Breaking News
Home / பிற செய்திகள் / நிருபர் மோசஸ் கொலை.. சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்படுமா?- அப்பு என்கிற ஆசை தம்பி எங்கே?…

நிருபர் மோசஸ் கொலை.. சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்படுமா?- அப்பு என்கிற ஆசை தம்பி எங்கே?…

  காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் காவல் நிலைய எல்லையில், கஞ்சா மாபியா கும்பலால் தமிழன் டிவி நிருபர் மோசஸ் கொலை செய்யப்பட்டார்.   உண்மை குற்றவாளியான அப்பு என்கிற ஆசைதம்பியை காவல்துறையினர் கைது செய்யாமல் நவமணி, எலி அப்பு என்கிற விக்னேஷ், வெங்கடேசன் என்கிற அட்டை மற்றும் சிறுவன் நான்கு பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

  மோசஸை கொலை செய்ய திட்டம்  போட்ட  நடுவீரப்பட்டு அப்பு என்கிற ஆசைதம்பிதான் சோமங்கலம் கஞ்சா மாபியா கும்பல், கூலிப்படை கும்பலின் தலைவன்.

  மோசஸை கொலை செய்யும் முடிவெடுத்த அப்பு என்கிற ஆசைதம்பி, நவமணி, வெங்கடேசன் என்கிற அட்டை இருவரிடம் கொலை செய்யும் பொறுப்பை ஒப்படைத்தான். இதில் எலி அப்பு என்கிற விக்னேஷ், சிறுவன் இருவரும் டம்மி குற்றவாளிகள்.

  சோமங்கலம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பாஸ்கரன் பணியாற்றிய போதுதான், சோமங்கலம் கஞ்சா மாபியா கும்பல், கூலிப்படை கும்பலின் தலைநகரமாக மாறியது. பாஸ்கரன் ஒய்வு பெற்ற நிலையிலும், இன்னும் மாமூல் வாங்கிக்கொண்டு இருப்பதுதான் வேடிக்கை..

 அப்பு என்கிற ஆசைதம்பி மோசஸை கொலை செய்ய திட்டம் போட்டவுடன் லீவில் இருக்கும் சோமங்கலம் காவல் நிலைய சிறப்பு எஸ்.ஐ மணி மூலம்,  உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட காவல் நிலைய போலீசாரின் ஒப்புதல் பெறப்பட்டதாக தெரிகிறது. இந்த தகவலை நம்மால் உறுதி செய்ய முடியவில்லை.

  அப்பு என்கிற ஆசைதம்பி, நிருபர் மோசஸை கொலை செய்ய, நியமித்த நவமணி, வெங்கடேசன் என்கிற அட்டை இருவரும், இரவு காவலில் இருக்கும் போலீசாரை சந்தித்து பேசியுள்ளதாக, உறுதி செய்யப்படாத தகவலாக  உள்ளது.

  நிருபர் மோசஸை வீட்டிலிருந்து வெளியே அழைத்து வந்தது எலி அப்பு என்கிற விக்னேஷ், சிறிது தூரத்தில் நவமணி, வெங்கடேசன் என்கிற அட்டை, சிறுவன் மூவரும் காத்திருந்து நிருபர் மோசஸை கொலை செய்தார்கள்.

  நிருபர் மோசஸ் கொலை, சோமங்கலம் காவல்துறை அதிகாரிகளுக்கு தெரிந்தே, அப்பு என்கிற ஆசைதம்பியால் திட்டமிட்டு நடத்தப்பட்டது என்பதில் சந்தேகம் இல்லை.

   சோமங்கலம், மணிமங்கலம் ஆகிய இரண்டு காவல் நிலையத்திலும் காவல் ஆய்வாளர் பதவி காலியாக உள்ளது. ஒரகடம் காவல் நிலைய பெண் ஆய்வாளர் தான், மூன்று காவல் நிலையங்களுக்கு ஆய்வாளர் என்ற நிலையில் தான் காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை நிர்வாகம் செயல்பட்டு வந்துள்ளது.

 நிருபர் மோசஸ் கொலையில் முக்கிய குற்றவாளியாக அப்பு என்கிற ஆசைதம்பி சேர்க்கப்பட வேண்டும். மேலும் மோசஸ் கொலை செய்யப்படுப்போகிறார் என்ற தகவல் தெரிந்தும்,  நடவடிக்கை எடுக்காத சோமங்கலம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் உள்ளிட்ட போலீசார் அனைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சோமங்கலம் காவல் நிலையத்தில் பணியாற்றும் அனைத்து  போலீசாரும் கூண்டோடு மாற்றப்பட வேண்டும்.

   நிருபர் மோசஸ் கொலையை சி.பி.சி.ஐ.டி  அல்லது சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டால், தென் மாநிலங்களிலிருந்து கஞ்சா சப்ளை செய்யும் மிகப்பெரிய  மாபியா கும்பல் சிக்கும்.

 காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திருமதி சண்முகபிரியா ஐ.பி.எஸ் அவர்களும், டி.ஐ.ஜி சாமுண்டேஸ்வரி ஐ.பி.எஸ் அவர்களும் நிருபர் மோசஸ் கொலையை சி.பி.சி.ஐ.டி அல்லது சி.பி.ஐ விசாரணைக்கு மாற்ற  டி.ஜி.பிக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.

பாக்ஸ்…

 சில மாதங்களுக்கு முன்பு, படப்பை பி.டி.ஒ அலுவலகத்தில், அமைச்சரின் உதவியாளர் என்ற பெயரில் உள்ளாட்சி அமைப்புகளில் அதிகாரமையத்தில் வலம் வரும் டூபாக்கூர் நிருபருக்கும், நிருபர் மோசஸ்க்கும் தகராறு ஏற்பட்டு பஞ்சாய்த்து நடந்தது. படப்பை பி.டி.ஒ அலுவலக அதிகாரிகளும் நிருபர் மோசஸ்க்கு எதிராக செயல்பட்டு வந்தார்கள்.

Comments

comments

About mani bharathi

Check Also

தூத்துக்குடி அமைச்சர் கடம்பூர் ராஜ் அத்துமீறல்.. சட்டத்துக்கு புறம்பான கட்டிடத்தை- திறந்து வைத்த அமைச்சர்…

தூத்துக்குடி  மாவட்டத்தில் ஆளும் அதிமுகவின் பின்னணியில்   சட்டத்துக்கு புறம்பான பல நிகழ்வுகள் தினமும் நடப்பது வாடிக்கையாகிவிட்டது. தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட தன்ராஜ் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *