Breaking News
Home / பிற செய்திகள் / பேரூராட்சிகளின் இயக்குநர் சு.பழனிசாமி ஐ.ஏ.எஸ்க்கு- ரூ20 இலட்சம் இலஞ்சம்- பிரேமா வாக்குமூலம்…

பேரூராட்சிகளின் இயக்குநர் சு.பழனிசாமி ஐ.ஏ.எஸ்க்கு- ரூ20 இலட்சம் இலஞ்சம்- பிரேமா வாக்குமூலம்…

 தமிழக அரசின் பேரூராட்சிகளின் இயக்குநர் சு.பழனிசாமி ஐ.ஏ.எஸ், வருமானத்துக்கு அதிகமாக சொத்து வழக்கில் சிக்கியுள்ள வாலாஜாபாத் பேரூராட்சி திருமதி வ.பிரேமா மீது நடவடிக்கை எடுக்கவில்லை. பிரேமா பில்லி, சூனியம் வைத்துவிட்டதால் எனக்கு உடல் நிலை சரியில்லாமல் போய்விட்டது என்று டூபாக்கூர் கதை சொல்லி, சு.பழனிசாமி ஐ.ஏ.எஸ் பிரேமாவை காப்பாற்றி வருகிறார்.

   திருமழிசை பேரூராட்சியில் செயல் அலுவலராக இருந்த பிரேமா, சட்டத்துக்கு புறம்பாக, விதிமுறைகளை Chennai properties உள்ளிட்ட பல நிறுவனங்களுக்கு இலட்சக்கணக்கில் இலஞ்சம் வாங்கிக்கொண்டு அப்ரூவல் கொடுத்த விவகாரத்தில் சிக்கி, கடலூர் மாவட்ட திட்டக்குடி பேரூராட்சிக்கு 16.7.2020ல்(ந.க.எண்.201/2020/அ1) மாறுதல் செய்யப்பட்டார்.

 திட்டக்குடியில் போய் நான் பணியாற்றுவதா என்று  ரூ20 இலட்சத்தை  எடுத்துக்கொண்டு, பேரூராட்சிகள் இயக்குநரை சந்தித்தார். 34 நாட்களில்  20.8.2020ல்(ந.க.எண்.201/2020/அ1)திட்டக்குடி பேரூராட்சியிலிருந்து காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பேரூராட்சிக்கு மாறுதல் பெற்றார் திருமதி பிரேமா..

  வாலாஜாபாத் பேரூராட்சியில் சரியான வருமானம் இல்லை. போலி பில் போடமுடியவில்லை, ரூ20 இலட்சம் இலஞ்சம் கொடுத்துவிட்டு, கொரோனா பெயரில் ரூ5 இலட்சத்துக்கு போலி பில் போட முடிந்தது  என்று வெளிப்படையாகவே காஞ்சிபுரம் பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் அலுவலகத்தில் புலம்பினார்.

  சிறப்பு நிலை பேரூராட்சி செயல் அலுவலர் பதவி உயர்வு பெற்றால், இரண்டு வருடங்களில் உதவி இயக்குநர் பதவி உயர்வு கிடைக்கும் என்று பிரேமாவுக்கு சிலர் ஆலோசனை சொன்னார்கள். இதை தொடர்ந்து பதவி உயர்வு தொடர்பாக இயக்குநர் பழனிசாமி ஐ.ஏ.எஸ்யை பார்த்து பேசினார் பிரேமா.

 மக்கள்செய்திமையம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்தில் கொடுத்த புகாரை, ஒண்ணும் இல்லாமல் பண்ணிவிட்டேன், விஜிலென்ஸ் அதிகாரிகளுக்கு ரூ5 இலட்சம் கொடுத்து விலைக்கு வாங்கிவிட்டேன். இயக்குநர் பழனிசாமியிடம் பதவி உயர்வுக்காக ரூ20 இலட்சம் இலஞ்சம் கொடுத்துள்ளேன். தீபாவளி முடிந்தவுடன் சிறப்பு நிலை பேரூராட்சி செயல் அலுவலராக பதவி உயர்வு கிடைத்துவிடும் என்று பேரூராட்சிகளின் இயக்குநர் அலுவலகத்தின் அதிகாரிகள், ஊழியர்களுக்கு  ரூ2,000, ரூ3000 என தீபாவளிக்கு பணத்தை அள்ளி வீசியபடி பிரேமா அலட்சியமாக, வெளிப்படையாகவே கூறினார்.

 சில அதிகாரிகள் அதிர்ச்சியாகி என்னம்மா.. இப்படி இயக்குநருக்கு ரூ20 இலட்சம் கொடுத்தேன், விஜிலென்ஸ் அதிகாரிகளுக்கு ரூ5 இலட்சம் இலஞ்சம் கொடுத்தேன் என்று பேசுவது சரியா என்று கேட்டார்கள்..சிரித்துக்கொண்டே பிரேமா, உண்மைதானே சொன்னனேன் என்றார்..

  ரூ20 இலட்சம் இலஞ்சம் கொடுத்த பிரேமாவுக்கு சிறப்பு நிலை பேரூராட்சி செயல் அலுவலர் பதவி உயர்வு கோப்பு அதிவேகமாக நகர்ந்துக்கொண்டு இருக்கிறது.

  இலஞ்சம் கொடுத்து அதிகாரிகளை விலைக்கு வாங்கிவிட்டேன் என்று வெளிப்படையாக பேசும் வாலாஜாபாத் செயல் அலுவலர் பிரேமாவை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று  மக்கள்செய்திமையமும், வழக்கு தொடர முடிவு செய்துள்ளது..

பாக்ஸ்…

             அமைச்சர் அலுவலகத்துக்கு மாமூல் வாங்கி கொடுக்கும் நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன், பூந்தமல்லி நகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்..

Comments

comments

About mani bharathi

Check Also

பல்லவபுரம் நகராட்சி நகரமைப்பு அதிகாரி- பூங்கா திருடன் மாறனின்- மனசாட்சி பயோ-டேட்டா…

   பல்லவபுரம் நகராட்சியில் 05.11.2020ல் நடந்த விஜிலென்ஸ் ரெய்டில் சிக்கிய நகரமைப்பு அதிகாரி வெ.மாறன் மக்கள் செய்திமையம் எடுத்த அதிரடி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *