
திருவள்ளூர் மாவட்டத்தில் கோயில் நிலங்களுக்கு, அரசு நிலங்களுக்கு போலி பட்டா பெற இலட்சக்கணக்கில் இலஞ்சம் கொடுத்து, வருவாய்த்துறை அதிகாரிகளை விலைக்கு வாங்கும் நில மாபியா கும்பல் அதிகாரமையத்தில் வலம் வருகிறது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டத்தில் அரசூர் கிராமத்தில் உள்ள அருள்மிகு தர்மராஜா கோயில் நிலம் சர்வே எண்.43/1- 7.10ஏர்(பட்டா எண்.143) மற்றும் 43ல் -11.50ஏர்(பட்டா எண்.143) உள்ளிட்ட 43/2,43/3 & 43/4 ஆகிய சர்வே எண்களில் நிலம் தர்மராஜா கோயிலுக்கு சொந்தமானதுதான்.


பொன்னேரி வட்டாட்சியராக பணியாற்றிய மணிகண்டன், ஆவடி நத்தம் தாசில்தாரா மாறுதல் செய்யப்பட்ட போது, தர்மராஜா கோயிலுக்கு சொந்தமான சர்வே எண்.43/3- 1.20ஏர் நிலத்தை குணசெல்வத்துக்கும்(பட்டா எண். 398), சர்வே எண்.43/2-1.05ஏர் நிலத்தை குணசெல்வம் மகன் அரவிந்துக்கும்(பட்டா எண்.397)சர்வே எண்.43/4- 2.15ஏர் நிலத்தை ஏகாம்பரத்துக்கும்(பட்டா எண்.399) பட்டா கொடுத்துள்ளார். அதாவது மூன்று பேர் பெயரில் போலி பட்டா கொடுக்கப்பட்டுள்ளது.
குணசெல்வம், அரவிந்த், ஏகாம்பரத்துக்கு தர்மராஜா கோயில் நிலத்துக்கு போலி பட்டா கொடுக்க, பல லட்சம் இலஞ்சம் பணம் கைமாறியுள்ளது. இந்த தர்மராஜா கோயில் நிலம் போலி பட்டா கொடுக்கப்பட்ட விவகாரத்தில் அமைச்சர் பெஞ்சுமினுக்கு தொடர்பு இருப்பதாக, வருவாய்த்துறையில் முணு முணுக்கிறார்கள்..
தாசில்தார் மணிகண்டன், தர்மராஜா கோயில் நிலத்துக்கு போலி பட்டா கொடுத்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிப்பாரா?
அரசூர் தர்மராஜா கோயில் நிலத்துக்கு போலி பட்டா கொடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக மக்கள்செய்திமையம், ஆதாரங்களுடன் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்துக்கும், மாவட்ட ஆட்சித் தலைவர், நில நிர்வாக ஆணையருக்கு புகார் அனுப்பி உள்ளது.
பாக்ஸ்..
திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பொன்னையா ஐ.ஏ.எஸ், அரசூர் தர்மராஜா கோயில் நிலத்துக்கு போலி பட்டா கொடுத்த விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணைக்கு உத்தரவிடுவாரா… நில மாபியா கும்பலுடன் கூட்டணி அமைப்பாரா என்று பார்ப்போம்..