Breaking News
Home / பிற செய்திகள் / செய்தித்துறையா…ஊழல் துறையா.. தலைமைச் செயலகம்- பி.ஆர்.ஒ ஷேக் முகமதுவின்- திமிர் பேச்சு-மோசடிகள்..

செய்தித்துறையா…ஊழல் துறையா.. தலைமைச் செயலகம்- பி.ஆர்.ஒ ஷேக் முகமதுவின்- திமிர் பேச்சு-மோசடிகள்..

   ஊழல் திலகம் இயக்குநர் பி.சங்கர் ஐ.ஏ.எஸ்க்கு ஜால்ரா போட்டு, பொழுதை கழித்துக்கொண்டு இருந்த தலைமைச் செயலகத்தின் பி.ஆர்.ஒ ஷேக்முகமதுவின் திமிர் பேச்சும்,மோசடிகளும், புதிய இயக்குநராக பாஸ்கர பாண்டியன் ஐ.ஏ.எஸ்  பொறுப்பேற்றப்பிறகு குறையவில்லை.

செய்தித்துறையா.. ஊழல் துறையா என்று செய்தி வெளியிட்டவுடன்,  மக்கள்செய்திமையத்தை(MAKKALSEITHIMAIYAM NEWS(OPC)PVT LTD) மன்னார் & கம்பெனி என்று கிண்டலாக திமிராக பேசி இருக்கிறார் இரயில்வே பாஸ் மோசடி புகழ் பி.ஆர்.ஒ ஷேக்முகமது..

  அமைச்சர்களின் ஊழல்களை வெளிச்சத்துக்கு கொண்டு வரும் , அமைச்சர்களின், அதிகாரிகளின் ஊழல்களை புத்தகமாக வெளியிடும் மக்கள்செய்திமையத்தை பற்றி கிண்டலாக பேசிய பிறகும் பி.ஆர்.ஒ ஷேக்முகமதுவின் லீலைகளை வெளியிடாமல் இருக்க முடியுமா?

 செய்தியாளர் அங்கீகார அட்டை பெற்று, இரயில்வேயில் 50சதவிகிதம் சலுகை தரும் அடையாள அட்டை வாங்காதவர்கள் பெயரில் மோசடி அடையாள அட்டை ரெடிசெய்து கொடுப்பதுதான் பி.ஆர்.ஒ ஷேக்முகமதுவின் முக்கியமான தொழில்..

 பி.ஆர்.ஒ ஷேக்முகமது, உதவி பி.ஆர்.ஒ இருவரும் SRMU கன்னையாவிடம் சொல்லி, தனக்கு வேண்டியவர்களுக்கு, இலஞ்சம் கொடுப்பவர்கள் எமர்ஜென்சி கோட்டா ரிலீஸ் கொடுப்பது, திருப்தி கோயிலுக்கு பாஸ் வாங்கி கொடுப்பதுதான் முக்கிய பணி..

ஷேக்முகமது படித்து, டி.என்.பி.எஸ்.சி தேர்வு எழுதி பாஸ் செய்து உதவி பி.ஆர்.ஒவாகவில்லை. ஷேக்முகமது தந்தை தமிழ் மகன் உசேன் அதிமுகவின் முக்கிய நிர்வாகியாக இருந்த காரணத்தால், முதல்வராக இருந்த ஜெயலலிதா, செய்த புண்ணியத்தில் ஷேக்முகமதுவுக்கு உதவி பி.ஆர்.ஒ(ஐ) பணி கிடைத்தது.

 சட்டமன்ற கூட்டத்தொடர் நடக்கும் நேரத்தில், மானியகோரிக்கைகள் நடக்கும் நேரத்தில் அமைச்சர் அலுவலகங்களில் நிருபர்களின் பட்டியலை கொடுத்து, ரூ100,200,500 என கவர் வாங்கி தரும் புரோக்கர் பணியை மட்டுமே பி.ஆர்.ஒ ஷேக்முகமது ஒழுங்காக செய்வார்.

 ஷேக் முகமதுவிடம் இலஞ்சம் கொடுத்தால் வாகனங்களுக்கு கொடுக்கப்படும் பிரஸ் ஸ்டிக்கர் கொடுத்துவிடுவார். இப்படிதான்  இலஞ்சம் கொடுத்து பல ரவுடிகள் வாகனங்களின் பிரஸ் ஸ்டிக்கர் வாங்கி வைத்துள்ளார்கள்..

    இப்படி வித விதமான பணிகளுக்கு இலஞ்சம் வாங்கும் பி.ஆர்.ஒ ஷேக்முகமதுவை பாராட்டாமல் இருக்க முடியுமா…

Comments

comments

About mani bharathi

Check Also

தூத்துக்குடி அமைச்சர் கடம்பூர் ராஜ் அத்துமீறல்.. சட்டத்துக்கு புறம்பான கட்டிடத்தை- திறந்து வைத்த அமைச்சர்…

தூத்துக்குடி  மாவட்டத்தில் ஆளும் அதிமுகவின் பின்னணியில்   சட்டத்துக்கு புறம்பான பல நிகழ்வுகள் தினமும் நடப்பது வாடிக்கையாகிவிட்டது. தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட தன்ராஜ் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *