
சென்னை மாநகராட்சிக்கு என்று ஜெகதீஸ்வரன் தலைமையில் விஜிலென்ஸ் அதிகாரிகள் குழு உள்ளது. இந்த விஜிலென்ஸ் குழு உள்ள விஜிலென்ஸ் அதிகாரிகளே மாநகராட்சி அதிகாரிகள் மீது மொட்டை பெட்டிசன் போட்டு, அதை தாங்களே விசாரணை என்ற பெயரில் மாமூல் வாங்கிக்கொண்டு புகாரை மூடிவிடுவது வழக்கம்..
சென்னை மாநகராட்சி மண்டலம்-11 வளசரவாக்கத்தில் அலுவலகத்தில் விஜிலென்ஸ் கூடுதல் கண்காணிப்பாளர் லாவண்யா தலைமையில் அதிரடியாக ரெய்டு நடத்தினார்கள். செயற்பொறியாளர் பானுகுமார், செயற் பொறியாளர் ராதாகிருஷ்ணன் இருவரும் பொலிரோ ஜீப்பில்(TN 04 AL 8562) பின் இருக்கை உட்கார்ந்த இருந்தார்கள். பின் இருக்கையின் அடியில் கொத்தாக பணம் கிடந்தது. அதில் ரூ53200/- இருந்தது. எங்களுக்கு இந்த பணம் குறித்து தெரியாது என்று வாக்குமூலம் கொடுத்தார்கள்.
இளநிலை உதவியாளர் அருண், கண்காணிப்பாளர் முருகேஷ் இருக்கைகளுக்கு பின்புறம் இருந்த மரத்தினால் ஆன பீரோவின் மேல்பக்கத்தில் ஒரு மணி பர்ஸ் கிடந்தது. அதை கைப்பற்றிய திறந்த பார்த்த போது செயற்பொறியாளர் பானுகுமார் ஆதார் அடையாள அட்டை(2044 0436 7276), ஒட்டுநர் உரிமம் மற்றும் பணம் ரூ5910 இருந்தது.
இந்த மணி பர்ஸ் தொடர்பாக பானுகுமாரிடம் விஜிலென்ஸ் அதிகாரிகள் கேட்ட போது, நான் இன்று பாஸ் கொண்டு வரவில்லை என்று கூறினார். பானுகுமார் அறைக்கு வெளியே நின்றுக்கொண்டு இருந்த பாபு, நான் உதவி பொறியாளராக இருக்கிறேன் என்றார். பாபுவிடம் இருந்து ரூ7000/- பறிமுதல் செய்யப்பட்டது. ரூ7000க்கு பதில் சொல்ல முடியாமல் முன்னுக்கு, பின் முரணாக பதில் சொன்னார் பாபு.
இப்படி இலஞ்சம் பணம் ரூ1,27,610 கைப்பற்றப்பட்டது. மாலை 4.30க்கு தொடங்கிய விஜிலென்ஸ் ரெய்டு இரவு 8மணி வரை நீடித்தது.
விஜிலென்ஸ் அதிகாரிகள் செயற் பொறியாளர் பானுகுமார், செயற் பொறியாளர் ராதாகிருஷ்ணன், உதவி பொறியாளர் பாபு உள்ளிட்ட ஆறு பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
விஜிலென்ஸ் அதிகாரிகளிடம் 2015-16ம் ஆண்டில் வெள்ள நிவாரண பணிகளுக்கு அட்வான்ஸ் கொடுக்கப்பட்ட ரூ3,52,23,016(ரூ3..52கோடி) பணத்துக்கு இன்னும் கணக்கு கொடுக்காமல், இருக்கும் கோப்புகள் உள்ளிட்ட பல கோப்புகள் சிக்கியுள்ளது.


அதே போல் வளசரவாக்கம் மண்டலத்தில் உள்ள 26 அம்மா உணவகங்களுக்கு கொள்முதல் செய்யப்பட்ட ரசீது இயந்திரங்கள் வேலை செய்யவே இல்லை இது தொடர்பான கோப்பு விஜிலென்ஸ் அதிகாரிகளிடம் சிக்கியுள்ளது..
செயற்பொறியாளர் பானுகுமார், செயற் பொறியாளர் ராதாகிருஷ்ணன், உதவி பொறியாளர் பாபு உள்ளிட்டவர்கள் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தும், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஐ.ஏ.எஸ் மூவரையும் வளசரவாக்கத்திலிருந்து மாற்றவில்லை.
பானுகுமாரும், ராதாகிருஷ்ணனும் அமைச்சர் பெஞ்சுமினை சந்தித்து, தங்களை காப்பாற்றும்படி கெஞ்சினார்கள். அமைச்சர் பெஞ்சுமின் மதுரவாயல் தொகுதி எம்.எல்.ஏ என்பதால் வாங்கிய இலஞ்சத்தில் கமிசன் கொடுத்தீர்கள்.. இப்படி விஜிலென்ஸில் சிக்கி கொண்டால் நான் காப்பாற்ற முடியுமா என்று கூறி விரட்டியடித்துவிட்டார்.
கடைசியில் தலைமைப் பொறியாளர் நந்தகுமாரிடம் சரண்டராகிவிட்டார்கள்.. தலைமைப் பொறியாளர் நந்தகுமார், பிரகாஷ் ஐ.ஏ.எஸ் மூலம் தற்காலிகமாக காப்பாற்றி வருகிறார்..
ஆணையர் பிரகாஷ் ஐ.ஏ.எஸ், பானுகுமார், ராதாகிருஷ்ணன், பாபு மூவரை மாற்ற முடியாது என்று வெளிப்படையாகவே சொல்லி வருகிறார்…
விஜிலென்ஸ் அதிகாரிகளின் அடுத்த நடவடிக்கை என்ன… என்று பார்ப்போம்..