
இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியத்தில் தினைக்குளம் ஊராட்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் வீரராகவ ராவ் ஐ.ஏ.எஸ் மேற்பார்வையில் உலகளவில் பிரசித்தப்பெற்ற கட்டப்பட்ட பாலத்தை பார்த்து அதிர்ச்சியாகி மயக்கம் போட்டு விழுந்துவிட்டால் மக்கள்செய்திமையத்தின் மீது பழிபோடக்கூடாது.. ஜனங்களே…
வீரராகவராவ் ஐ.ஏ.எஸ் பெயரை சொன்னவுடன் நீர் நிலை புறம்போக்கு, சுடுகாடு, மேய்க்கால் புறம்போக்கு, அனாதீனம் நிலம் இப்படி அரசு நிலங்களுக்கு இலஞ்சம் வாங்கிக்கொண்டு பட்டா கொடுத்த புண்ணியவானா என்று திருவள்ளூர் மாவட்ட மக்களிடம் புலம்பல் கேட்டது..
திருவள்ளூர் மாவட்டத்திலிருந்து, மதுரை மாவட்ட ஆட்சித் தலைவராக மாறுதலில் சென்றார். பண மதிப்பிழப்பின் போது, தன்னிடம் உள்ள இலட்சக்கணக்கில் இருந்த ரூ500, ரூ1000 நோட்டுகளை தானே நேரில் சென்று வங்கியில் மாற்றிய சாதனையை மதுரை மக்கள் மறக்கவில்லை.

மதுரை மாவட்டத்திலிருந்து இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவராக மாறுதல் பெற்று பணியாற்றும் வீரராகவராவ் ஐ.ஏ.எஸ், அதானியின் காற்றாலை மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் நிறுவனத்துக்கு ஆல் இன் ஆல்..போதுமா..சாதனை..
இந்த சாதனைகளை விட, இந்தியாவிலேயே பிரசித்தப்பெற்ற அதி நவீன பாலத்தை இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியத்தில் தினைக்குளம் ஊராட்சியில் வீரராகவராவ் ஐ.ஏ.எஸ் மேற்பார்வையில் கட்டப்பட்டுள்ளது.
இப்படி ஒரு பாலத்தை எவனாலையும், இந்தியாவில் இனி கட்ட முடியாது. மழைத் தண்ணீர் நேரடியாக பாலத்தின் ஒட்டைக்குள்ளே போயிடுமாம்..
திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்தில் தினைக்குளம் ஊராட்சியில் கட்டப்பட்ட பாலத்தின் போட்டோவை பார்த்துவிட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ் ஐ.ஏ.எஸ், மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள், திருப்புல்லாணி ஒன்றியத்தின் பி.டி.ஒ உள்ளிட்ட அதிகாரிகளுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் இராமநாதபுரம் மக்களே..ஜனங்களே முடிவு செய்யட்டும்.