Breaking News
Home / பிற செய்திகள் / தமிழ்நாடு – தேசிய குழந்தைகள் ஆணைய உறுப்பினர்- Dr.R.G.ஆனந்த் உயிருக்கு ஆபத்து…

தமிழ்நாடு – தேசிய குழந்தைகள் ஆணைய உறுப்பினர்- Dr.R.G.ஆனந்த் உயிருக்கு ஆபத்து…

தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினராக 2 ஆண்டுகளுக்கு முன் 2018 ஆகஸ்ட் மாதம் பொறுப்பேற்று இந்தியா முழுவதும் 20 மாநிலங்களுக்கு மேல் இடைவிடா சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும்  முதல் நிலை மருத்துவர் Dr.R.G.ஆனந்த் MD, புதுக்கோட்டை மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட சென்னை  வசித்து வருபவர்.இப்பொறுப்பில்  இருக்கும் முதல் தமிழர் என்னும் பெருமைக்குரியர்.

  குழந்தை கடத்தல், குழந்தை திருமணம், போதை பொருட்கள் தடுப்பு, 100 மாவட்டங்கள் மேல் சிறப்பு அமர்வு – முதற்கட்டமாக பின் தங்கிய மாவட்டங்களை சார்ந்த ஏழை குழந்தைகளின் கல்வி உள்ளிட்ட வாழ்வாதார உதவி, கொரோனா கால தடுப்பு பணிகள் என இதுவரை 8000 மேற்பட்ட குழந்தைகளுக்கு உதவி, பாதுகாப்பு உள்ளிட்ட வாழ்வாதார வசதிகளை ஆணைய உறுப்பினர் என்பதை தாண்டி தனது சொந்த முயற்சியில் குழந்தைகளின் நலன் கருதி செய்து வருபவர்

  தனது அதிரடி நடவடிக்கைகளால் மத்திய, மாநில அரசுகளிடம் மட்டுமின்றி பொதுமக்களிடமும் நன்மதிப்பை பெற்று வரும் Dr.R.G.ஆனந்த் அவர்கள் குழந்தைகளுக்கு எதிரான செயல்களில் ஈடுபடும் நிறுவனங்கள், இயக்கங்கள், அரசியல் அமைப்புகள், பிரபலங்கள் என யாராக இருந்தாலும் எந்த வித சிறு தயக்கமுமின்றி உடனடி நடவடிக்கை எடுப்பவர் Dr.R.G.ஆனந்த்.

   இதனால் இவருக்கு பல தருணங்களில் பல மிரட்டல்கள் அவ்வப்போது வந்துகொண்டு இருக்கும் . ஆனால் அவை அனைத்தையும் எளிதில் கடந்து தனது பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவார் Dr.R.G.ஆனந்த் என்பது அவருடன் நெருங்கி பழகும் அனைவருக்கும் நன்கு தெரியும்.

 ஆனால் அவரது உயிருக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் வருவது அவரது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் மிகவும் கவலை அளிப்பதாக தெரிகிறது, தமிழக காவல்துறையினர் அவரது பாதுகாப்பை உறுதி செய்ய வழிவகை செய்வார்கள் என்ற நம்பிக்கையில் அவரது நலன் விரும்பிகள் இருப்பதாகவும் தெரிகிறது.

  குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய தன்னலமில்லாமல் உழைத்து வரும் Dr.R.G.ஆனந்த் உயிருக்கு பாதுகாப்பை உறுதி செய்யும் கடமை நம் அனைவருக்கும் உண்டு, குறிப்பாக நமது பிள்ளைகளுக்காக உழைத்து வருபவரை காக்கும் கடமை தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநில காவல் துறையினருக்கும் உண்டு.

இது தொடர்பாக Dr.R.G.ஆனந்த் கூறுகையில்  மத்திய அரசின் திட்டங்களை, தொலை நோக்கு பார்வைகளையும் தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களுக்கும் கொண்டு சேர்ப்பதே எனது முதன்மை பணி, குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்யும் இந்த யுத்தத்தில் எத்தனை மிரட்டல்கள் வந்தாலும் அதை கண்டுக்கொள்ள போவதில்லை என மிகவும் அழுத்தமாக Dr.R.G.ஆனந்த்  தெரிவித்தார்.*

தமிழகத்தை சேர்ந்த தேசிய குழந்தைகள்  ஆணைய உறுப்பினர் Dr.R.G.ஆனந்துக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று  தமிழக காவல்துறை இயக்குநர் ஜே. கே திரிபாதி ஐ.பி.எஸ் அவர்களை மக்கள்செய்திமையம் கேட்டுக்கொள்கிறது.

Comments

comments

About mani bharathi

Check Also

ஊரக வளர்ச்சித்துறை… முத்துமீனாள், வீரபத்ரன், விஜயலட்சுமி-கூட்டணியின் ஊழல் ஆட்டம்…

  ஊரக வளர்ச்சி ஆணையரகத்தின் கூடுதல் இயக்குநராக இருக்கும் முத்துமீனாள்(ராம்மோகன்ராவ் ஐ.ஏ.எஸ்(ஒய்வு) தம்பி மனைவி), உள்ளாட்சித்துறை அமைச்சரின் உதவியாளராக பணியாற்றிய …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *