20ஏர் நிலத்தை குணசெல்வத்துக்கும்(பட்டா எண். 398), சர்வே எண்.43/2-1.05ஏர் நிலத்தை குணசெல்வம் மகன் அரவிந்துக்கும்(பட்டா எண்.397)சர்வே எண்.43/4- 2.15ஏர் நிலத்தை ஏகாம்பரத்துக்கும்(பட்டா எண்.399) பட்டா கொடுத்தது எப்படி?
இலஞ்சம் வாங்கிக்கொண்டு, தர்மராஜா கோயில் நிலம் சர்வே எண்.43க்கு உட்பிரிவுகளை போலியாக ஏற்படுத்தி, தாசில்தார் மணிகண்டன் போலி பட்டா கொடுத்துள்ளார்.
மோசடி தாசில்தார் மணிகண்டனை உடனடியாக சஸ்பெண்ட் செய்துவிட்டு, தர்மராஜா கோயில் நிலத்தை மீட்க மாவட்ட ஆட்சித் தலைவர் பொன்னையா ஐ.ஏ.எஸ் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்..