
பல்லவபுரம் நகராட்சியில் பணியாற்றும் நகரமைப்பு அதிகாரி எஸ்.வி.மாறன், 5.11.2020 அன்று நடந்த விஜிலென்ஸ் ரெய்டின் போது, சிக்கினார். மாறனிடமிருந்து ரூ,1,51,500 பறிமுதல் செய்யப்பட்டது. நகரமைப்பு அதிகாரி மாறன், ஆணையர் இருவர் மீதும் வடிவேலு என்பவர் அப்ரூவலுக்கு பணம் கேட்டு மிரட்டுவதாக விஜிலென்ஸில் அளித்த புகாரின் பேரில் விஜிலென்ஸ் ரெய்டு நடந்தது.
06.11.2020 அன்று காலை 10.30மணியளவில் நகரமைப்பு அதிகாரி மாறன் வீட்டில், விஜிலென்ஸ் அதிகாரிகள் அதிரடி நுழைந்து, ரெய்டு நடத்தினார். கோடிக்கணக்கில் மதிப்புள்ள ஆறு சொத்துக்கள் வாங்கிய பதிவு பத்திரங்கள் அடங்கிய ஆவணங்கள் மற்றும் பல லட்சம் பணம், நகைகள் சிக்கியது. மாறன் மனைவி பெயரில் கட்டுமான நிறுவனம் நடத்துவதும் உறுதியாகி உள்ளது. மாறன், மாறன் மனைவி, மகன், மகள் வங்கி கணக்குகளை விஜிலென்ஸ் அதிகாரிகள் முடக்கியுள்ளார்கள். வங்கி லாக்கரிலிருந்த பணம், நகை விவரங்களை விஜிலென்ஸ் அதிகாரிகள் ஆய்வு செய்து உள்ளார்கள்.

5.11.2020ம் தேதி விஜிலென்ஸ் விசாரணைக்கு பிறகு நள்ளிரவு வீட்டுக்கு சென்றவர், மாதா, மாதம் இலஞ்சத்தில் பங்கு கொடுத்த கோவை அதிகாரமையத்திடம் செல்போனில். ஒய்வு பெற ஆறு மாதங்கள்தான் உள்ளது. அதாவது 30.5.2021ல் ஒய்வு பெற வேண்டும் என்னை காப்பாற்றுங்கள் என்று கெஞ்சினார். ஆனால் கோவை அதிகாரமையத்திடமிருந்து சரியான பதில் இல்லையாம்.
விஜிலென்ஸ் அதிகாரிகள், நகரமைப்பு அதிகாரி மாறன் மீது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக வழக்கு பதிவு செய்வதற்கான ஆவணங்கள், விஜிலென்ஸ் அதிகாரிகளிடம் சிக்கியுள்ளது.
பிரைவேட் காரில், ஆணையருடன், எங்கே போனீர்கள் என்ற விஜிலென்ஸ் அதிகாரிகளின் கேள்விக்கு பொழிச்சலூரில் உள்ள வீட்டில் தான் இலஞ்சம் வாங்குவது வழக்கம். இலஞ்சம் வாங்க பொழிச்சலூரில் வீடா என்ற மாறனிடன் மீண்டும் கேட்க, ஆமாம் என்று கூறி உறுதி செய்து உள்ளார். அங்குதான் சென்றோம். விஜிலென்ஸ் ரெய்டு நடப்பது உறுதியானவுடன், பொழிச்சலூர் வீட்டில் இரவு 7மணி வரை இருந்த ஆணையர், பிறகு தான் பிரைவேட் காரில் வீட்டுக்கு சென்றார் என்று மாறன் வாக்குமூலமே கொடுத்துள்ளார்.
விஜிலென்ஸ் அதிகாரிகள் இலஞ்சம் வாங்க தனி வீடா என்று அதிர்ச்சியடைந்தார்கள். செப்டம்பர் 2019ல் நகரமைப்பு அதிகாரியாக பல்லவபுரம் நகராட்சியில் பணியில் சேர்ந்தது முதல் கோவைக்கு விமானம் மூலம் சென்ற வந்த விவரங்களை விஜிலென்ஸ் அதிகாரிகள் சேகரித்துள்ளார்கள்.
நகரமைப்பு அதிகாரி மாறன் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்து வழக்கு பதிவு செய்ய விஜிலென்ஸ் அதிகாரிகள் முடிவு செய்துள்ளார்கள். விரைவில் மாறன் சஸ்பெண்ட் செய்யப்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
பாக்ஸ்..
திருவேற்காடு நகராட்சியில் நடந்த விஜிலென்ஸ் ரெய்டில் சிக்கி கோவில்பட்டி நகராட்சிக்கு மாற்றப்பட்ட நகரமைப்பு அதிகாரி ராஜேந்திரன், நிருபர் பிரேமை திட்டியபடியே, அடிக்க வந்தார். இது தொடர்பான பி.சி.ஆர் வழக்கில் 6.11.2020 விசாரணை நடந்தது. விரைவில் ராஜேந்திரன் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படும் என்று தெரிகிறது.