
சென்னை மாநகராட்சியில் பண மழையில் பெய்யும் மண்டலம் -5யின் செயற் பொறியாளர் சனிக் கிழமை கழுகு புகழ் லாரன்ஸ், உதவி செயற் பொறியாளர் , அலுவலகத்தையே விபச்சார விடுதி மாற்றி சிக்கி, காப்பாற்றப்பட்ட ஜெயராமன் இருவரும் போடும் ஊழல் ஆட்டம் தாங்கமுடியவில்லை.
உதவி செயற் பொறியாளர் ஜெயராமன், இனி அதிமுக ஆட்சி வராது என்று திமுகவுக்கு மாநகராட்சியில் நடக்கும் ஊழல்கள், ஊழல் கோப்புகளை திமுக எம்.எல்.ஏ. சேகர்பாபு மூலம் திமுக தலைமைக்கு கொடுத்து, தன் ஊழல்களை மறைத்து, தன்னை காப்பாற்றிக்கொள்ள முயற்சி செய்து வருகிறார்.
சனிக்கிழமை கழுகு புகழ் லாரன்ஸ், ராஜேஷ்லகானி ஐ.ஏ.எஸ்யை ஜாதி, மதம் பெயரை வைத்து மிரட்டினார். தன் மனைவி பெயரில் இடம் வாங்கி, ரூ2கோடி மதிப்பில் அதி நவீன பங்களா கட்டிவருகிறார். ஆனால் மாநகராட்சியில் வீட்டுமனையுடன், கட்டுமான பணியும் சேர்த்து அதிகபட்சம் ரூ60 இலட்சம் மதிப்பு என்று சென்னை மாநகராட்சியில் அனுமதி பெற்றுள்ளார்..
தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005ல் வீடு கட்ட அனுமதி கொடுக்கப்பட்ட உத்தரவின் நகல் கேட்டால், சனிக்கிழமை கழுகு புகழ் லாரன்ஸ்யே 8(1)(J)யில் வழங்க வேண்டியதில்லை தகவல் அளிக்கிறார்.


சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஐ.ஏ.எஸ், திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த போது, அரசு வீட்டுமனை ஒதுக்கீடுக்கு, தானே யோக்கியர் என்று தனக்கு தானே சான்றிதழில் அளித்துக்கொண்டார். அதே பாணியில் சனிக் கிழமை கழுகு பதில் அளித்துள்ளது.
ரூ2கோடி மதிப்புள்ள வீட்டுக்கு, ரூ60 இலட்சத்துக்கு அனுமதி வாங்கியிருப்பதால் இப்படிதான் பதில் சொல்லுவார்… தன்னைப்பற்றி கேட்டு இருப்பதால், மேல்முறையீட்டு அலுவலருக்கு அனுப்பி இருக்க வேண்டும்.
சனிக் கிழமை கழுகு லாரன்ஸ், பலான புகழ் ஜெயராமனுக்கும் கூட்டணி அமைத்து, போலியான எஸ்டிமேட் தயாரித்து, போலியான லட்டர் பேடு ஒப்பந்தகாரர்கள் பெயரில் எம்.புத்தகம் எழுதி கோடிக்கணக்கில் கொள்ளையடித்துக்கொண்டு இருக்கிறார்கள்.
தலைமைப் பொறியாளர் நந்தகுமார் மூலம் அமைச்சர் அலுவலகத்துக்கு பங்கு கொடுத்துவிடுவதால், இருவரும் போடும் ஊழல் ஆட்டம் எல்லை மீறி போய்க்கொண்டு இருக்கிறது..
2015-16ம் ஆண்டில் ஆர்கே நகர் இடைத் தேர்தலுக்காக முனிசிபல் நிதியிலிருந்து ரூ8,29,185(கணக்கு குறியீட்டு எண்.460-50.0119) முன் பணமாக எடுக்கப்பட்டது. இன்று வரை ரூ.8.29இலட்சத்துக்கு கணக்கு வரவில்லையே.. சனிக்கிழமை கழுகு பதில் சொல்லுவாரா?
பி.பி.எல், ஏர்டெல், ஏர்செல், பி.எஸ்.என்.எல், வோடோபோன், டாடா டொக்கோமோ போன்ற செல்போன் நிறுவனங்களின் செல்போன் டவருக்கு சொத்து வரி ரூ4,44,60,500/-(ரூ4.44கோடி) ஏன் வசூலிக்கவில்லை. சனிக்கிழமை கழுகு விளக்கம் அளிப்பாரா?
சனிக்கிழமை கழுகு புகழ் லாரன்ஸ் மற்றும் பலான விவகாரம் புகழ் ஜெயராமன் இருவரையும் மண்டலம் -5லிருந்து மாற்றாதவரை மண்டலம் -5ல் இலஞ்ச பண மழையில் குளித்துக்கொண்டுதான் இருப்பார்கள்….மக்கள் அடிப்படை வசதி கிடைக்காமல், தவித்துக்கொண்டுதான் இருப்பார்கள்..
சனிக்கிழமை கழுகு என்ன என்று தெரியவில்லையா.. பலான விவகாரம் பற்றி தெரியவில்லை.யா…பிறகு விரிவாக பார்ப்போம்..